Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - நீதி கேட்ட குரல்! - ரவை - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுகதை - நீதி கேட்ட குரல்! - ரவை

justice

ஜிம்கானா கிளப் ஹாலில் இதுவரை இத்தனை பெரிய கூட்டத்தை பார்த்ததேயில்லை!

அத்தனைபேரும் ஆண்கள்! அனைவரின் கைகளிலும் மதுக்கோப்பை!

சினிமாத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து சங்கங்களும் கலந்துகொள்ளும் முதல் கூட்டம்!

வேறு எந்த விஷயத்திலும் காணாத ஒற்றுமையை இந்த விவகாரத்தில் கண்டதும், கூட்டம் துவங்குமுன்பே, வெற்றி கண்டுவிட்ட மகிழ்ச்சி, ஒவ்வொருவர் பேச்சிலும், முகத்திலும், உடல்மொழியிலும் தெறித்தது.

" என்ன நினைச்சிண்டிருக்காங்க? தொலைச்சிடுவோம்! ராப்பகலா,வீட்டை மறந்து, வேளாவேளைக்கு சாப்பிடாம, மூளையை கசக்கி, உடலை வளைச்சு, படம் தயாரிச்சு இவங்களுக்கு லட்சக்கணக்கிலே பணமும் கொட்டிக்கொடுத்து பெயரும் புகழும் வாங்கிக்கொடுத்தா, எங்க பேரிலே சேற்றையா வாரி இறைக்கிறாங்க!ப்ளாக்மெயிலா பண்றாங்க! எங்க பொண்டாட்டி, குழந்தைகளை தற்கொலைக்கா விரட்டறாங்க!ஒழிச்சிடுவோம், ஒரே நாளிலே! ......"

" ஆரம்பத்திலே அம்மாவும் பொண்ணுமா சுற்றி சுற்றி வந்து டார்ச்சர் பண்ணி, டான்ஸ் குரூப்பிலே சேர்த்துவிடுங்கன்னு கெஞ்சுவாங்க! கூரியோகிராபரிலிருந்து, மேக்அப் மேன், கேமராமென், உதவி டைரக்டர், எல்லார் மேலேயும் விழுந்து புரளுவாங்க, தொல்லை தாங்காம போனா போவுதுன்னு நடிகையா தூக்கிவிட்டா, இப்ப பத்திரிகையிலே பேட்டி கொடுக்கிறாங்க, ஆம்பளைங்க அயோக்கியங்க, கையை பிடிச்சு இழுக்கிறாங்கன்னு, பத்தினி வேஷம் போடுறாங்க......."

" இவங்க வீடியோவை யூட்யூபில போட்டா, அத்தனை பேரும் தற்கொலை பண்ணிக்கணும், அத்தனை கேவலமானவங்க! ஒரு வருஷத்துக்கு சான்ஸ் தராம, பட்டினி போட்டா, அப்ப தெரியும் இவங்க போடற வேஷம்! இவங்களைவிட அம்சமான நல்லா நடிக்கிற எத்தனையோ பேர் க்யூவிலே நிக்கறாங்க........"

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

" இப்படித்தான் பக்கத்து மாநிலத்திலே கொடி பிடிச்சாங்க, என்ன ஆச்சி? இப்ப ஒருத்திக்கும் படம் இல்லே, வயிறு காயுது......."

" இங்கேயே, என்னாச்சு? ஒரு நாளைக்கு ஐந்து பாட்டு, நாலு டப்பிங் பண்ணினவ இப்ப, 'ஓ'ன்னு பிரஸ்மீட்லே அழறா!"

" பழசை விடு! இப்ப, பெருந்தலைகள் எல்லாம் மேடையிலே ஏறி பேசப்போறாங்க! பத்தினி வேஷம் போடறவங்களை கிழி, கிழின்னு கிழிக்கப்போறாங்க........  "

"அண்ணே! உனக்கொரு ரகசியம் தெரியுமா? தல, மீட்டிங்ல கலந்துக்கலையாம்......"

"அவரு ஒருத்தர் வரலைன்னா என்ன, ஆயிரம்பேர் வருவாங்க........"

" அதில்லேண்ணே! இப்ப நீ, நான்னு போட்டி போட்டுக்கிட்டு நடிகர்கள் அரசியல்லே குதிக்கிறாங்களா, அவங்களும், ஏதாவது பேசி பெண்கள் ஓட்டு தேர்தல்லே இழந்துவிடுவோமோன்னு பயப்படறாங்களாம்.........."

" அட, நீ ஒரு பைத்தியம்! தேர்தல்லே, ஆளைப்பார்த்து ஓட்டுப்போடறதெல்லாம் அந்தக் காலம்! இப்பல்லாம், நோட்டைப் பார்த்துத்தான்! நோட்டு தரலேன்னா, நோடா!"

" அப்ப அவங்களும் வருவாங்கன்னு சொல்றீங்களா?"

" பைத்தியம்! வரலைன்னா, நஷ்டம் யாருக்கு? கூட்டத்தை பார்த்தேயில்லே, எல்லா பத்திரிகை, டி.வி.சேனல்காரங்க, எல்லாரும் வந்தாச்சு! உடனே நியூஸ் பரவிடும், விளம்பரம், பேச்சு எல்லாம் இன்னும் பத்து நாளைக்கு இதைப்பத்தித்தான்! இந்த வெளிச்சத்தை, விளம்பரத்தை விடுவாங்களா, அறிவுள்ளவங்க!"

"முக்கியமா, இந்த கூட்டத்திலே பல தீர்மானங்கள் நிறைவேற்றப்போராங்க! அதுக்குத்தான், இந்த கூட்டமே! இந்த பத்தினித்தெய்வங்களை எல்லா சங்கங்களிலிருந்தும் உடனடியா வெளியேற்றப்போராங்க! எந்த தயாரிப்பாளரும், அவங்களுக்கு சான்ஸ் தரக்கூடாதுன்னு இன்னொரு தீர்மானம்........."

"அண்ணே! அவங்க சாமர்த்தியமா, பத்து வருஷம் முன்னாடி நடந்தது, அவுட்டோர் ஷூட்டிங்லே நடந்தது அப்படி, இப்படின்னு நிரூபிக்க முடியாத சமாசாரமா பேசறாங்களே, இவங்க பேரிலே மான நஷ்ட வழக்கு போடக்கூடாதா? போலீஸ் கம்ப்ளெயிண்ட் தரக்கூடாதா?"

" நீ எந்த ஊரிலே இருக்கே? எல்லாம் நடந்துகிட்டுத்தான் இருக்கு,.......ரகசியமா ஒரு விஷயம் பெரிய ஆளுங்கள்ளாம் ஏற்பாடு செஞ்சுகிட்டிருக்காங்க, அது வெற்றின்னா, இன்னிக்கி அவங்கதான் ஹீரோ ஆகப்போறாங்க! ........"

" என்ன சொல்றீங்கண்ணே?"

" நாம ஆம்பளைங்களே, இன்னொரு ஆம்பளைக்கு ஆதரவா பேசறதைவிட, ஒரு பொம்பளை, அதுவும் இந்த ஃபீல்டிலே இருக்கிறவங்க, சீனியரானவங்க, ஆதரவா பேச பேரம் நடந்துகிட்டிருக்கு, ஒரு கோடியிலே ஆரம்பிச்சு இப்ப அஞ்சிலே நிக்குதாம், எல்லாம் இன்னும் பத்து நிமிஷத்திலே தெரிஞ்சிடும்........."

"மாரிசாமி! இங்கே வா! ரெம்ப நாளாச்சு, பார்த்து! இப்ப என்ன வேலை செய்யறே?"

" அண்ணே! கிண்டல் பண்ணாதீங்க! லைட் பாய் வேலைதான் இப்ப பார்க்கிறேன், இதுவும் வாரத்துக்கு ரெண்டுநாள்தான், தினம் ஸ்டூடியோவிலேதான் சுற்றிக்கிட்டிருப்பேன், பரிதாப்ப்பட்டு, ஒருவேளை சாப்பாடு யாராவது போட்டுவிடுவாங்க,..........."

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - நீதி கேட்ட குரல்! - ரவைmadhumathi9 2019-01-28 07:33
:o enna solvathendru theriavillai.sila arasiyal vaathigal matra thuraigalil ullor palar makkalai muttaal endru ninaithu seyalpattu kondirukkiraargal. :angry:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நீதி கேட்ட குரல்! - ரவைRaVai 2019-01-28 11:12
That is the misfortune, madam!
We need to seriously tackle it and rid the nation of such criminals. Thanks,Madhumathi9
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நீதி கேட்ட குரல்! - ரவைAdharvJo 2019-01-27 16:11
facepalm I don't want to say anything about this topic sir steam

Well narrated and thanks for the story :clap: :clap:

Keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நீதி கேட்ட குரல்! - ரவைRaVai 2019-01-27 18:03
Dear Jo! I understand you !
Thanks for the compliments.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top