Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - அவளை மடக்கறேன், பார்! - ரவை - 5.0 out of 5 based on 1 vote

" முத்து! எங்களுக்கும் அது தெரியும். அது ஒருவித தோல்வியின் வெளிப்பாடு! நடிக்க வரும் பெண்களை சுலபமாக தங்கள் பசிக்கு தீனியாக்கிவிடலாம் என்று அனுபவத்தில் உறுதியாகிவிட்டதால், எல்லோரிடமும் அதை எதிர்பார்க்கிறார்கள். அதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கத்தான், வசு கையில் வேலெடுத்து காளிபோல் நிற்கிறாள். விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படமாட்டாள். இதை, முத்து!, முதலில் உங்க முதலாளிக்கு தெரியப்படுத்திவிடு, தெரிந்தபிறகும் வசுவை பார்க்க நினைத்தால், வரட்டும்!"

" அம்மா! உங்க மகள் உதவிக்கு ஒரு செகரட்ரி வைச்சிக்கலையா? அவங்களே நேரடியா டீல் பண்றாங்களா? கொஞ்சம் கஷ்டமாச்சே!"

" வசு எல்லா விஷயங்களிலுமே வித்தியாசமானவ!"

" அம்மா! எங்க முதலாளி எப்ப வரலாம்னு கேட்டுச் சொல்றீங்களா?"

" கொஞ்சம் இரு!"

அவள் உள்ளே போய் சிறிது நேரத்தில் மகளை அழைத்துவந்தாள்.

 முத்து எழுந்து, வசுமதிக்கு வணக்கம் தெரிவித்தான். அவள் பதிலுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, பேசினாள்.

" முத்து சார்! அம்மா உங்களிடம் என்னைப் பற்றி விவரமா சொன்னதுக்கு காரணம், அதைக் கேட்டவுடனேயே ரொம்பப்பேர் என்னைப் பார்க்காமலே, திரும்பிப் போய்விடுவாங்க! நீங்க இன்னமும் இருக்கிறதனாலே, உங்க முதலாளி வித்தியாசமானவர்னு தோணுது, அவர் என்ன விஷயமா என்னை பார்க்கணுங்கிறாரு?"

" அவர் ஒரு சினிமா தயாரிப்பாளர். நீங்க ஒரு முன்னணி நடிகை, உங்களை கதாநாயகியாக வைத்து ஒரு முற்போக்கான படம் எடுக்கத்தான், உங்க சம்மதம் தெரிஞ்சிக்க நேரிலே அவரே வராரு!"

" அவரைப் பற்றி கொஞ்சம் விவரம் சொல்றீங்களா?"

" இதுவரையிலே, இருபது படங்கள் தயாரித்திருக்கிறார். மூணு சூப்பர் ஹிட், பத்து படங்கள் லாபம், மீதி ஏழு படங்கள் நஷ்டம்! முப்பது வருஷமா இந்த ஃபீல்டிலே இருக்கார், லேட்டஸ்டா அவர் தயாரித்த படம் 'மூன்றெழுத்து' பார்த்திருப்பீங்களே,?"

" பார்த்தேன், நல்ல படம்! குறிப்பா பெண்களுக்கு மரியாதை தருகிற படம்! அவருக்கு என் வணக்கத்தை தெரிவியுங்க!"

" அவர் எப்ப உங்களை வந்து பார்க்கலாம்?"

" அவருக்கு என்ன வயதிருக்கும்?"

" அறுபது வயதிருக்கும்."

" அவரோட நான் முதல்லே போனிலே பேசலாமா?"

" தாராளமா! அவர் நம்பர் போட்டுத்தரேன், பேசுங்க!"

முத்து தாமுவிடம் குதூகலமாக வசுமதியின் விருப்பத்தைச் சொல்லி, போனை வசுமதியிடம் தந்தான்.

" வணக்கம், சார்!"

" வணக்கம்மா! முதல் முறை உங்களை நேரில பார்த்து பேசறதுதான் மரியாதை! நான் எப்ப வரலாம்?"

" நன்றி ஐயா! நாம் முதலில் மனிதர்கள், பிறகுதான் தொழில்! நான் வயதிலே, உங்க மகள் மாதிரி! நீங்க சொல்கிற மரியாதை, பெரியவங்களை சின்னவங்க நேரிலே பார்த்து வணங்கி ஆசிர்வாதம் வாங்கிக்கணும், நீங்க ஃபிரீயாயிருந்தா, இப்பவே முத்துவோட உங்களைப் பார்க்க வரட்டுமா?"

" என்னை ரொம்ப பெருமைப்படுத்தறீங்க, வசுமதிம்மா!"

" ஐயா! என்னை நீங்க வசுமதின்னே கூப்பிடலாம், எங்கப்பா வயசு உங்களுக்கு!"

" யு ஆர் வெரி ஸ்வீட்! உங்களை உடனே பார்த்து கையெடுத்து கும்பிடணும்போலிருக்கு, வாங்க! உடனே வாங்க! உங்கம்மாவையும் கூட அழைத்து வாங்க! நானும் என் மனைவியும் எங்க வீட்டுவாசலிலே உங்களுக்காக காத்துக்கிட்டிருப்போம்."

 மூவரும் தாமுவின் வீட்டை அடைந்ததும், காரின் கதவை தாமுவே திறந்து வசுமதியையும் அவள் தாயையும் வரவேற்றார்.

 தாமுவின் மனைவி, ஆரத்தி சுற்றி வரவேற்றாள்.

 " வலதுகாலை எடுத்துவைத்து வாம்மா! எங்களுக்கு மகளில்லாத குறையை தீர்த்துவைம்மா!"

 வசுமதி தலை குனிந்து அடக்கமாக புன்னகை புரிந்தாள். அவள் தாய் பேசினாள்.

 " உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நல்ல மனசு! வசுவை உங்க மகளாகவே பாசத்தோட வரவேற்கிறீங்க!"

 " ரெண்டு பேரும் சோபாவிலே உட்காருங்க!"

 "ஒரு நிமிஷம்! வீட்டுக்கு வந்திருக்கிற மகாலட்சுமிக்கு வீட்டை சுற்றி காட்டவேண்டாமா?"

 நால்வரும் சுற்றிப் பார்த்தனர், வீட்டை! 

 " தாமு சார்! எனக்கு ரொம்ப பிடிச்சது, இந்த வீட்டிலே, பூஜையறை! என் சிநேகிதிகள் வீட்டிலே எல்லாம், மற்ற அறைகள் விசாலமாயிருக்கும், பூஜையறை மட்டும் நாலடிக்கு நாலடி சதுரந்தான்! உங்க வீட்டிலே நேர்மாறா, பூஜையறை, கோவில்மாதிரி விசாலமா பிரகாசமா சுத்தமா இருக்கு! அந்த இடத்திலே நிற்கிறபோதே, கடவுள் தரிசனம் தருகிறமாதிரி உடம்பு சிலிர்க்குது! இல்லேம்மா?"

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - அவளை மடக்கறேன், பார்! - ரவைabimahesh 2019-03-14 22:38
Nice Story Sir!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவளை மடக்கறேன், பார்! - ரவைரவை 2019-03-15 05:43
நன்றி, அபிமகேஷ்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவளை மடக்கறேன், பார்! - ரவைmadhumathi9 2019-03-14 14:20
:clap: :clap: wow arumaiyaa kathai.vaaltugal sir.intha maathiri irunthaal avargalukkum vaaltugal sir. :hatsoff: to you sir.nadigai eppadi irukka vendum endru solli irukkeenga. (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவளை மடக்கறேன், பார்! - ரவைரவை 2019-03-14 18:28
Thanks Madhumma! Happy you liked the story!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top