(Reading time: 5 - 10 minutes)

“அம்மா நான் அழறது அவங்களுக்காக மட்டுமில்லைமா!, என்னமோ பண்ணுது, உங்ககிட்டகூட உட்கார்ந்து பேச முடியாம ,வேலை வேலைன்னு நேரம் ஓடுது.இனிமே நீங்க நினைக்கிறதை செய்யுங்கமா, நானிருக்கேன், காவியா அத்தை பொண்ணுங்களுக்கு துணையா இருங்க, பணம் தேவப்பட்டாலும் தர்றேன் ,உங்க நிம்மதிதான்மா எனக்கு வேணும்”.

“கபிலா !” இறுக்கி அணைச்சேன் என் மகன்தான்!! நான் அழறது அவனுக்கு தாங்கல.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இந்த ஒரு வருஷம் காவியா பொண்ணுகளுக்கு துணையா இங்கேயே இருக்கேன், பக்கத்து தெரு ஏழை பசங்களுக்கு பாடம் சொல்லித்தறேன், கோயில்ல சேவை செய்றேன். கபில் பரத்தோடு, அப்பப்போ வந்துபோறான்,

சில நேரம் வசந்தியும் வர்ரா, அவகிட்ட மாற்றம், மரியாதையும் தெரியுது  முன்னைக்கு இப்போ மெலிஞ்சிருக்கா. கபிலன்கிட்ட அதுபத்தி கேட்டா, ”உங்க அருமை இப்பதான் அவளுக்கு தெரியுது, எனக்கும் தான்மா, ‘சின்ன பிரிவு கூட மருந்துதான்மா’ அதவிடுங்கமா, நீங்க நிம்மதியா இருங்க, பணம் வேணுமா?”.

“இல்லை கபில், பசங்களுக்கு காவியாவோட பணம் போதும், என் செலவுக்கு பாங்க்கு இன்டரஸ்டு இருக்கு. நாளைக்கும் மீத்தேன் எதிர்ப்பு களத்துக்கு போறேன்” .

மின்னும் என் கண்ணை திருப்த்தியுடன் பார்த்தான் கபில்.

புதுமை உணர்ந்தேன் நான் நானாக  ஐம்பதில். 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.