Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - நீதி கேட்ட குரல்! - ரவை - 5.0 out of 5 based on 1 vote

"நன்றி! இங்குள்ள எல்லோருக்கும் பணிவாக ஒன்று முதலில் சொல்லுவேன், இந்த பிரச்னையை உங்களை அறியாமலேயே தவறுதலாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான போராட்டமாக்கிவிட்டீர்கள். இல்லையென்றால், ஆயிரம்பேர் கூடியுள்ள இந்த மண்டபத்தில் என்னைத் தவிர ஏன் ஒரு பெண்ணைக்கூட அழைக்கவில்லை? இப்படி நீங்கள் செய்ததால், விளைவு என்ன தெரியுமா? என்னைப்போல நடுநிலை நின்று நியாயத்தை ஆதரிக்கக்கூடிய நிறைய பெண்கள் உள்ளனர். எனக்கு உறுதியாகத் தெரியும். அவர்களையும் நீங்கள் தேவையில்லாமல் விரோதித்துக்கொண்டுவிட்டதோடு, அந்தப் பக்கத்துக்கு போகும்படி வலுக்கட்டாயப்படுத்திவிட்டீர்கள். நான் சொல்வதில் தவறு இருந்தால், சொல்லுங்கள்!........."

ஒரு வினாடி நிசப்தமாயிருந்த கூட்டம், ஒருவர் எழுந்து, " நீங்க சொல்றது, சரிதான்" என்றதும் கரவொலி வானைப் பிளந்தது!

ரமாதேவி கூட்டத்துக்கு தலைகுனிந்து நன்றி சொல்லிவிட்டு, தொடர்ந்தார்.

"சரி, பிரச்னைக்கு வருவோம், கடந்த சில மாதங்களாக பேசப்படுகிற இந்தப் பிரச்னை, எங்கு துவங்கியது தெரியுமா"

சிறிது இடைவெளி.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"ஆச்சரியப்படாதீர்கள்! உலக நாடுகளிலேயே முன்னேறிய நாடுகளின் முதலாவதாக நிற்கிற அமெரிக்காவில்தான் ஆரம்பித்தது, அந்த நாட்டின் குடியரசுத் தலைவர்மீதே இந்தப் பழி சாட்டப்பட்டது, ஒருத்தியல்ல, பல பேர்! இன்றல்ல, பல ஆண்டுகள் முன்பிருந்தே அவர் தவறாக நடந்துகொண்டதாக இப்போது குற்றம் சாட்டுகின்றனர். இதில், வேடிக்கை என்னவென்றால், அந்த நாட்டு கலாசாரத்தில் பொது இடத்தில் ஒருவரோடு ஒருவர் எந்த உறவுமில்லாமலே உதட்டிலே ஆணும் பெண்ணும் முத்தம் கொடுத்துக்கொள்வதை தவறாக கருதாமல் பண்பாடாக ஏற்றுக்கொள்ளுவார்கள். இரு சாராருமே தங்கள் கற்பு கெட்டுவிட்டதாகவோ, மானம் பறிபோய்விட்டதாகவோ கூறவில்லை, பாலியல் பலாத்காரம் என்றுதான் சொல்கிறார்கள். தெளிவாகத் தெரிகிறது, அது முழுக்க முழுக்க அரசியல் நாடகம் என்பது! அந்த நோய் அடுத்து பிரான்ஸ், இங்கிலாந்து என்று பரவி, இப்போது இந்தியாவுக்கு இறக்குமதியாகியிருக்கிறது......."

சிறிது இடைவெளி! கைதட்டல்!

" இந்த நாட்டில் பல துறைகளிலே அரசியலும் ஒன்று என்பது சரியல்ல; அரசியலே இல்லாத துறை இந்தியாவில் எதுவுமில்லை என்பதுதான் உண்மை!  இதிலேயும் முதலில் பாதிக்கப்பட்டு பெரிய பதவியை இழந்தவர் யார் தெரியுமா? ஒரு மத்திய அரசு மந்திரி! அவர் அரசியலுக்கு வந்தபிறகு தவறு செய்தார் என்று குற்றம் சாட்டவில்லை, வருவதற்கு முன்பிருந்த பத்திரிகைத்துறையில் பல ஆண்டுகள் முன்பு செய்ததாக சொல்லப்படுகிற பழிக்காக! இதில் அரசியல்வாடை வீசவில்லையா? நான் நாடு முழுவதும் சுற்றி வருவதால், கிடைத்த தகவலை வைத்து சொல்கிறேன், மக்கள் மனதில் அதிக இடம் பிடித்துள்ள சில துறைகளில், சினிமா முதலில் உள்ளது. அந்தத் துறையிலுள்ளவர்கள் பல ஆண்டுகளாக அரசியலிலே தலையிடாமல் ஒதுங்கியே இருந்தார்கள். சமீபகாலமாக, ஒருவர் இருவராக நுழையத் துவங்கி இப்போது கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கியதும், அரசியலை முழுநேர தொழிலாக வாழ்பவர்களுக்கு கிலி பிடித்துவிட்டது. என்ன பயம்? தேர்தலில் அரசியல்வாதிகள் பணம், இலவசமாக பொருட்கள் கொடுத்து ஓட்டு சேகரித்து வெற்றி பெற்றார்கள். அது தொடர்ந்து நடக்க முடியாமல் சினிமா தலைவர்கள் தங்கள் முகத்தையும் சினிமா டயலாகைச் சொல்லியும் தட்டிப் பறித்துவிடுவார்களோ என்ற பயமும் வந்துவிட்டது. இது ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் என பாகுபாடின்றி எல்லோரையும் பிடித்துக்கொண்டு ஆட்டுகிறது. இந்த சினிமா தொழிலில் உள்ளவர்கள் அயோக்கியர்கள் என்று முத்திரை குத்திவிட்டால், அவர்கள் செல்வாக்கு இழந்து ஓடிவிடுவார்கள் என்பதுதான் அரசியல்வாதிகள் திட்டம். நீங்கள் இப்படி ஆவேசப்பட்டு ஆயிரக்கணக்கில் கூடியிருப்பதை பார்க்கும்போது, அவர்கள் நோக்கம் ஈடேறிவிட்டதோ என அஞ்சுகிறேன். சினிமாத் தொழில் லட்சக்கணக்கான பேருக்கு சோறு போடும் களஞ்சியம். கலைகளை வளர்க்கும் கூடாரம். பணம் ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடாமல், பல கைகள் மாறுகிற முன்னேற்ற பொருளாதாரம்! அதை வாழவைக்க நமக்குள்ளே உள்ள சில்லறை விரோதங்களை மறந்து ஒற்றுமையாய் ஓரணியாய் நிற்போம்! சூதுசெய்பவர்களை துரத்தியடிப்போம். ஆணும் பெண்ணும் கைகோர்த்து பீடுநடை போட்டு தொடர்ந்து முன்னணியில் நிற்போம்! சரியா?"

விண்ணதிர, மண்ணதிர, எழுந்தது கோஷம், 'சரி'!

கூட்டம் கலைந்து வீடு திரும்பிய கூட்டத்தில், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே சென்றனர்.

" ரமாதேவி பேசினது, அரசியலா, சினிமாவா? பெண்களுக்கு ஆதரவா பேசறாமாதிரி, எதையோ பேசி, முடிவிலே, பெண்கள் எழுப்பின நீதிக்கான குரலையே அமுக்கி அழிச்சு திசைதிருப்பி எல்லாத்தியும் மறந்து ஒற்றுமையா கைகோர்த்து பீடுநடை போட்டு முன்னேறுவோம்னு சொல்லி ஆழக்குழி தோண்டி புதைச்சிட்டாங்களே!......"

" சும்மாவா? அஞ்சு கோடி கைமாறியிருக்குல்லே.........."

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - நீதி கேட்ட குரல்! - ரவைmadhumathi9 2019-01-28 07:33
:o enna solvathendru theriavillai.sila arasiyal vaathigal matra thuraigalil ullor palar makkalai muttaal endru ninaithu seyalpattu kondirukkiraargal. :angry:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நீதி கேட்ட குரல்! - ரவைRaVai 2019-01-28 11:12
That is the misfortune, madam!
We need to seriously tackle it and rid the nation of such criminals. Thanks,Madhumathi9
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நீதி கேட்ட குரல்! - ரவைAdharvJo 2019-01-27 16:11
facepalm I don't want to say anything about this topic sir steam

Well narrated and thanks for the story :clap: :clap:

Keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நீதி கேட்ட குரல்! - ரவைRaVai 2019-01-27 18:03
Dear Jo! I understand you !
Thanks for the compliments.
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Thenmozhi's Avatar
Thenmozhi replied the topic: #1 25 Feb 2019 03:45
enathu Shans kita glamour ilaiya

avangaluku news pochu avvalavu than :p :p
Anusha Chillzee's Avatar
Anusha Chillzee replied the topic: #2 24 Feb 2019 08:42
guess i wanted to say gorgeous :cheer: :cheer:
Bindu Vinod's Avatar
Bindu Vinod replied the topic: #3 23 Feb 2019 22:31
Beautiful ok
Glamourous :blink: :blink:

Anusha Chillzee wrote: Shans forever 21 👩
Why do you even worry about this :-) Even when you age you will be a beautiful and glamorous grandma 😉😉
To answer your question, no nowadays very rarely you hear ppl talking with this slang.

My grandparents, aunts, uncles used to address us (my generation) as makkale. It is sort of pampered way of addressing kids :-)

Shanthi S's Avatar
Shanthi S replied the topic: #4 22 Feb 2019 08:23
:evil: :evil:
Anusha Chillzee's Avatar
Anusha Chillzee replied the topic: #5 22 Feb 2019 05:38
Shans forever 21 👩
Why do you even worry about this :-) Even when you age you will be a beautiful and glamorous grandma 😉😉
To answer your question, no nowadays very rarely you hear ppl talking with this slang.

My grandparents, aunts, uncles used to address us (my generation) as makkale. It is sort of pampered way of addressing kids :-)

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top