Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - உன்னையே நம்பு! - ரவை - 5.0 out of 5 based on 2 votes

ஆயினும், பாருவை படிக்கவைப்பதற்காக, வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே, பெருந்தொகை செலவாகிவிடுவதால், நெருக்கடி சமாளிக்கமுடியாத காரணத்தால், பாருவை வேறுவழியின்றி நகரத்துக்கு அனுப்பினர். வயதுவந்த மகளை தனியாக வேறு இடத்துக்கு அனுப்பவேண்டியிருக்கிறதே என பெருங்கவலைதான், வேறுவழியில்லையே!

பாரு, நகரத்துக்கு கிளம்புமுன், அவளை தனியே அழைத்து, பெற்றோர் பேசினர்:

" பாரு! வேறுவழியின்றித் தான், உன்னை தனியாக நகரத்துக்கு அனுப்புகிறோம். அங்கே நமக்கு பரிச்சயமான ராதாவின் துணையிருப்பதால், கொஞ்சம் ஆறுதலாயிருக்கிறது. அவளும் , உன் நிலைமையில்தான், அங்கு போயிருக்கிறாள்.

நீங்க ரெண்டுபேருமே பொறுப்பானவர்கள். நகரம் ரொம்ப கெட்டுப்போயிருக்கிறது. தினமும் செய்திகள் பயங்கரமாக வருகின்றன. எவ்வளவு உஷாராக இருந்தாலும், ஏமாற்றிவிடுகிறார்கள். போலீஸ் இலாகாவே திண்டாடுகிறார்கள். 

பாரு! நம்ம குடும்பம் பாரம்பரியமாக ரொம்ப கௌரவமான குடும்பம்! அந்த கௌரவம் பாதிக்கப்படாமல் காப்பாற்றவேண்டியது, நம்ம பொறுப்பு! .........பாரு! நீ வயசுப்பொண்ணு! எத்தனையோ கனவுகள், ஆசைகளோட வாழ்க்கையிலே அடியெடுத்துவைக்கிற பருவம்! மனசு தாறுமாறா ஓடும். இந்த சினிமா, யூடியூப், வாட்ஸப், இதெல்லாம்வேற மனசை போட்டிபோட்டு கெடுக்கும். நீதாம்மா உஷாரா இருக்கணும். 

பாரு! உனக்கு அதிகப்படியா ஒரு பொறுப்பு! அப்பாவுக்கு ரிடையராகிற வயது நெருங்குது, நான்கு பெண்களுக்கு கல்யாணம் செய்யவேண்டிய கடமையை அவர் மட்டுமே நிறைவேற்றமுடியாது. உன்னைத்தவிர, இந்தக் குடும்பத்தில் வேறு எவருக்கும் அந்தப் பொறுப்பை பகிர்ந்துகொள்ள தகுதியில்லை.

............."

தாயால் மேலே பேசமுடியாமல், உடைந்துபோனாள். வாய்க்குள் சேலைத்தலைப்பை திணித்துக்கொண்டு துயரத்தை கண்ணீராய் வெளியேற்றினாள்.

பாருவும் உடைந்துபோய் தாயை அணைத்துக்கொண்டு ஆறுதல் கூறினாள்.

" அம்மா! எனக்குப் புரிகிறதும்மா, நீ சொல்லமுடியாமல் திணறுகிற அந்த விஷயம்! கவலையே படாதே! இப்போதெல்லாம் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு ஈகுவலா எல்லா உரிமைகளையும் கேட்கிறோமில்லையா, அதுபோல, கடமைகளையும் ஏற்றுக்கொள்வதுதானே நியாயம்! என் தங்கைகள் மூவருக்கும் நமது சக்திக்கு ஏற்றாற்போல, திருமணம் செய்துவைக்கிற பொறுப்பை நான் ஏற்கிறேன். அது முடிகிறவரையில், நான் என் கல்யாணத்தைப்பற்றி கனவுகூட காணமாட்டேன், இது சத்தியம்!" என்று தாயின் கையில் அடித்துக் கொடுத்தாள்.

மூவரும் தாங்கொணா துயரத்திலிருந்து மீள நெடுநேரமாகியது.

அவற்றையெல்லாம் நினைத்தவுடன், பாரு மறுபடியும் உடைந்துபோனாள்.

" பாரு! நேரமாயிடுத்து, சீக்கிரம் வா!" என்று ராதா பாத்ரூம் கதவைத் தட்டவே, பாரு அவசரமாக குளித்துவிட்டு வெளியே வந்தாள்.

" பாரு! இன்னிக்கி முதன்முதலா நீ போகிறதாலே, உன்னை நான் உங்க ஆபீஸ் இருக்கிற இடத்திலே விட்டுவிட்டு, நான் எங்க ஆபீஸ் போகிறேன், சாயங்காலம், அதேபோல உன்னை வந்து அதே இடத்திலே மீட் பண்ணி ரெண்டுபேரும் சேர்ந்து திரும்புவோம். ஓ.கே.?'

ஹாஸ்டலிலிருந்து ஸ்டேஷனுக்கு நடை, பிறகு மின்சார ரயிலில் தாம்பரத்திலிருந்து மாம்பலம் அடைந்து, அங்கிருந்து தி.நகர் பஸ் நிலயம் போய் பஸ் பிடித்து, அண்ணாசாலையில் இறங்கி ஆபீஸ் சேர்ந்தாகணும். 

சுலபமாக ஒண்ணரை மணி நேரமாகிவிடும்!

பாரு சூட்டிகையானவள்! மூன்றாவது நாளே தனியாக ஆபீஸ் போய்வர தெரிந்துகொண்டுவிட்டாள்.

ராதாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. 

" பாரு! புது ஆபீஸ் எப்படியிருக்கு? வேலை பிடிச்சிருக்கா? யாராவது நெருங்கிப் பழகறாங்களா?"

" ராதா! எங்க ஆபீஸிலே, ஆண்களைவிட பெண்கள் அதிகம். சுலபமா பழகமுடிகிறது. கூட வேலைபார்க்கிற பெண்களே வேலையை கற்றுக்கொடுக்கிறாங்க!"

" வெரிகுட்! நிம்மதியாப் போச்சு. அந்த பெண்கள் கும்பலிலே ஊர்க்காரங்க, தெரிந்தவங்க, உறவுக்காரங்க யாருமே சிக்கலையா?"

" என் காலேஜிலே படித்த சீனியர் ஒருத்தியை பார்த்தேன். அவ சேர்ந்து ரெண்டு வருஷம் ஆயிடுத்தாம்! அவளும் தாம்பரத்திலே சொந்தக்காரங்க வீட்டிலே தங்கியிருக்காளாம். ஹாஸ்டலிலே நம்மைமாதிரி தங்கினா, ரூம் வாடகை, ஓட்டல் சாப்பாடு செலவு அதிகமாகுங்கிறதுனாலே, உறவுக்காரங்க வாடகையில்லாம தங்கிண்டு சாப்பாட்டுக்கு மட்டும் டோக்கனா ஏதோ தராளாம்........."

"ஆமாம், பாரு! நாம் ஏன் தாம்பரத்தில் ரூம் எடுத்திருக்கிறோம், தெரியுமா? இங்கேதான் வாடகை நம்ம சக்திக்கு உட்பட்டு குறைவாயிருக்கு, மாம்பலம், மைலாப்பூர், திருவல்லிக்கேணியிலே இதைவிட சின்ன ரூமிற்கு ரெண்டுமடங்கு வாடகை கேட்கறாங்க, அதுபோல, சாப்பாட்டு செலவும் இங்கே குறைவு!..........."

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - உன்னையே நம்பு! - ரவைmadhumathi9 2019-01-21 13:41
wow semma idea sir.pengalukku paadhukaappu payirchi, kathi patri kurippittathu arumai. :hatsoff: sir.arumaiyaana kathai.vaaltugal sir. (y) :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உன்னையே நம்பு! - ரவைRaVai 2019-01-21 16:20
Dear Madhumathi9,
உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி.
புத்தி மட்டும் போதாத நேரங்களிலே, பெண் கத்தியை எடுத்துத்தானே ஆகணும்! பணத்துக்காகவும், பதவிக்காகவும், தற்பெருமைக்காகவும் ஆண்கள் கத்தி எடுக்கிற காலத்திலே, தன்மானத்துக்காக, பெண்கள் கத்தி எடுத்தால் என்ன தப்பு?
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உன்னையே நம்பு! - ரவைmadhumathi9 2019-01-22 05:57
(y) :clap: ungal ennam nalla ennam.idhai pengal unmaiyaana kaaranathirkku intha ideavai payan paduthinaal magizhchi. :thnkx: :thnkx: sir. (y)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உன்னையே நம்பு! - ரவைAdharvJo 2019-01-20 22:27
Simple plot with needed message sir :clap: :clap: As you said its high time and your tips are valid too but how far these can be effectively implemented is question mark....such is our law facepalm and one more notable thing in the story was hiding one's true color :yes: its better not to trust anyone. Anyway let us pray and hope for the best.
Thank you!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உன்னையே நம்பு! - ரவைRaVai 2019-01-21 07:16
Dear Jo!
Thank you for sharing my anguish and agony.
Keep vigilance, seems to be the order of the day!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top