Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - நீதி கேட்ட குரல்! - ரவை - 5.0 out of 5 based on 1 vote

" ஏன்டா, அந்த ஹீரோயின் ரமாதேவிக்கு எடுபிடியா இருந்தியே, நல்லா கவனிச்சிகிட்டாங்களே, என்னாச்சு, ஏன் விட்டுட்டே?"

" நான் ஏன் விடறேன், அவங்க விரட்டிட்டாங்க..........."

" ஏன்? என்னாச்சு?"

" அது...வந்து....பிறகு சொல்றேண்ணே, இந்த கூட்டத்திலே வேண்டாம்......"

ஏதோ சுவாரசியமான விஷயமா இருக்கும்போலிருக்கு, என்று மாரிசாமியை ஓரமாக அழைத்துவந்தான்.

" இப்ப சொல்லு!"

"அண்ணே! அந்த நடிகைமேல ரொம்ப பேருக்கு ஆசை உண்டு, ஆனா எப்படி நெருங்கிறதுன்னு தெரியாம, என்னை வந்து ஐடியா கேட்பாங்க! நான் கராறா தெரியாதுன்னு சொல்லி நழுவிடுவேன், ஒழுங்கா வேளைக்கு சாப்பாடு கிடைக்கிறதை யாராவது கெடுத்துப்பாங்களா? உஷாராயிருந்த என்னை அந்த இடத்திலிருந்து விலக்கிட்டு, தன் ஆளா வைச்சிட்டா தோதாயிருக்கும்னு, ஒரு நடிகர் ஹீரோயின்கிட்ட என்னைப்பற்றி தப்பா வத்தி வைச்சுட்டாரு......."

"அப்படியென்ன.........?"

" அந்த அம்மாவைப் பற்றி அவதூறா எல்லாரிடமும் பேசறேன்னு........"

" அடப் பாவிங்களா! இப்படியா தன்னோட உடற்பசிக்காக, ஒரு ஏழையோட வயத்திலே அடிக்கிறது!"

" ரொம்ப யோக்கியன்மாதிரி பேசுவானுவ, சுத்த, வடிகட்டின, அயோக்கியனுங்க! இவங்களுக்கு ஆதரவா எம்மாம் பெரிய கூட்டம்!"

கூட்டத்தில் சலசலப்பு ஏற்படவே, இருவரும் பழைய இடத்துக்கு திரும்பினர்.

மேடையிலே யார் யாரோ வந்து அமர்ந்தனர். வரவேற்புரை என்ற பெயரிலே, ஒருவர் மைக் முன்னே நின்று பேசத் துவங்கினார்:

" .................இதுதான், இப்ப நம்ம பிரச்னை! பல லட்சம் கோடி ரூபாய் புரளுகிற தொழில்லே, யாரோ ஒருத்தர் எங்கோ ஏதோ தவறு செய்ததனாலே, இந்த தொழிலையே நசுக்க, ஒழிக்க, சில பத்தினிங்க கிளம்பியிருக்காங்க! நாம சொல்றதெல்லாம் இதுதான்! லட்சக்கணக்கான ஏழை தொழிலாளிகள் வயத்திலே அடிக்காதீங்க! தனிப்பட்ட முறையிலே தப்பு செய்கிற நபர்மீது வழக்கு போடுங்க! ஆனா தொழிலே சாக்கடை, ஒருத்தன்கூட நாணயஸ்தன் இல்லேன்னு கொடி பிடிக்காதீங்கன்னு தான் கேட்டுக்கிறோம். முதல்லே, சில தீர்மானங்களை படித்து முன்வைக்கிறேன், அவைகளை இந்த கூட்டம் ஒருமனதாக நிறைவேற்றணும்னு கேட்டுக்கிறேன்......"

அவரை அடுத்து சிலர் பேசுகிறபோது, கூட்டத்திலிருந்து வெளியேறும் நபர்கள் கணிசமாயினர். அதை கவனித்த, கூட்டத்தலைவர், மைக் முன் வந்து, " ஓர் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு! இந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ள முன்னனி நடிகை, இந்திய திரைவானில் நிரந்தரமாய் சுடர்விடும் தாரகை, ரமாதேவி வந்துகொண்டிருக்கிறார். தயவுசெய்து அமைதியாய் இருந்து ஒத்துழைக்குமாறு வேண்டுகிறேன். இப்போது, உங்கள் அபிமான முன்னணி நடிகர் தமிழ்நேசன் சில வார்த்தைகள் பேசுவார்....."

"இன்றைய வாழ்வில், பெண்கள் எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு ஈடாக அதிக அளவில்  பங்கு பெறுகிறார்கள். நல்ல விஷயம். குடும்பத்தில் ஆண், பெண் இருவரும் சம்பாதிக்கவேண்டிய கட்டாயம், விலைவாசி உயர்வால் ஏற்பட்டிருக்கிறது. சினிமாத் தொழில்போல, மருத்துவ தொழில், ஆசிரியர் தொழில், நெசவுத்தொழில், தீப்பெட்டி தொழில் என எங்கும் எதிலும் பெண்கள் உள்ளனர். தவறுகள் யாரோ ஒருவர், இருவர் செய்யலாம். அதற்காக, சினிமா தொழிலில் உள்ள பெண்கள் ஊரைக்கூட்டி செய்திகள் மூலமாகவும் தொலைக்காட்சிவாயிலாகவும் விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு, தொழிலில் உள்ள ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்தையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவது தவறு....."

' ரமாதேவி! வாழ்க!!' என்று ஒரு பக்கத்திலிருந்து கோஷம் எழும்பவே, கூட்டம் அந்தப் பக்கம் பார்த்தது. ஆம், ரமாதேவி வந்துவிட்டாள்.

பேசிக்கொண்டிருந்த நடிகர் பேச்சை முடித்துக்கொண்டு அமர்ந்தார்.

கூட்டத் தலைவர் ரமாதேவியை வரவேற்று மேடையில் நடுநாயகமாக அமர்த்திவிட்டு மைக் முன் நின்றார்:

"பிரபல முன்னணி நட்சத்திரம் ரமாதேவி திரையுலகம், கலையுலகத்துக்கு மட்டும் சொந்தமல்ல, அரசியல்வானிலும் தேசீய கட்சி ஒன்றின் பாராளுமன்ற உறுப்பினர். மாதர் முற்போக்கு சங்கத்தின் தேசீயத் தலைவி! இந்த பிரச்னையில் நடுநாயகமாக நின்று நியாயத்தை எடுத்துரைக்கக்கூடிய தகுதி அவருக்குண்டு. அவர் பேசும்போது, தயவுசெய்து குறுக்கிடாமல், அமைதியாய் இருக்க வேண்டுகிறேன்...ரமாதேவி அவர்கள் பேசுவார்......."

பெரும் கைதட்டலை பெற்றுக்கொண்டு, தலை குனிந்து, வணக்கம் செலுத்திவிட்டு நான்கு பக்கமும் பார்த்து கையசைத்துவிட்டு பேச்சை துவக்கினார்.

" தலைவர் அழகாகச் சொன்னதுபோல, நான் எந்த தனிப்பட்ட துறைக்கும் ஏகபோக சொந்தமல்ல, நான் பொதுமக்களுக்குத்தான் சொந்தம்!"

என கூறிவிட்டு, சற்று நிறுத்தினார். எதிர்பார்த்ததுபோல, கூட்டம் கைதட்டி பாராட்டியது.

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - நீதி கேட்ட குரல்! - ரவைmadhumathi9 2019-01-28 07:33
:o enna solvathendru theriavillai.sila arasiyal vaathigal matra thuraigalil ullor palar makkalai muttaal endru ninaithu seyalpattu kondirukkiraargal. :angry:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நீதி கேட்ட குரல்! - ரவைRaVai 2019-01-28 11:12
That is the misfortune, madam!
We need to seriously tackle it and rid the nation of such criminals. Thanks,Madhumathi9
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நீதி கேட்ட குரல்! - ரவைAdharvJo 2019-01-27 16:11
facepalm I don't want to say anything about this topic sir steam

Well narrated and thanks for the story :clap: :clap:

Keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நீதி கேட்ட குரல்! - ரவைRaVai 2019-01-27 18:03
Dear Jo! I understand you !
Thanks for the compliments.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top