Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - பாட்டியின் மனக்குறை - ரவை - 5.0 out of 5 based on 2 votes

 அவருக்கு என்மீது விருப்பமில்லை! ஆம், அவர் என்னை விரும்பவில்லை, கடமைக்காக பழகுகிறார், உடலும் உடலும் உரசியதால் பிறந்தன குழந்தைகள், அந்த உரசலின் பின்னே, அவர்மனம் இல்லை, இல்லவே இல்லை!

 இவ்வளவு ஆண்டுகள் கூடி வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லை!

 என்று நினைத்ததும், சரோஜாவின் கண்களிலிருந்து பொலபொலவென கொட்டியது, கண்ணீர்!

 வாக்கிங் போயிருந்த குமாரசாமி வீடு திரும்பியவர், 

சரோஜாவின் கண்ணீரைப் பார்த்துவிட்டு, அதிர்ச்சி அடைந்தார்.

 அருகில் அமர்ந்து அவளை அணைத்து, " என்னாச்சு? ஏன் அழறே? சபேசனோ, சாந்தாவோ உன்னை ஏதாவது வேதனைப்படுத்தினார்களா? சொல்லு! நமக்கு யார் தயவும் தேவையில்லை, என் சேமிப்பும், ஊரில் நமக்குச் சொந்தமான வீடும் இருக்கு, உடனே இங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடுவோம், எனக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம்! எனக்காக நீ காலமெல்லாம் கூட்டுக்குடும்பத்திலே சிக்கி படாதபாடு அனுபவித்திருக்கே, இப்பவாவது, நீ சந்தோஷமாக இருக்கவேண்டும்! சொல்லு!"

 ஆத்மார்த்தமாக உண்மையான பரிவுடன் ஆவேசமாக கூறிய கணவனை அவன் கண்ணுக்குள் ஊடுருவிப் பார்த்தாள். 

 தனது சந்தேகம் அர்த்தமற்றது என்று புரிந்துகொண்டாள். ஆனாலும், எங்கேயோ ஏதோ இடறுகிறதே என்றுமட்டும் உணர்ந்தாள்.

 எழுந்திருந்து, கணவனை கைப்பிடித்து, தங்கள் படுக்கையறைக்குள் அழைத்துச் சென்று அவளை அறியாமலேயே அவரை அழுத்தமாக கன்னத்தில் முத்தமிட்டாள்.

 குமாரசாமிக்கு சரோஜாவின் வித்தியாசமான நடத்தை வினோதமாக இருந்தது.

 சரோஜா பேத்தி சொன்னதை விவரமாக கூறி, அதனால் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தையும் உறுத்தலையும் தெரிவித்தாள்.

 குமாரசாமி சிரித்தார். அப்பாவியான மனைவியை வாழ்வில் முதன்முறையாக அள்ளி அணைத்துக்கொண்டார்.

 " சரோ!........"

 " இருங்க, இருங்க, என்னை எப்படி கூப்டீங்க, இன்னொரு முறை கூப்டுங்க!"

 " சரோ!......."

 " வாழ்க்கையிலே, இப்போதுதான் நீங்க என்னை முதன்முறையாக செல்லமா 'சரோ'ன்னு கூப்பிடறீங்க! எனக்கு உடம்பு புல்லரிக்குது! சிலிர்க்குது!"

 " சரோ! மனம் தன் அன்பை, ஆசையை வெளிப்படுத்த உடலை கருவியாகப் பயன்படுத்தித்தான் ஆகவேண்டும் என்று அவசியமில்லை, இப்ப நாம மூத்தவன் குடும்பத்தோட இருக்கோம். சின்னவன், வேற இடத்திலே இருக்கான், அவன் உடம்பும் நம்ம உடம்பும் உரசாமலேயே, நமக்கு அவனிடம் அன்பு செலுத்த முடியவில்லையா என்ன? அதையும் விடு, இந்த வீட்டிலேயே இருக்கிறவங்களோட, எப்போதும் நாம உரசிண்டேவா இருக்கோம், ஒண்ணு தெளிவா புரிஞ்சிக்கோ! இந்தியாவிலே இருக்கிறவன், மனசாலே, அமெரிக்காவிலே இருக்கிறவனைத் தொடமுடியும். அவன் அதை உணரமுடியும். எப்படின்னு கேள்! 

 நாம் சாப்பிடும்போது, திடுமென பொறை ஏறித்துன்னா, என்ன சொல்கிறோம்? யாரோ நம்மை நினைக்கிறார்கள்னு சொல்றோம் இல்லையா?

 கோவிலுக்குப் போகிறோமே, வெளியிலே உணராத ஒரு வைப்ரேஷனை, எண்ண அலைகளின் சேர்க்கையை, கோவிலுக்குள் உணருகிறோமா இல்லையா? சொல்லு!"

 " ஆமாங்க! புரியுதுங்க! நாம சொல்கிற மந்திரங்களும் தோத்திரங்களும் கடவுளுக்கு போய் சேருதுன்னு பாரம்பரியமா நம்பித்தானே, வேண்டிக்கிறோம்!"

 " என்மேலே வருத்தமில்லையே, சரோ!"

 சரோ தலை குனிந்தாள்.

" இப்ப நான் கேட்கிறேன், நீ ஏன் என்னை இத்தனை வருஷமாக ஒரு முறைகூட கொஞ்சவேயில்லை?"

 அதற்கு பதில் தேடிக்கொண்டிருந்தாள், சரோ என்கிற சரோஜா!.................

.......................................

பழுத்த ஓலைகள் சலசலக்க உரசிக்கொண்டன!

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

Add comment

Comments  
# RE: சிறுகதை - பாட்டியின் மனக்குறை - ரவைmadhumathi9 2019-04-17 14:10
Ippo ulla mukkaalvaasi thiraippadangal idhu polthaanirukkirathu.nallathaieduthu kondu thevai ilaathathai vittuvida vendum thaan.but naam kaatchi vadivil paarkkum pozhuthu manathil aazhamaaga padhinthu vidugirathu. Idhupola padangalai kuzhanthaigal, maanavargal paarppathaal kalaachaara seerkedu earpadugirathu. facepalm enna seivathu? Adharkkum oru vazhi sollungal sir.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பாட்டியின் மனக்குறை - ரவைRaVai 2019-04-18 13:32
Dear madhumathimma!
Thanks
Let me try in my next story
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பாட்டியின் மனக்குறை - ரவைரவை 2019-04-16 21:01
Thanks, Abhimahesh!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பாட்டியின் மனக்குறை - ரவைரவை 2019-04-16 20:57
Thanks Viji!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பாட்டியின் மனக்குறை - ரவைAbiMahesh 2019-04-16 20:32
:o :no: :sad:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பாட்டியின் மனக்குறை - ரவைAdharvJo 2019-04-16 20:17
Uncle, I appreciate your efforts in sharing the message i.e one can shower their love without physical involvement :clap: :clap:

wish the plot could have been little different because grand-daughter oda view is not completely acceptable..That's not the right comparision.Just my POV. Hope u don't take it wrong.

There is no necessity for the directors to portray such scenes in movies. We have kids who watch movies along with us...nee entha kalathulua irukura jo-n ketkadhinga.. :D Also here grand-ma rombha innocent aga irukanga.
I'm missing the right term to express my point. Let's pass on.

Thank you!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பாட்டியின் மனக்குறை - ரவைரவை 2019-04-16 21:00
Desr Jo! I totally agree with you. The scenario is typical of how the gen Y view things and Gen X finds it difficult to adjust!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பாட்டியின் மனக்குறை - ரவைViji. P 2019-04-16 20:16
வித்தியாசமான கதை சார்.இப்போதுள்ள திரைப்பட ங்களில் ஆபாசங்களை சுட்டி காட்டியுள்ளீர்கள். :clap: :clap: :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பாட்டியின் மனக்குறை - ரவைJebamalar 2019-04-16 18:25
Saroja pattyin manakurai தீர்ந்து விட்டது anal விடை தெரியாத கேள்வி 🤔வந்து விட்டது... Different story... Nice
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பாட்டியின் மனக்குறை - ரவைரவை 2019-04-16 18:46
Dear Jebamalar, thanks. Yes, more often we forget to see our back! May be, we cannot!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பாட்டியின் மனக்குறை - ரவைkumar l 2019-04-16 15:09
3:) :now:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பாட்டியின் மனக்குறை - ரவைரவை 2019-04-16 16:23
Thanks Kumar!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பாட்டியின் மனக்குறை - ரவைvedha 2019-04-16 15:07
:angry: :no:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பாட்டியின் மனக்குறை - ரவைரவை 2019-04-16 16:22
Thanks Vedha!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top