(Reading time: 5 - 10 minutes)

சிறுகதை - நான் நானாக – ப.கலைச் செல்வி

womanStanding

மிழனின் தன்மானத்தை தக்கவைக்க வாடிவாசல் போராட்டம்.

போராட ஆரம்பிச்சி இன்னைக்கி பதிமூனா நாள், அங்கே, “ஒரு பெண் தனியா நடந்தா, கேலி செய்த அதே இடத்திலே கண்ணியம் காக்கும் காளைகள்!!, பக்கத்தில் படுத்துறங்கும் இருபால் இளைஞர்கள்!! விகர்பமில்லை, எங்கேயும் சுத்தம், குப்பையைக்கூட கேட்டு வாங்கும் நவீன உடையணிந்த இளைஞர்கள். நீலா சொல்ல சொல்ல நானும் அங்கே இருப்பது போல இருந்தது.

ஒரு நாளாவது போலாம்ன்னு பார்த்தா முடியலை. கபிலனும் மருமக வசந்தியும் இன்னும் எழலை. வேலைக்கு போறவங்களுக்கு ஞாயிறு காலை ஒரு வரபிரசாதம். ஆழ்ந்து தூங்கும் அவங்களை எழுப்ப மனசில்லை. பேரன் பரத் ஏழு மணிக்கே எழுந்து வெளியில விளையாடுறான்.

நீலாவுக்கு போன் பண்ணி  நான் வரலைன்னு சொன்னதும், “கமலி,  தினமும் நீ ஏதாவது சாக்கு சொல்லு, கொஞ்சம் உனக்காகவும் நேரம் ஓதுக்குடீ, சரி நாங்க கிளம்புறோம்,” பட்டென வைச்சிட்டா. நா வராத கோவம் அவளுக்கு.

நான், நீலா, காவியா சேர்ந்து கல்லூரியில் எங்க அடிப்படை உரிமைக்காக போராடினோம். நமக்காகவும் தமிழுக்காவும் போராடரது ஒரு சுகம்..

நீலாவுக்கு கவலையில்லை பையன் அமெரிக்காவில், எங்கே, எப்ப வேனா கிளம்பிடுவா. காவியாவும் இரண்டு பொண்ணுங்க கூட அங்கே போன போட்டோ அனுப்புனா. ‘எனக்கு அப்படியா’?, அவரு இறந்த பிறகு எங்கேயும் போறதில்லை, பேரனை பாத்துகரதால கிளம்பமுடியலை.

பேரனுக்கு இட்லி ஊட்டும் போது நிதானமா வந்த வசந்தி "அத்தை, நேத்து ஒரே தலவலி தூங்கல, அதான் எழ முடியல, நீங்க வெளிய போனம்னு சொன்னீங்கல?"

சொல்லிக்கொண்டே போய்ட்டா.

வழக்கம்போல் வருந்தாம வந்த வலியில்லா வார்த்தை.

வசந்தியின் சாமர்த்தியம், ஐஞ்சு வருஷத்திலே என் சொந்தக்காரங்க மட்டும் விட்டுக்கு வர்றதில்ல. நானும் வெளிய எங்கேயும்  சட்டுன்னு போக முடியாது.

பேசி பயனில்லை என்னும் போது மௌனம் சிறந்தது. எல்லாம் என் ஒரே பையன் கபிலனுக்காக .

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ன்னவோ! இன்னைக்கு மனசு சரியில்ல, ’சுருங்கன கபிலோட பேச்சா? துண்டிக்கப்பட்ட தொலைக்காட்சி இணைப்பா? கம்பி இல்லா சுவர் போல இருக்கும் வீடா?.

போன் அழைப்பு சத்தம், காவியாவின் இன்னொரு நம்பர், ஏன் இப்ப கூப்புடுறா  ?

“நான் ஓரு கல்யாணத்துக்கு கார்ல பாண்டி வரை போறேன், இரண்டு நாள் போன் பண்ண மட்டேன்டி”   காலையில சொன்னவ, இப்போ ஏன் பண்றா?

போனை ஆன் பண்ணா அவ பெரிய பொண்ணு, “அத்தை!! அப்பா, அம்மா… கார் மரத்துல மோதி…. அந்த இடத்திலே இரண்டு பேரும் …. பயமாயிருக்கு…. வாங்கத்தை…பீளீஸ்.. ஊம் ..ஊம்..”

“ஐயோ!! கடவுளே!! என்னமா சொல்றே? நல்லா கேட்டியா? சரி..சரி.. அழாதேமா, நானிருக்கேன்.. இப்பவே வீட்டுக்கு வரேன்”

 அழுதுகிட்டே  நீலாவுக்கு போன்ல சொல்லிட்டு, கபிலனை எழுப்பி

“டேய்! கபிலா! கபிலா! எழுந்துரு , ஐயோ !! காவியா கார் மரத்துல மோதி இரண்டு பேரும் இறந்துட்டாங்கடா “

“என்னமா சொல்றீங்க,? எப்படிமா ?பாவம்மா! சின்ன பொண்ணுங்க”

“சீக்கிரம் கிளம்பு, வழியில பேசிக்கலாம், வசந்தி நீயும் ?”.

“இல்லை அத்தை, பரத்துக்கு வயிறு சரியில்லை”சாக்கு, பிரண்டு மருமகன்னு பாக்காம, டெலிவரி அப்போ மக போல எல்லாம் செஞ்சா.

“சரி பாத்துக்கோ, கபிலா,   இருடா துணி எடுத்துக்கிறேன்”.

துணிபையின் கனம் பார்த்து கலவரமான வசந்தி,“இன்னைக்கே வர மாட்டிங்க ??“ குரலை உசத்தி கேட்டா.

“இல்லைமா, அங்கே நெருங்கினவங்க யாரும் பக்கத்தில் இல்லை, 18ம் 16ரும்  வயசு பொண்ணுங்க, பாவம் நாமதானே கூட இருக்கனும். அவரு இறந்தப்ப நா தெம்பாகுரவரை என் கூடவே இருந்தா , இப்ப அவ…”, 

முடிக்கும் முன் கத்தரித்த  வசந்தி, “அப்போ யாரு பரத்தை பார்த்துப்பா? நானும் லீவு போட முடியாது, மாச கடைசி, வேலை அதிகம், யாரோ செத்ததுக்கு..?”

மரித்துவிட்ட மனிதநேயம் ,“ வசந்தீ!!. நிறுத்து,”அடிக் குரலில் நானா?

என்னை தடுத்த கபில், முதல் முறை வெறுத்த பார்வையுடன்,” என்ன பேசற? இந்தநேரத்துல? உன்னால முடியலைன்னா வேலையை விட்டு பார்த்துகோ, இல்லை மாத்தி யோசி, அதைவிட்டு அம்மாவை எதிர்த்தோ, வார்த்தை தடிக்கவோ, ஒருநாளும் விட மாட்டேன், கிளம்புங்க மா “.

காரில் அழுதுகொண்டே இருந்தேன், என் காவியா, இப்போ இல்ல, கனவா இது, வழியில் காரை நிருத்திய கபில், என்னை அணைச்சி, தேம்பி தேம்பி அழுறான், “கபிலா!  என்னபா?  என்ன செய்ய, சாகிற வயசா?, அழாதேபா”.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.