Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - உன்னையே நம்பு! - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - உன்னையே நம்பு! - ரவை

believe

"முரளிதரா! கோபாலா......." என ராதா பாட ஆரம்பித்ததுமே, அவள் தோழி குதூகலமாக, " கண்டுபிடுச்சிட்டேன், உன் காதலன் பேர், முரளியோ, கோபாலோ? கரெக்டா?" என ராதாவை அணைத்தாள்.

சைகையால், தோழியை கையமர்த்திவிட்டு, தொடர்ந்து பாடினாள், ராதா.

" முரளிதரா! கோபாலா! முகுந்தா! ஶ்ரீவைகுந்தா!...." என்று பாடியவாறே, தோழியை பார்த்து சிரித்தாள்!

தோழிக்குப் புரிந்துவிட்டது, தான் சொன்னது சரியில்லையென்று!

" ராதா! சொல்லுடீ! உன் காதலன் பேர் என்னடீ?"

"அவன் பேரை தெரிஞ்சிக்கிறதிலே உனக்கேன் ஆர்வம்?"

"இல்லே, பேர் பொருத்தம் இருக்கான்னு பார்க்கத்தான்! இந்த ராதாவுக்கு பொருத்தமானவன் கிருஷ்ணன்தான்!"

" அப்படீன்னா, உன் பேரு பார்வதி! உன் காதலன் பேரு பரமசிவனா? போடீ பைத்தியம்!"

" சரி, டீச்சர்! ஒத்துக்கிறேன், இப்பவாவது உன் காதலன் பேரை சொல்லேன்.....ப்ளீஸ்!"

" பாரு! நீ இன்னும் விளையாட்டுத்தனமாவே இருக்கே, காதலிக்கிறதுக்கெல்லாம் ஏதுடீ நேரம்? இப்பத்தானே, நகரத்துக்கு வந்திருக்கே, போகப்போக தெரிஞ்சிப்பே, மூச்சுவிட நேரமில்லாம, இங்கே எல்லாரும் ஓடு ஓடுன்னு ஓடிண்டேயிருக்கிறதை! வீட்டைவிட்டு கிளம்பினா, போய்ச் சேரவேண்டிய இடத்தை பஸ், ரயில், எதிலே போனாலும் அதுவும் கூட்டத்திலே மிதிபட்டு இடிபட்டுண்டு, போய்ச் சேர ஒண்ணரைமணி நேரமாகும். அதேபோல, திரும்பிவர! வீட்டிலே இருக்கிற நேரத்திலே சமைக்கிறது, குளிக்கிறது, சாப்பிடறது, தூங்கறதுக்கே சரியா போயிடும்! காதல், கத்திரிக்காயெல்லாம் ஊரிலேதான், இங்கே முடியாது!"

" ஏன்டீ, என்னை வந்த அன்னிக்கே பயமுறுத்தறே? உன்னோட ஜாலியா லேடீஸ் ஹாஸ்டல்லே தங்கிண்டு ஈவினிங்லே ஜாலியா பீச், பார்க்னு சுற்றலாம்னு ஆசையா வந்திறங்கினா, என்னை உடனே திருப்பி ஊருக்கு அனுப்பிடுவே போலிருக்கே!"

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

" பாரு! நல்லா கேட்டுக்கோ! இந்த காதல், கத்திரிக்காய் எல்லாம் தொப்புளுக்கு மேல கஞ்சியா, வேளைக்கு சாப்பிட்டுவிட்டு, பொழுது போகாம திண்டாடுகிற பணக்காரங்களுக்குத் தான்! நம்மைப்போல உள்ள அன்னாடங்காய்ச்சிக்கில்லே!"

" ராதா! நான் நாடகத்திலும், சினிமாவிலும் பார்க்கிற, பீச்சிலே பார்க்கிலே படுத்துப் புரளுகிற காதலைச் சொல்லலே, கூட்டத்திலே எங்கோ ஒரு மூலையிலே ஒத்தைக்காலிலே நின்னுண்டு நம்மைப் பார்த்து கண்ணிலே ஒளி பறக்க ஒரு சின்ன சிரிப்பு தருவானே, அந்தக் காதலை சொல்றேன்........"

" பாரு! நீ அந்த சின்ன சிரிப்பை ரசிக்கிற நேரத்திலே, உன் ஹேண்ட்பேகை திருடிண்டு போயிடுவான், பிக்பாக்கெட்! அப்புறம், அந்த மாசம் முழுதும் அரைப்பட்டினிதான்!"

" போடீ! என்னை ரொம்ப பயமுறுத்தறே!"

பாரு குளிக்கப்போனதும், ராதா சிந்தனையில் ஆழ்ந்தாள். பாருவின் குடும்ப நிலைபற்றி ராதாவுக்கு நன்கு தெரியும். 

பாரு ஒழுங்காக வேலைக்குப் போய் நாலுகாசு சம்பாதித்து, அதில் பெருந்தொகையை முதலில் ஊருக்கு அனுப்பினால்தான், அங்கே குடும்பம் பசி தீரும். அதற்காகத்தான், அவளை தைரியமாக நகரத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். கூடவே தான் இருப்பதும், அவர்களுக்கு கொஞ்சம் நிம்மதியென்று ராதாவுக்கு தெரியும்.

இவளோ, பருவக்கோளாறினால், காதல், கீதல்னு ரொமாண்டிக்கா கனவு காணறா! கொஞ்சம் கொஞ்சமாக திருத்தியாகவேண்டும் என தனக்குத்தானே பேசிக்கொண்டாள்.

குளித்துக்கொண்டே பாரு யோசித்தாள். ராதா சொல்வது உண்மைதான், ஒழுங்காக வேலை பார்த்து, கிடைக்கிற சம்பளத்தை பத்திரமாக எடுத்துவந்து, அதில் பெரும்பகுதியை முதலில் ஊருக்கு அனுப்பிவிட்டு, மிச்சமிருப்பதில், ஹாஸ்டல் வாடகை தந்துவிட்டு, ரயில் சீசன் டிக்கட் வாங்கிவிட்டு, இரண்டுவேளை சாப்பிட்டாகவேண்டும்.

பாவம்! அப்பாவும் அம்மாவும் வேண்டாத தெய்வமில்லை! முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததிலிருந்து, ஒரே ஒரு ஆண் குழந்தைக்காக மூன்று முறை முயற்சித்து தோற்றுப்போய், இறுதியில் ஆசையை கைவிட்டனர். நான்கு பெண்களுக்கும், பார்வதி, காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி என அம்பாளின் பெயராகவே சூட்டினார்கள். 

தெய்வபக்தி இருந்தென்ன பயன்!

நாலும் பெண்ணாக தந்ததற்கு ஈடாக, செல்வமும் தந்திருக்கலாம் இல்லையா? அதில் ஏனோ கையை இழுத்துக்கொண்டுவிட்டார், ஆண்டவன்!

சொந்த வீடு, பாரம்பரிய சொத்து! பழைய வீடு, ஓட்டுக்கூரை! அப்பாவுக்கு தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை! அரசு ஆணைப்படி தரவேண்டிய சம்பளத்தை எந்த தனியார் பள்ளியாவது தருகிறார்களா? வேலை நிரந்தரம், வீட்டிற்கு அருகாமை, தரப்படுகிற மரியாதைக்காக தொடர்ந்து பணிபுரிகிறார். 

மூத்தவள் பாருவை எப்படியோ பீ.ஏ. பட்டம் பெறுகிறவரை படிக்கவைத்துவிட்டார். 

மற்ற மூவரும் பத்தாவதோடு நிறுத்திவிட்டு, தாயிடம் இசை கற்றுக்கொள்கின்றனர். தாய் இசையில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்றவள்!

அக்கம் பக்கத்திலுள்ள வேறுசிலருக்கும் கற்பித்து தாய் ஓரளவு வருமானம் ஈட்டுகிறாள்.  

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - உன்னையே நம்பு! - ரவைmadhumathi9 2019-01-21 13:41
wow semma idea sir.pengalukku paadhukaappu payirchi, kathi patri kurippittathu arumai. :hatsoff: sir.arumaiyaana kathai.vaaltugal sir. (y) :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உன்னையே நம்பு! - ரவைRaVai 2019-01-21 16:20
Dear Madhumathi9,
உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி.
புத்தி மட்டும் போதாத நேரங்களிலே, பெண் கத்தியை எடுத்துத்தானே ஆகணும்! பணத்துக்காகவும், பதவிக்காகவும், தற்பெருமைக்காகவும் ஆண்கள் கத்தி எடுக்கிற காலத்திலே, தன்மானத்துக்காக, பெண்கள் கத்தி எடுத்தால் என்ன தப்பு?
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உன்னையே நம்பு! - ரவைmadhumathi9 2019-01-22 05:57
(y) :clap: ungal ennam nalla ennam.idhai pengal unmaiyaana kaaranathirkku intha ideavai payan paduthinaal magizhchi. :thnkx: :thnkx: sir. (y)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உன்னையே நம்பு! - ரவைAdharvJo 2019-01-20 22:27
Simple plot with needed message sir :clap: :clap: As you said its high time and your tips are valid too but how far these can be effectively implemented is question mark....such is our law facepalm and one more notable thing in the story was hiding one's true color :yes: its better not to trust anyone. Anyway let us pray and hope for the best.
Thank you!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உன்னையே நம்பு! - ரவைRaVai 2019-01-21 07:16
Dear Jo!
Thank you for sharing my anguish and agony.
Keep vigilance, seems to be the order of the day!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top