Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
2019 பொங்கல் சிறப்பு சிறுகதை - தை பிறந்தால் வழி பிறக்கும்! - ரவை - 5.0 out of 5 based on 1 vote
Pin It

2019 பொங்கல் சிறப்பு சிறுகதை - தை பிறந்தால் வழி பிறக்கும்! - ரவை

happy-pongal

" சு! பெரியவங்க சும்மாவா சொன்னாங்க, தை பிறந்தால் வழி பிறக்கும்னு! வசு! நம்ம மதுவுக்கும் வழி பிறந்தாச்சு!"

" ரொம்ப சந்தோஷம்! சொல்லுங்க!"

" இன்னிக்கு ஆபீஸிலே, என் நண்பன் ராமசாமி, உனக்குத் தெரியுமே, அவன்தான் வழி காட்டினான்........"

" நல்லவருங்க, அவர்! நம்ம மதுவுக்கு நல்ல வரனா பார்த்துச் சொல்றேன்னு அடிக்கடி சொல்வாரு............"

" கேள்! அவன் வீட்டுக்கு பக்கத்து வீட்டிலே வசிக்கிறவரின் மகன், அமெரிக்காவிலிருந்து மூணுவார லீவிலே வந்திருக்கானாம். ரொம்ப பெரிய உத்தியோகமாம், அமெரிக்காவிலே! திரும்ப இந்தியா வர ரெண்டு மூணு வருஷமாகுமாம்.....அதனாலே, இந்த மூணு வாரத்துக்குள்ளே, கல்யாணம் பண்ணிண்டு, பெண்ணுக்கு விசா வாங்கி, அவளையும் கூடவே அழைச்சிண்டு போகிற ஐடியாவாம்!"

" அத்தனை சீக்கிரமா முடியுமா?"

" ஜாதகம் பார்க்கவேண்டாமாம், வரதட்சிணை வேண்டாமாம், பதிவுத் திருமணம், சிக்கனமா கோவில்லே கல்யாணம் நடத்தினா போதுமாம்!"

" அதெல்லாம் சரி, நம்ம மதுவை அவன் பண்ணிக்கணுமே?"

" ராமசாமிக்கு என்ன நம்பிக்கைன்னா, அவன் கேட்கிற ரெண்டு தகுதிகளும் நம்ம மதுவுக்கு இருக்காம், மற்றதை நான் பார்த்துக்கிறேன்னு சொல்றான்."

" என்ன ரெண்டு தகுதி?"

" பெண் அழகா இருக்கணும், கம்ப்யூடர் படிச்சிருக்கணும், நம்ம மதுதான் எம்.சி.ஏ. பாஸ் பண்ணியிருக்காளே, அவளைப்பார்த்தா மயங்கி சொக்கிடமாட்டானா, பையன்!"

" ரொம்ப ரொம்ப சந்தோஷமாயிருக்குங்க! மதுவிடம் சொல்லி தயார் பண்ணுவோம், அவளை!"

" ஆமாமாம்! கூப்பிடு, அவளை!"

" நீங்க போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிண்டு வாங்க! அதுக்குள்ளே, நான் மதுவிடம் பேசிவைக்கிறேன்!"

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

குரு நகர்ந்ததும், வசு, மதுவை தேடிச் சென்றாள். அவளுடைய அறையில் இல்லை, வாசல்பக்கமும் இல்லை, பாத்ரூமிலும் இல்லை, இந்த நேரத்தில் எங்கு போயிருப்பாள்?

"என்னம்மா! யாரைத் தேடறே?" எனக் கேட்டவாறே, மகன் பிரதாப் வந்தான்.

" பிரதாப்! மதுவை எங்கேயாவது பார்த்தியா?"

பிரதாப் வாய்விட்டு சிரித்தான்.

" ஏன்டா சிரிக்கிறே? நான் அவசரமா மதுவை பார்த்தாகணும்........"

" அம்மா! நீதானே அவளை காலையிலே, மதுவை ஊட்டிக்கு அவ ஃபிரெண்ட்ஸோட பிக்னிக் அனுப்பிவைச்சே, அவ திரும்பிவர, பத்து நாட்களாகும்........"

" போச்சு! எல்லாமே போச்சு! இப்ப என்ன பண்றது?"

" அது சரி, உனக்கெப்படி மது ஊட்டிக்கு போயிருக்கிறது, மறந்துபோச்சு?"

" எனக்கு மட்டும் இல்லேடா, உங்கப்பாவுக்கும்தான்! நாங்க ரெண்டுபேருமாகத் தானே அவளை சந்தோஷமா நிறைய பணம் தந்து சந்தோஷமா இருந்துவிட்டு வான்னு அனுப்பினோம். உங்கப்பா ஆபீஸிலிருந்து வந்ததும், ரொம்ப சந்தோஷமான செய்தி சொன்னதிலே, எல்லாம் மறந்துபோச்சு!"

" என்ன வசு, எது மறந்துபோச்சு?"

" ஏங்க, நாம ரெண்டு பேருமா இன்னிக்கு காலையிலே, மதுவை ஊட்டிக்கு அனுப்பினோம், அதை எப்படி நமக்கு மறந்துபோச்சு?"

" ஆமாம் இல்லே......."

" அப்பா! அது என்ன, ஆமாம் இல்லை? ஆமாமா, இல்லையா? ரெண்டும் எப்படி சேரும்?"

மூவரும் சிரித்தனர்.

" அதுவா? என்கூட வேலை செய்கிற கன்னடக்காரங்க, தெலுங்குக்காரங்க, பேசறதைக் கேட்டு எனக்கும் பழகிப்போச்சு! வசு! கவலைப்படாதே! ராமசாமி பக்கத்து வீட்டுக்கார நண்பரோடு பேசிவிட்டு எனக்கு போன் பண்றதா சொல்லியிருக்கான், என்ன சொல்றான்னு பார்ப்போம்!"

சொல்லிவைத்தாற்போல, ராமசாமியிடமிருந்து போன் வந்தது. 

" மது அதிருஷ்டக்காரிதான்! அமெரிக்கா பையன் மதுவின் போட்டோவை பார்த்தவுடனேயே, அசந்துட்டான், அவனுக்கு ஓ.கே.யாம். அவன் போட்டோவை போனிலேயே அனுப்பறேன், மது அதை பார்த்து ஓ.கே. சொல்லிட்டாள்னா, பெரியவங்க மற்ற ஏற்பாடுகள் செய்யலாமாம், அவன் நாளை காலையிலே ஊட்டி போகிறானாம் நண்பர்களோடு! ஒரு வாரமாகுமாம், திரும்ப! அவன் போன் நம்பர் கொடுத்திருக்கிறான், ஏதாவது அவசரமா பேசணும்னா இருக்கட்டும்னு சொன்னான்........"

" ராமசாமி! உனக்கு யார்ரா பேர் வைச்சா இத்தனை பொருத்தமா! பகவான் ராமசந்திரமூர்த்தி போல, நீயும் எங்களுக்கு நல்லது செய்கிறே! பையன் போட்டோவை பார்த்து மது என்ன சொல்றான்னு கேட்டு சொல்றேன், சரியா?"

போட்டோவில் பையன் கம்பீரமாக எடுப்பாக இருந்தான். வசு, குருஉட்பட மூவருக்கும் பிடித்திருந்தது. "கட்டாயம், மதுவுக்கும் பையனை பிடிக்கும். டும் டும் கெட்டி மேளம்தான்!"

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: 2019 பொங்கல் சிறப்பு சிறுகதை - தை பிறந்தால் வழி பிறக்கும்! - ரவைmahinagaraj 2019-01-16 16:02
ரொம்ப அருமையா எதிர் பார்க்காமல் நிகழ்வுகல் இருக்கு செம... :clap: :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: 2019 பொங்கல் சிறப்பு சிறுகதை - தை பிறந்தால் வழி பிறக்கும்! - ரவைRaVai 2019-01-16 21:13
Thanks, Mahinagaraj!
Your appreciation carries lot of weight for an amateur writer like me!
Reply | Reply with quote | Quote
# RE: 2019 பொங்கல் சிறப்பு சிறுகதை - தை பிறந்தால் வழி பிறக்கும்! - ரவைrspreethi 2019-01-15 09:27
Story super... Unga name kaga unga story padikanumnu aasai bt padika mudiyama pochu...ippo padichuten.... Yenakum Thai pirandhu unga story kidaika vazhi kidaichuduchu :grin:
Reply | Reply with quote | Quote
# RE: 2019 பொங்கல் சிறப்பு சிறுகதை - தை பிறந்தால் வழி பிறக்கும்! - ரவைRaVai 2019-01-15 10:10
Thanks a lot, Preethi!
Wish you the best pongal
Reply | Reply with quote | Quote
# RE: 2019 பொங்கல் சிறப்பு சிறுகதை - தை பிறந்தால் வழி பிறக்கும்! - ரவைmadhumathi9 2019-01-15 08:13
:clap: (y) arumaiyaana kathai.vaaltugal sir.anaivarukkum avaravar nalla ennangal niraivera praarthippom.
Happy Pongal to you & your fly sir. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: 2019 பொங்கல் சிறப்பு சிறுகதை - தை பிறந்தால் வழி பிறக்கும்! - ரவைRaVai 2019-01-15 08:53
Thank you, Madhumathi9!
Pongal greetings!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top