Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - ப ண மா? உ ற வா? - ரவை - 5.0 out of 5 based on 2 votes

தாய் பத்மாவும் பிச்சையும்தான் சிக்கனமாக இருந்து கீழ்வாரிசு இருவரையும் படிக்கவைத்து, கல்லூரிப் படிப்புக்கு அவர்களை மூத்தவர்களிடம் அனுப்பிவைத்தனர்.

ஆளுக்கொரு தம்பியை படிக்கவைத்து, அவர்களுக்கு நல்ல உத்தியோகமும் கிடைக்க வழி செய்தனர், மூத்தவர்கள் இருவரும்!

அந்த காலகட்டத்தில், தாய் பத்மாவும் பிச்சையும் மட்டுமே உள்ளூரில் தனியே வாழ்ந்தனர். பிச்சையின் குறைந்த வருமானத்தில் கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை!

அதற்கும் வந்தது, சோதனை! பிச்சைக்கு வேலை செய்யும்போது, விபத்து ஏற்பட்டு, கால் எலும்பு முறிந்து அவன் இயற்கையாக நடக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டான். ஏற்கெனவே படிப்பை பாதியில் விட்டவன், காலின் இயலாமையும் சேரவே, அவன் சம்பாதிக்கும் சக்தி வெகுவாக குறைந்தது!

அவனை கூடப்பிறந்தவர்கள் எவரும் தங்களுடன் வைத்துக்கொள்ள மறுத்துவிட்டனர். அதனால், நால்வரும் அனுப்பிய சிறுதொகையில்,பத்மா எப்படியோ பிச்சையையும் கவனித்துக்கொண்டு தானும் வாழ்ந்தாள்.

பிச்சைக்கு வயதாகிக்கொண்டே இருந்ததால், தாய் பத்மா அவனுக்கு திருமணம் செய்துவைக்க, மூத்த மகன்களிடம் கூறினார்.

" அம்மா! பிச்சைக்கு யாரும்மா பெண் தர முன்வருவார்கள்? அவனே எங்கள் உதவியில் வாழ்கிறான், நடக்க முடியாத உபாதை வேறு! அதனாலே அவனுக்கு நல்லகாலம் வரும்வரை பொறுமையாயிருப்போம். அதற்காக, அவன் தம்பிகள் திருமணத்தை தள்ளிப்போடவேண்டாம். அவர்களை மணக்க நல்ல இடத்துப் பெண்கள் தயாராயிருக்கிறார்கள்......." என்று பிடிவாதமாக சொல்லி, சொல்லியபடியே பிச்சையின் தம்பிகளுக்கு திருமணத்தை முடித்துவைத்தனர்.

தாய் பத்மாவுக்கு சொல்லமுடியாத வருத்தம். குடும்பத்தின் நலனுக்காக, தனது படிப்பை தியாகம் செய்து வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றியவனை அதே குடும்பம் கைவிட்டதை நினைத்து வருந்தி, காளி கோவிலுக்குச் சென்று, அம்மனிடம் வாய்விட்டு புலம்பினாள்.

அதைக் கேட்டபின், சும்மா இருப்பாளா அம்பாள்? 

" அம்மா!" என்ற குரல் கேட்டு பத்மா திரும்பிப் பார்த்தாள். 

" நீங்க என்னை இதற்குமுன் பார்த்ததில்லை. எனக்கு உங்களை பிச்சையின்மூலம் தெரியும். அவனும் நானும் பள்ளியிலிருந்து கல்லூரி வரை சேர்ந்து படித்தவர்கள். நாங்களிருவரும் நெருங்கிய நண்பர்கள். பாவம்! பிச்சை பாதியில் படிப்பை நிறுத்தும்படியாகிவிட்டது. அப்போது அவன் என்னிடம் சொல்லிவிட்டுப் பிரிந்தது, இன்னமும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. " லட்சுமி! நாமொன்று நினைக்க, தெய்வம் வேறொன்று நினைக்கிறது! நீ என்னை மறந்துவிடு. உன் வழியிலே முன்னேறி சிறப்பாக வாழ என் வாழ்த்துக்கள்." என்றான்.

நான் தொடர்ந்து படித்து எம்.சி.ஏ. கம்ப்யூடர் படிப்பு முடித்து, வேலையில் சேர்ந்துவிட்டேன். பிச்சைக்கு விபத்தில் கால் எலும்பு முறிந்து படுத்திருப்பது தெரியும்.

அம்மா! நீங்க அம்மனிடம் புலம்பினதைக் கேட்டேன். கவலைப்படாதீங்க! நான் பிச்சையை கல்யாணம் செய்துக்கிறேன், உங்க ரெண்டுபேரையும் வாழ்நாள் முழுதும் காப்பாத்தறேன். இது சத்தியம்!" 

மற்ற பிள்ளைகளும் தாங்கள் இனி அவனுக்காக மாதாமாதம் பணம் அனுப்பவேண்டியதில்லை என்ற மகிழ்ச்சியில், வரவேற்றனர்.

அதே காளி கோவிலில், அம்மனை சாட்சியாக்கி, எளிமையாக பிச்சை-லட்சுமி திருமணம் நடந்தது!

லட்சுமியின் கடுமையான உழைப்பினால் கிடைத்த வருமானத்தில், பத்மாவின் மேற்பார்வையில் குடும்பம் எளிமையாக சீராக நடக்க, பூபதியும் பிறந்து, வளர்ந்து, பெரியவனாகிவிட்டான்!

பிச்சையும், லட்சுமியும், ஏன் பத்மாவும்கூட மனதிற்குள் வெதும்பிக்கொண்டிருக்கிற வேதனைகளையெல்லாம் பேரன் பூபதி பாட்டியிடம் கேள்விகளாகத் தொடுத்துக்கொண்டிருந்தான்.

" பாட்டி! எங்கப்பா, தனக்கு முன் பிறந்த இரண்டு பேரையும் முறையா " அண்ணே" ன்னு கூப்பிடறாரு, ஆனா உன் முதல் இரண்டு பிள்ளைகளை "அண்ணே"ன்னு கூப்பிடற உன் கடைசி இரண்டு பிள்ளைகளும், அவங்களுக்கு முன் பிறந்த எங்கப்பாவை மட்டும் "அண்ணே"ன்னு கூப்பிடாம, " டேய் பிச்சை" ன்னு கூப்பிடறாங்களே, அது ஏன்?"

தங்கள் மனதுக்குள் புகைந்துகொண்டிருந்த வேதனையை, பூபதி வெளிப்படையாக கேட்டபோது மூவரும் சிறிது நேரம் திகைத்தனர். சமயத்தில் புத்திசாலித்தனமாக கேள்விக்கு விடை தந்தான், பிச்சை!

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - ப ண மா? உ ற வா? - ரவைAdharvJo 2019-03-15 23:20
Started with mild humor and ended with remarkable message uncle :clap: :clap: Let us not under or over estimate the value of money... pavam money ena thappu panicho money ya vandhu porandhu irukku facepalm I would say rendume important which you have very brilliantly depicted. Not to chase money but podhumana alavu earn panithane aganum uncle :yes: panam illanalum sometimes nala relationship irundhalum podhum...Like pichai!!
thank you for ur valuable story. Keep rocking.
Loads of work so couldn't read on time. :yes:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ப ண மா? உ ற வா? - ரவைரவை 2019-03-16 07:32
அன்புள்ள அதர்வா ஜோ! என் மனதை புரிந்துகொண்டு விளக்கம் தந்துள்ளமை, சிறந்த நட்பின் அறிகுற! மிக்க நன்றி! நீங்கள் பாராட்டு எழுதுகிற அருமையை பார்த்தால், நீங்கள் எப்போது கதை எழுதப்போகிறீர்கள் என கேட்கத் தூண்டுகிறது.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ப ண மா? உ ற வா? - ரவைabimahesh 2019-03-14 22:49
Great Story Sir!! Boopathy, appa, amma,paati ellarumae super... Kadavul unmaiya anbu vachirupavangalai paathupaar.. :thnkx: Sir
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ப ண மா? உ ற வா? - ரவைரவை 2019-03-15 05:39
Dear Abhimahesh,
Thanks for your loving message and support.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ப ண மா? உ ற வா? - ரவைSaran Sakthi 2019-03-14 16:11
Really superb... Good concept of the story and story lines are awesome.... This is the first story I read in chillzee... Thank you so much for this great one'
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ப ண மா? உ ற வா? - ரவைரவை 2019-03-14 17:00
Dear Saran Sakthi,
I am so fortunate that the very first story you read in Chillzee is mine and you are immensely pleased with it. Please continue to read all the contributions of all writers in Chillzee and support them! Thanks.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ப ண மா? உ ற வா? - ரவைmadhumathi9 2019-03-14 15:15
:hatsoff: to you sir.kathaiyil kurippittathu appadiye eatrukolla padavendiya ondruthaan. Aanaal sila per thaay thanthaiyai paarthu vanthaalum avargalaal munnera mudiyaamal irukkiraargale enna kaaranam? Aandavan thappu seigiravargallukku thandanaiyum, udhavi seivorukku parisaiyum kodukka vendum endru ninaippen.nalla kathai sir.mikka nsndri.kathaiyin moolamaaga mana niraivu kidaikkirathu. (y) :clap: :-) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ப ண மா? உ ற வா? - ரவைரவை 2019-03-14 17:04
Dearest Madhumathi9,
Thanks and pleased you liked the story!
Believe me, we are not equipped with the necessary level of intellect to understand the reason behind the worldly occurances. Therefore let us accept whatever happens and carry on!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top