Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Chillzee 2019 Contest #02 - Sanyogitha's Varnam theetiya kathal sirpame story contest</strong></h3>

Chillzee 2019 Contest #02 - Sanyogitha's Varnam theetiya kathal sirpame story contest

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - அறியாமற் செய்த பிழை! - ரவை - 5.0 out of 5 based on 2 votes

சிறுகதை - அறியாமற் செய்த பிழை! - ரவை

DAD

ன்றா, இரண்டா!

அடுக்கடுக்காக பிழைகளே செய்துவந்திருக்கிறேன்!

குறைந்தபட்சம், எனக்கு முன்னே நடந்து சென்றவர்கள் பாதையிலே இடறி விழுந்ததை பார்த்தாவது, கற்றுக்கொண்டிருக்கலாம்! அப்படிச் செய்யத் தவறியதும் ஒரு தப்பு!

ஆம், எங்கப்பா முப்பது வயதுக்கு மேலே கல்யாணம் பண்ணிண்டு, அவருடைய வாரிசுகளாக, ஒன்றா இரண்டா, ஒன்பதை உருவாக்கிவிட்டு, அதிலும் மூத்த மகனாக என்னை அவரது நாற்பதாவது வயதிலே பெற்றுவிட்டு, கடுமையாக உழைத்து வயிற்றிலே புற்றுநோயை வரவழைத்துக்கொண்டு தனது அறுபதாவது வயதிலே இந்த உலகத்தைவிட்டே விடைபெற்றுக்கொண்டுவிட்டார்!

இருபதாவது வயதிலே, என்மீது, பெரிய குடும்பச்சுமை சுமத்தப்பட்டபோது, என்னால் செய்ய முடிந்ததெல்லாம், பிழைகள்தான்!

நண்டும் சிண்டுமாக எனக்கு ஏழு தம்பி, தங்கைகள்! ஒரே ஒரு அக்கா!

அக்கா என்னைவிட இரண்டு வயது மூத்தவள்! 

அவளும் நானும் வேலை செய்து சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றியாகவேண்டிய கட்டாயம்!

அம்மா வீட்டுப்பொறுப்பை கவனிக்க, நாங்கள் இருவரும் கிடைத்த வேலையை கஷ்டப்பட்டு செய்து, எவ்வளவு சம்பாதித்தாலும், பற்றாக்குறையை சமாளிக்க சில்லறைக் கடன் வாங்கினோம். காலத்தோடு திருப்பித் தந்தால்தானே, அது சில்லறைக் கடனாகவே இருக்கும்? நாங்கள் எப்படி திருப்பித் தருவது! சில்லறை, வட்டிக்கு வட்டி சேர்ந்து, பெரீரீரீய கடனானது.

நல்ல வேளை! தம்பி, தங்கைகள் படித்தது, அரசுப் பள்ளி! ஃபீஸ் கிடையாது. ஆனால், சீருடைச் செலவு ஏற்காமல் தவிர்க்கமுடியுமா?

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இடையிடையே, அம்மாவின் முனகல், " ஏன்டா! உன் அக்காவுக்கு வயதாகிக்கொண்டே போகிறதே, ஏதாவது தப்புத்தண்டா நடப்பதற்கு முன்பா, அவளுக்கு கல்யாணம் செய்யணும்டா!......"

" யார் இல்லைனு சொன்னா? ஆனா, பணத்துக்கு எங்கே போறது? பணமில்லாம யார் அவளை கட்டிப்பா? 

அப்படி எவனாவது வந்தான்னா, அவனுக்கு நாற்பது வயசாயிருக்கும். அக்காவுக்கு நல்லது செய்யணுமே தவிர, அவளை பாழுங்கிணற்றிலே தள்ளப்படாது......."

இப்படி ஏட்டிக்குப் போட்டியா பேசியே ஆண்டுகள் ஓடியதால், அக்காவுக்கு முப்பது வயதாகியும், கன்னி கழியாமல் குடும்பத்துக்காக கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தாள். எனக்கு அடுத்துப் பிறந்த மூன்று தம்பிகள், படிப்பை அரைகுறையாக முடித்துக்கொண்டு, கிடைத்த வேலையில் அமர்ந்தனர். அதனால், பொருளாதாரம் சற்று முன்னேறியது. ஐந்துபேர் வருமானத்தில், கீழ்வாரிசு நான்கு பேரையும் நன்கு படிக்கவைக்க முடிவெடுத்தோம்.

பெற்றவளுக்குத்தானே தெரியும், மகளின் எதிர்காலம் காற்றில் ஊசலாடுகிற பரிதாபம்! 

" இத பாருங்கடா! அக்கா சம்பாதிக்கிற பணம் குடும்பத்துக்கு தேவைதான். அதுக்காக, அவ வாழ்க்கையை பலி வாங்கிடாதீங்கடா! அவளை கட்டிக்க ஒரு நல்ல சம்பந்தம் பார்த்து பேசி முடிங்கடா!"

அம்மா சொல்வதிலுள்ள நியாயம் புரிந்ததால், அக்கா உட்பட எல்லோரும் தேடினோம்.

முப்பது வயது கன்னிக்கு, பொருத்தமானவனுக்கு, அதிகபட்சம் முப்பத்தைந்து வயது இருந்தால், நியாயம்! அது மட்டுமல்ல, ஏழ்மையில் முப்பது ஆண்டுகள் கஷ்டப்பட்டுவிட்டவளுக்கு, அதன்பிறகாவது சௌகரியமான வாழ்க்கை அமையவேண்டாமா? மூன்றாவதாக, சிறிய குடும்பமாக இருந்தால்தானே, குடும்பச்சுமை குறைவாக இருக்கும், புதிய இடத்திலும் சுமை அதிகமாயிருந்தால், அவள் எப்படி வாழ்க்கையை ருசிக்கமுடியும்?

இவ்வளவு நிபந்தனைகளுடன், தேடினால், கிடைக்குமா, விரைவில்? 

நாம் நிபந்தனைகள் வைப்பதுபோல், முப்பத்தைந்து வயது ஆணுக்கும் அவன் குடும்பத்துக்கும் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்காதா?

இந்த யதார்த்தம் காலங்கடந்து, இப்போது தெரிகிறதேதவிர, தெரியவேண்டிய நேரத்தில் தெரியாத காரணத்தால், நான்கு ஆண்டுகள் பலனின்றி வீணாயின.

அக்காவின் திருமணத்தின்போது, என் வயது முப்பத்திரண்டு! 

கெட்டகாலத்திலும், நல்லகாலமாக, அக்காவின் கல்யாணத்தின்போதே, தற்செயலாக எனக்கும் ஒரு பெண் கிடைத்தாள்!

எல்லா தாயாரும் செய்வதுபோலவே, என் தாயும் " ஆமாண்டா! உனக்கும் வயசு ஏறிண்டே போகிறது, உன் மூன்று தம்பிகளும் சம்பாதிக்கிற பணத்திலே, கீழ்வாரிசு மூணையும் என்னையும் கரையேற்றிடுவாங்க! நீ கல்யாணம் செஞ்சுக்கோ!" என்றாள்.

என் மூன்று தம்பிகளும் அம்மா சொன்னதை ஆமோதிக்கவே, என் முப்பத்திமூன்றாவது வயதிலே, கல்யாணம் செய்துகொண்டேன்.

என் தந்தை, இதுபோல வயது முப்பதானபிறகு திருமணம் செய்துகொண்டது, தப்பு என்று சொன்னது, முதல் தப்பு!

என்னைப்போலவே, சூழ்நிலைக்கைதியாகி அந்த வயசுக்கு முன்பு கல்யாணம் செய்துகொள்ள முடியாமல் போயிருக்கலாம், இல்லையா!

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - அறியாமற் செய்த பிழை! - ரவைmadhumathi9 2019-02-04 07:43
:clap: nalla kathai.panam thaan niraiya idangalil mariyaadhai kodukkirathu. (y) :clap: (y) pengalukku idhupol niraiya nadakkirathu endru ninaikkiren. :sad: kathai miga nandraaga irunthathu. :GL: sir.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அறியாமற் செய்த பிழை! - ரவைRaVai 2019-02-04 09:21
உங்கள் பாராட்டு எனக்கு சந்தோஷத்தை தருகிறது. நன்றி.
நம் சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளை சுட்டிக்காட்டி, திருத்தப்பபடவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்துவதே என் நோக்கம். தங்கள் ஆதரவு என்றும் தேவை
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அறியாமற் செய்த பிழை! - ரவைAdharvJo 2019-02-03 23:08
I liked the theme uncle :clap: :clap: :yes: thalai nimarndhu vazhanum!! You started the play really well (y) 9 kids, fin problems, illiteracy rate, family issues etc etc well balanced :hatsoff: Lakshmi oda will power to achieve in life is really impressive but I was little taken back with her approach...Understand it would be really offending when someone nudge us based on our status but here dad feels suspicious :Q: appadi oru matram thevaiya? Munattram irukanum we need to have self satisfaction but not competition poramai potti is not worth it. However I don't think there will be an end for such thirst sir. Correct me if I am wrong. THank you and keep rocking.

Lastly ninga knife-I vida matinga pole irukku :D :cool:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அறியாமற் செய்த பிழை! - ரவைRaVai 2019-02-04 06:35
Dear Jo! ஆண்கள் பெண்களை நசுக்குவதை நிறுத்தாதவரையில், நானும் கத்தியை விடமாட்டேன். கத்தி என்று சொன்னதும் ஒரு பெண்தான் பயப்படுகிறாளே தவிர, ஆண்கள் அலட்சியப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
கதாநாயகி சாதாரண பெண்களில் ஒருத்தி! அவள் மனதை கொடுமையான வார்தத்தைகளால் புண்படுத்தியதால், மூண்ட ஆவேசம். போகப்போக சரியாகிவிடும். நன்றி ஜோ!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அறியாமற் செய்த பிழை! - ரவைabimahesh 2019-02-03 16:59
Nice story & way of Writing Sir.. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அறியாமற் செய்த பிழை! - ரவைRaVai 2019-02-03 21:36
Thanks, Abhimahesh!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

MAMN
13
VD

EMPM

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

Enn
16
Siva

NKU

Tha
17
KI

VTKS

EK

Mor

AN

Eve
18
EVUT

-

NiNi
19
MMSV

ILU

MAMN
20
GM

EMPM

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top