Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - தன் கையே தனக்குதவி - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - தன் கையே தனக்குதவி - சசிரேகா

angry

ஸ் ஸ்டாப் காலை 8.00 மணி

அவளேதான்

மிடில்கிளாஸ் குடும்பம், விலைக் குறைவான சாதாரண காட்டன் புடவையில் தோளில் கைப்பையுடன் வழக்கமாக செல்லும் பஸ்ஸிற்காக ஸ்டாப்பிங்கில் காத்திருந்தவள் மனதில் அன்று பெரும்புயலே வீசயது.

இன்றும் அதுவேதான் நடக்கும், ஆமாம் என்ன செய்வது கூட்ட நெரிசலில் நடக்கும் விசயங்களை பெரிதுபடுத்தினால் நம் மானம் போகும், அதற்காக 1 வாரமாக ஒருவன் தன்னிடம் நடந்துக் கொள்ளும் கீழ்தரமான முறையை நினைத்து பயந்து கவலைப்பட்டு எத்தனை நாள் ஓடுவது.

அவனுக்கு இதே வேலை போலும், சரியான பீக் ஹவரில் பாய்ன்ட் டூ பாய்ன்ட் பஸ்ஸில் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் பெண்களின் மத்தியில் இடம் பிடித்து அவர்களிடம் தரைக்குறைவான செயல்களை செய்வது

பெண்களில் சிலர் அவனை பார்த்து முறைப்பார்கள், சிலர் மனதில் திட்டிக் கொள்வார்கள், சிலர் அவன் செய்யும் கீழ்த்தரமான செய்கையால் விலக முயல்வார்கள், சிலரோ உதவிக்கு ஆள் தேடுவார்கள் என்ன ஆனாலும் அவன் செய்யும் செயல்களை அவன் விடுவதில்லையே அவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது

அனைத்து பெண்களும் கஷ்டப்படும் வாழ்க்கை வாழ்பவர்கள், வேலைக்கு சென்றால்தான் வீடு நடத்த முடியும் அளவு சிரமத்தில் இருப்பவர்கள், வசதியில்லாமல் நடந்து செல்லவும் முடியாமல், பஸ் பிடித்து தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு செல்வார்கள், சீக்கிரமாக வேலைக்குச் செல்ல வேண்டும், சிறிது தாமதமானாலும் அங்கிருக்கும் மனசாட்சியில்லாத முதலாளி திட்டும் திட்டுக்களை கேட்டுக் கொள்ள வேண்டும், அது ஒரு கொடுமை என்றால் பஸ்ஸில் இன்னொரு கொடுமையுடன் பயணித்து பத்திரமாக வீடு திரும்ப வேண்டும்

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

காலியான பஸ்கள் பின்னால் வந்தாலும் நேரத்திற்கு சென்றால்தானே மாத சம்பளத்தில் கை வைக்க மாட்டார்கள், அதனாலே பல பெண்கள் கூட்ட நெரிசல் இருந்தாலும் சில தொல்லை கொடுக்கும் ஆட்கள் இருந்தாலும், விருப்பமின்றி வேறு வழியின்றி தினமும் பயணிக்கிறார்கள் அதில் அவளும் ஒருத்தி

கல்லூரியில் படித்து முடித்த உடனே அவளுக்கு ஒரு வேலை கிடைத்து, அந்த வேலைக்காக பஸ்ஸில் செல்ல வேண்டிய நிலைமை வரும் போது அதை பெரிதாக அவள் எண்ணவில்லை,  மற்ற பெண்களுடன் பேருந்தில் செல்வதால் என்னவாகிவிடும் என நினைத்தாள், அவள் செல்லும் நேரத்தில் மகளிர் மட்டும் செல்லும் பஸ்கள் வருவதில்லை, அது வேறு நேரம் என்பதால் அந்த பஸ்க்காக காத்திருந்தால் வேலைக்கு தாமதமாகிவிடும், வேலைக்குச் சேர்ந்து சில நாட்கள் கூட ஆகவில்லை, தாமதமாக சென்றால் உயர் அதிகாரியின் கோபமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பதை விட கடினமானது வாழ்க்கையில் எதுவுமில்லை என வேலைக்கு சேர்ந்த 1 வாரத்திலும் அக்கம் பக்கம் வேலை செய்யும் பெண்கள் சொல்லிய அவர்களது அனுபவத்திலும் புரிந்துக் கொண்டாள்

ஆயினும் என்ன செய்வது அவள் செல்லும் பஸ்ஸில் தானே அவன் வருகிறான், அவன் தன்னிடம் மட்டும்தான் இப்படி நடந்துக் கொள்கிறானா அல்லது மற்ற பெண்களுடனுமா அல்லது தனக்கு மட்டும் அப்படி தோன்றுகிறதா, உண்மையில் கூட்ட நெரிசல் காரணமாக அவன் தெரியாமல் தவறாக நடந்துக் கொள்கிறானா இல்லை உண்மையில் அவன் வேண்டுமென்றே கூட்ட நெரிசல் என காரணம் காட்டி தன்னிடம் வக்கிரமாக நடந்துக் கொள்கிறானா என புரியாமல் குழம்பியே போனாள். 

பள்ளிக்கு சைக்கிளிலும் கல்லூரி வந்ததும் கல்லூரி பேருந்தில் சென்று வந்தவளுக்கு இந்த பாய்ண்ட் டூ பாய்ண்ட் பஸ் முதல் நாளே கொடுமையாக இருந்தது. அவ்வளவு கூட்டம் முதல் நாள் வேலைக்கு செல்வதால் நல்ல தரமான புடவையில் ஏறியவள் தன் ஆபிஸ் இருக்கும் ஸ்டாப் வரும் போது இறங்கி தன்னையே பார்த்தாள், இஸ்திரி போட்டு மடிப்பு வைத்து அழகாக கட்டிவந்த புடவை கூட்ட நெரிசிலில் கசங்கியே போனது முதல் நாளே தனது நிலையைக் கண்ட முதலாளி முகம் சுளித்தான், அன்று மாலை வீடு திரும்ப அதே பஸ் ஏறியும் ஏற்கனவே கசங்கிய புடவை இன்னும் கசங்கி விட்டால் கிழிந்து விடும் நிலைமை உருவாகவே சட்டென ஒரு முடிவு எடுத்தாள்

நல்ல புடவை கட்டிசெல்வதை விட சாதாரண புடவையில் செல்வது உத்தமம் என்று வேலைக்குச் சென்று சம்பளம் வாங்கி சேமித்து வைத்து ஒரு இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டால் நிம்மதி என நினைத்து மறுநாள் தான் செல்லும் பஸ்ஸில் ஏறினாள். முதல் நாள் என்பதால் அவன் அவளிடம் வரவில்லை, அதே பஸ்ஸில் இருவேளை சென்று வருவதையும் அந்த பஸ்ஸிற்கு புதிது என்றும் அவளது வெகுளியான முகத்தை வைத்தே ஆயிரமாயிரம் கணித்துவிட்டான் அவன்.

அதனால் 2வது நாளே மெல்ல அவளிடம் நெருங்கி வந்தான், காரணமில்லாமல் அவன் தன் மேல் சாய்வதை நினைத்து அவனை கேள்விமுகத்துடன் பார்க்க அவனோ கூட்ட நெரிசல் என்ன செய்வது என சொல்ல அவளும் அதை உண்மையென நினைத்து அமைதியானாள். மாலையிலும் அவனே அவள் பின் நின்றான், அப்போதும் அதே செயலை அவன் செய்ய ஏறிட்டுப் பார்த்தாள் அவனும் அதையே சொல்ல இம்முறை நொந்தே போனாள்.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: சிறுகதை - தன் கையே தனக்குதவி - சசிரேகாரவை 2019-03-15 18:32
ஏழு பெண்களால், பத்து ஆண்டுகளாக நடத்தப்படுகிற ஒரு வெப்சைட்டில், ஏராளமான பெண்கள் பல ஆண்டுகளாக தொடர்கதைகள் எழுதுகிற களத்தில், நாட்டில் நடக்கிற பெண்-விரோத அட்டூழியங்களை கண்டித்து ஒரு பெண் துணிந்து எழுதியுள்ள கதைக்கு, குறைந்தபட்ச பாராட்டு கூட தெரிவிக்க மற்ற பெண்கள் முன்வரவில்லையே என்று வருந்துகிறேன். இந்த நாட்டின் சாபக்கேடு! பெண்களுக்கு ஆதரவு தர பெண்களே தயங்குகின்றனர்.
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - தன் கையே தனக்குதவி - சசிரேகாViji. P 2019-03-14 11:42
:clap: :clap: :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - தன் கையே தனக்குதவி - சசிரேகாmadhumathi9 2019-03-13 07:31
:sad: pengal edhukkellam payappada vendi irukku.but thairiyam velai seigirathu.but ella idathilum idhupol nadakka mudiyuma? Great story sasi.vaaltugal. :clap: :clap: :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - தன் கையே தனக்குதவி - சசிரேகாரவை 2019-03-13 10:07
மதுமதிம்மா! பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமையை கண்டித்து எல்லோருக்கும் எழுது! பெண்களுக்கு பெண் இனமே திரண்டு வந்து ஆதரவு தரவேண்டிய நேரமிது!
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - தன் கையே தனக்குதவி - சசிரேகாரவை 2019-03-13 06:52
Sasi!
பொள்ளாச்சி சம்பவம் நடந்திருக்கும் நிலையில், உன் கதை சரியான நேரத்தில் வந்திருக்கிறது. பொள்ளாச்சி கொடுமையை கண்டித்து கட்டுரை எழுது!
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top