Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - அவளை மடக்கறேன், பார்! - ரவை - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுகதை - அவளை மடக்கறேன், பார்! - ரவை

 

thinking

சினிமாத் துறையில் உலவுகிற ஒரே பேச்சு, முன்னணி நடிகை வசுமதியைப் பற்றித்தான்!

அவள் அழகை, நடிப்பை, வெற்றியை, சம்பளத்தைப் பற்றியல்ல;

அவள் யாருக்கும் அடங்கமாட்டாள்! திமிர் பிடித்தவள்!

தயாரிப்பாளர் தாமு, டைரக்டர் பாலு, கதாசிரியர் வேணு மூவரும் நட்சத்திர ஓட்டலில் ரூம் எடுத்து அடுத்து தயாரிக்கவிருக்கும் திரைப்படம் பற்றி கலந்தாலோசித்துக்கொண்டிருந்தனர்.

 " டைரக்டர் சார்!........"

 " பாலுன்னு கூப்பிடுங்கய்யா!"

 " சரி, பாலு! நம்ம கதாசிரியர் ரொம்ப ராசிக்கார எழுத்தாளர்........."

 " தெரியும், ஐயா! என்னுடைய முதல் படமே, இவர் எழுதின கதைதான்! நூறுநாள் ஓடித்து, படம்!"

 " என்னைப்பற்றி உங்க ரெண்டுபேருக்குமே நல்லாத் தெரியும்! இதுவரையிலே, நான் தயாரித்த இருபது படங்களிலே, மூணு ஓகோன்னு ஓடி நல்ல லாபம் தந்தது, பத்து படம் நஷ்டமில்லே, ரொம்ப லாபமுமில்லே, கையை கடிக்காம போச்சு, மீதி ஏழு படத்திலே எனக்கு நஷ்டம் முப்பதுகோடி ரூபாய்!........."

 " ஐயா! நீங்க இந்த துறையிலே முப்பது வருஷமா இருக்கீங்க, ஒரு படம் வெற்றி அடையவோ, சுமாரா போகவோ, நஷ்டப்படவோ, என்ன காரணம்னு தெரிந்தவங்க! நாங்க ரெண்டு பேரும், உங்களுக்கு தர உத்தரவாதம், கதை தேர்ந்தெடுக்கிறது, ஹீரோ, ஹீரோயின் செலக்ட் பண்றது, ரெண்டும் நீங்க முடிவு பண்ணுங்க! மற்றதை நாங்க பார்த்துக்கிறோம்..........."

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

" ஆமாம் ஐயா! டைரக்டர் சொல்றபடி, நீங்க செலக்ட் பண்ற கதைக்கு, திரைக்கதை, வசனம் நான் எழுதித்தரேன்!"

" வெரி குட்! சமீபத்திலே வெளியாகி பெரிய வெற்றி தந்த படம் சர்கார், 2.0, அதிலே ஒண்ணு அரசியல் கதை, இன்னொன்ணு சூப்பர் ஸ்டார் நடிச்சது, டெக்னிகலா சூப்பராயிருந்தது, நமக்கு ரெண்டுமே வேண்டாம், முதலீடு ரொம்ப இழுக்கும்! ஆனா, ஹீரோயின் நடிப்பினாலே, வெற்றி அடைந்த படங்கள் சமீபத்திலே நாலைந்து வந்திருக்கு, அதிலே ஒரு ஹீரோயின், அதுதான் வசுமதி,ரெண்டு படங்களில் நடித்து வெற்றி வாங்கித் தந்திருக்கா, அவளையே நம்ம படத்துக்கு, ஹீரோயினா போடுவோம்....."

" ஐயா! உங்களுக்கு தெரியாத விஷயமில்லே, அந்த ஹீரோயின் ரேட் படத்துக்கு படம் அதிகரித்து இப்ப பன்னிரண்டுலே நிக்குதாம், தவிர கதை பிடிச்சிருந்தால்தான், ஒத்துக்குவாளாம், மூணாவது கொஞ்சம் கர்வம் ஜாஸ்தி.........."

" பாலு! எனக்கு எல்லாம் தெரியும், அவளை நான் டீல் பண்றேன், யார் யாரை எப்படி மடக்கணும்னு எனக்குத் தெரியும். அவளை நான் சென்டிமெண்டாலே மடக்கறேன், பார்! கவலைப்படாதே!"

 " ஐயா! கதை, சரித்திரப் பின்னணியா, இன்றைய அரசியலா, தமிழ்நாடா, இந்தியாவா?"

 " புராணம்! திரௌபதி! முடியுமா?"

" ஐயா! பாரதியார் எழுதிய 'பாஞ்சாலி சபதம்' நமக்கு கைகொடுக்கும்! பெரிய ஹிட்டாயிடும், ஏ, பி, சி, டி, எல்லா சென்டரிலேயும், சந்தேகமேயில்லை!"

" ஆமாம், ஐயா! கதையிலே, இன்றைய அரசியல் சாயலை கொண்டுவந்தா, மக்கள் ரொம்ப ரசிப்பாங்க!"

" நானும் அப்படித்தான் நினைக்கிறேன், ஆனா, நீங்க கவனிச்சிக்க வேண்டிய விஷயம், செலவு அதிகமாகாமல், பார்த்துக்கணும், ஓ.கே.யா?"

" ஓ.கே."

" இந்த படத்திலே, ஹீரோயின்தான் முக்கியம். நானே வசுமதியை பார்த்து ஃபிக்ஸ் பண்றேன், மற்றதை நீங்க......"

" கவனிச்சிக்கிறோம்."

" சரி, அடுத்து எப்ப மீட் பண்றதுன்னு நான் போன் பண்றேன், அதுவரையிலும், நீங்க உங்க வேலையை பாருங்க!"

 ஓட்டல் அறையிலிருந்து வெளிவந்த டைரக்டர் பாலுவும் கதாசிரியர் வேணுவும் கவலையுடன் இருந்தனர்.

 " வேணு! இவர் ஏன் இப்படி பிடிவாதமாக வசுமதிதான் வேணுங்கிறாரு, அவ பாதி படம் எடுக்கிறபோது, தகராறு பண்ணுவாளே, கோடிக்கணக்கிலே பணத்தை போட்டவரு தாங்குவாரா? வயசானவர், பாவம்!, ஏதாவது ஆயிடுச்சின்னா, உலகம் நம்மையும் சேர்த்து பழி சொல்லுமே..........."

" பாலு சார்! கவலைப்படாதீங்க! பெரியவரிடம் சமயம் பார்த்து, எப்படி பேசணுமோ அப்படி பேசி, நம்ம வழிக்கு கொண்டுவரேன், கவலைப்படாதீங்க!"

 மறுபுறத்தில், தாமுவின் கார், வசுமதியின் வீட்டுவாசலில் நின்றதும், அதிலிருந்து இறங்கிய தாமுவின் உதவியாளர் கணேசன் வசுமதியின் வீட்டுக்குள் நுழைந்தது.

 " நான் புரொட்யூஸர் தாமுவின் உதவியாளர். வசுமதி அம்மாவை பார்க்கணும்........."

 " என் பெண்தான் வசுமதி! வரவங்க எல்லாரும் அவளை பார்க்த்தான் வருவாங்க, நீங்கதான் என்னைப் பார்க்க வந்திருக்கிற முதல் நபர்! உள்ளே வாங்க!"

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - அவளை மடக்கறேன், பார்! - ரவைAbiMahesh 2019-03-14 22:38
Nice Story Sir!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவளை மடக்கறேன், பார்! - ரவைரவை 2019-03-15 05:43
நன்றி, அபிமகேஷ்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவளை மடக்கறேன், பார்! - ரவைmadhumathi9 2019-03-14 14:20
:clap: :clap: wow arumaiyaa kathai.vaaltugal sir.intha maathiri irunthaal avargalukkum vaaltugal sir. :hatsoff: to you sir.nadigai eppadi irukka vendum endru solli irukkeenga. (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவளை மடக்கறேன், பார்! - ரவைரவை 2019-03-14 18:28
Thanks Madhumma! Happy you liked the story!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top