இப்போது முதியவரை மகன் அந்த அறையில் சிறைப்படுத்தி வைத்திருக்கிறான்.
முதியவருக்குச் சொந்தமான வீட்டில், முதியவர் தன்வீட்டில் முழுநேர சமையற்காரி தங்குவதற்காக வீட்டின் பின்புறத்தில் கட்டப்பட்ட சிறு அறையில், இன்று அவர் தன்னந்தனியாக இருபத்துநான்கு மணிநேரமும் அடைபட்டுக்கிடக்கிறார்.
"அப்பா!"
மகனின் குரல் முதியவரின் காதில் தேனாகப் பாய்ந்தது.
கண்விழித்துப் பார்த்தார்.
"அப்பா! எப்படிப்பா இருக்கே? உன்னை வந்து பார்த்து விசாரிக்கக்கூட நேரமில்லாம நாயா, பேயா அலைச்சல்! இந்தமாதிரி தொழில்பண்ணி சம்பாதிச்சு என்ன பலன்? பெற்ற அப்பாவையும் கட்டின பெண்டாட்டியையும் பெற்ற குழந்தைகளையும் கவனிக்கமுடியாம யாருக்காக, எதுக்காக சம்பாதிக்கணும்னு வெறுப்பா இருக்குப்பா! அப்பா! உடனடியா தொழிலை வேற யாருக்காவது விற்றுவி
...
This story is now available on Chillzee KiMo.
...
ும், தன்னை திடுமென அவர்கள் சூழ்ந்துநிற்கிற சாதுரியமும் விளங்கியது.
அவருக்கு தன் மனைவியின் ஞாபகம் வந்தது, "வாரிசுகள் சொத்துக்களின்மீது எத்தனை குறியாக இருக்கிறார்கள், பார்!" என கதறவேண்டும்போலிருந்தது.
மௌனத்தில் நேரம் கடந்துகொண்டிருந்தது.
மருமகள் மகனிடம் ஜாடை காட்டினாள்.