Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - புதிய போர்வீரன்! - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - புதிய போர்வீரன்! - ரவை

little boy

" ம்மா! என்கூட படிக்கிறவங்க எல்லாரும் எஸ்கர்ஷன் போறாங்கம்மா! நானும் போணும்மா! ப்ளீஸ்மா!"

" ஸ்கூல்லேதானே அழைச்சிகிட்டுப் போறாங்க, போய்ட்டு வா!"

"அதுக்கு பணம் கட்டணும்மா!"

" ஏன்டா, பள்ளிக்கூடத்திலேதானே அழைச்சிகிட்டுப் போறாங்க.....?"

" இருந்தாலும், முன்னூறு ரூபா கொடுக்கணும்மா, ரெண்டு நாளிலே!"

 " முன்னூறா!?"

 பாவம்! வீட்டுவேலை செய்து குடும்பத்தை பசியில்லாமல் காப்பாற்றிவருகிற பொன்னம்மா, திடீரென பணத்துக்கு எங்கே போவாள்?

 குழந்தையின் முகத்தைப் பார்த்தால், பரிதாபமாயிருந்தது. 

 பெற்றவர்கள், பொன்னம்மாவுக்கு நல்லெண்ணத்தோடு, அவள் பெரும் பணக்காரியாக வாழவேண்டும் என்றுதான், 'பொன் அம்மா' எனப் பெயர் சூட்டினர். ஆனால், விதி வேறுவிதமாக தீர்மானித்துவிட்டது!

 பள்ளியில் எஸ்கர்ஷன் அறிவிப்பை செய்தபோது, மாணவர்கள் எப்படி மகிழ்ச்சியுடன் வரவேற்றிருப்பார்கள், என்பதை பொன்னம்மா நினைத்துப் பார்த்தாள். தன் மகன் வடிவேலுவின் வகுப்பில், அவன் சிநேகிதர்கள் அனைவரும் குதித்து கும்மாளம் போட்டிருப்பார்கள், பாவம்! வடிவேலு! தன்னந் தனியாக முகத்தை உம்னு சோகமாக வைத்துக்கொண்டு, அம்மாவிடம் எப்படியாவது அனுமதி பெற்று சிநேகிதர்களுடன் எஸ்கர்ஷன் சென்று ஜாலியாயிருக்கணும் என தீர்மானித்து, வீட்டுக்கு ஓடோடியும் வந்திருப்பான்!

 இப்போது என்ன செய்வது? முன்னூறு ரூபாய் கடன் வாங்கி மகனை எஸ்கர்ஷன் அனுப்பி அவனை சந்தோஷப்படுத்திவிடலாம்......ஆனால்இது போகப் போக, எங்கெங்கே கொண்டுபோய் விடுமோ! 

 வடிவேலு இப்போது ஏழாவது படிக்கிறான். படிப்பு இலவசம், மதிய உணவு இலவசம், புத்தகங்கள் இலவசம், அவன் படிப்புக்காக எதுவும் தனக்கு செலவில்லை; 

 இப்போது அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விவரம் தெரியத் துவங்கியிருக்கிறது. கூடப் படிக்கிற சிநேகிதர்களில் இவனைப்போல் பரம ஏழை ஒன்றிரண்டு பேர்தான்! நிறையபேர், மத்தியதர வகுப்பை சேர்ந்தவர்கள், நாலைந்துபேர் பெரும் பணக்கார்ர்கள்!

 எஸ்கர்ஷனில் ஆரம்பிக்கிற விஷயம், நாளை மற்றவர்களைப் போல செல்போன் வைத்துக்கொள்ள ஆசைப்படலாம், சினிமாவுக்குப் போக ஆசைப்படலாம், இருசக்கர வாகனம் வாங்க நினைக்கலாம், 

 இன்று வடிவேலுவின் முகம் வாடாமலிருக்க, முன்னூறு ரூபாய் போதும், ஆனால் நாளை மற்றவைகளுக்கு ஆயிரக்கணக்கில் ரூபாய் தேவைப்படுமே! தன்னால் நிச்சயமாக முடியாதே! 

 இப்போது அவன் ஆசை நிறைவேற உதவி செய்துவிட்டால், வடிவேலு பின்னர் அடுத்தடுத்து எல்லாவற்றுக்கும் ஆசைப்படுவானே, அப்போது தன்னால் முடியாதே, அந்த யதார்த்தத்தை வடிவேலுவினால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

 பொன்னம்மா ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். வடிவேலுவிடம் விவரமாகப் பேசி தனது நிலையை உணரச்செய்துவிடவேண்டும்!

 "என்னம்மா! ஒண்ணுமே பேசாம சிலையா நிக்கறே?"

 " வடிவேலு! இப்பத்தான் நீ பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்கே, கஞ்சியை குடிச்சிட்டு, கொஞ்சநேரம் விளையாடிட்டு வா! பிறகு, பேசலாம்!"

 சிறுவன்தானே! விளையாட்டில் மனம் செல்லாமல், விரைவாக திரும்பிவந்து, அம்மாவின் சேலைத் தலைப்பை பிடித்துக்கொண்டு அவளுடனேயே சுற்றி வந்தான்.

 பொன்னம்மாவுக்கு மகனைப் பார்க்க, பரிதாபமாக இருந்தது, மறுபக்கம் ஆண்டவன் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டானே என்று வருத்தமாகவும் இருந்தது.

 முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா? என்று விவரமறியா பருவத்திலுள்ள சிறுவனிடம் கூறமுடியுமா?

 சமுதாயத்தில் ஏழையும் பணக்காரனும் கலந்துதான் வாழவேண்டியிருக்கிறது, ஏழைகளுக்கென, தனி உலகமா படைத்திருக்கிறான், ஆண்டவன்? 

 பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் ஏழையோ செல்வந்தரோ ஒன்றாகத்தான் பழகுகிறார்கள். அடிப்படையில், மொழிச் சிக்கலே முள்ளாய் குத்துகிறது!

 மத்தியதர வகுப்பைச் சேர்ந்த மாணவன் வீட்டில் பெற்றோரும் மற்றோரும் ஆங்கிலம் கலந்து பேசுகிற மணிபிரவாள மொழி, குடிசையில் வாழும் எழுத்தறிவில்லா பெற்றோரின் பிள்ளைக்கு எப்படி புரியும்?

 குடிசையிலிருந்து சுமக்கமுடியாத புத்தகப்பையை முதுகில் ஏற்றிக்கொண்டு ஏழைப்பிள்ளை பள்ளிக்குள் நுழையும்போது, 'சர்'னு அவனருகில் கார் வந்து நிற்க, அதிலிருந்து ஒரு மாணவன் வெளியே வர, டிரைவர் ஓடிவந்து அவனிடம் புத்தகப்பையை நீட்ட, அதை வாங்கிக்கொண்டு அவன் தன்னுடன் பள்ளியில் நுழைவதை பார்க்கிறபோது, தாழ்வுமனப்பான்மை அப்போதே அந்த ஏழை சிறுவனை விழுங்கிவிடவில்லையா!

 மற்ற மாணவர்கள் கையில் கடிகாரம் கட்டிக்கொண்டு வருவதைப் பார்க்கிற ஏழை மாணவன் தன் வெறும் கையை பார்த்துப் பார்த்து ஏங்கமாட்டானா?

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - புதிய போர்வீரன்! - ரவைAbiMahesh 2019-04-20 16:38
Nice Story Sir! :hatsoff: for spreading the importance of education :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புதிய போர்வீரன்! - ரவைரவை. 2019-04-20 10:40
Thanks, Viji!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புதிய போர்வீரன்! - ரவைViji. P 2019-04-20 08:07
:clap: nice story sir. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புதிய போர்வீரன்! - ரவைJebamalar 2019-04-19 19:11
Nice story sir... விழிப்புணர்வு பெற்று ஒவ்வொரு வரும் வாழ்க்கையில் உயரனும்... அந்த தாய் போல சூழ்நிலையை புரிந்து கொள்ள வைக்க வேண்டும்... உங்களோட கதை கருப்பொருள் ஒவ்வொன்றும் அருமை...
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புதிய போர்வீரன்! - ரவைரவை. 2019-04-19 20:56
அன்புள்ள ஜெபமலர்,
தங்கள் தாராளமான பாராட்டு என்னை இன்னும் சிறந்த பல கதைகள எழுத உதவட்டும்! மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புதிய போர்வீரன்! - ரவைmadhumathi9 2019-04-19 13:03
:hatsoff: arumaiyaana kathai sir.eazhai eazhaiyaagavethaan irukkanuma? Kandippaaga avargalum munnerattum. (y) :clap: :GL: sir. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புதிய போர்வீரன்! - ரவைரவை 2019-04-19 15:33
மதுமிம்மா! நமக்கு இந்தக் கதை விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி நாம் ஏழ்மையை விரைவில் ஒழிக்க பாடுபடுவேண்டும் என்பதே என் குறிக்கோள்! உங்கள் பாராட்டுக்கு நன்றி்
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புதிய போர்வீரன்! - ரவைரவை. 2019-04-19 16:24
இந்தக்கதைக்கு நீங்கள் இருவரும் நான் படிக்கும் முன்பே, பாராட்டியதற்கும், முதல் இருவராக வாழ்த்தியதற்கும் விசேஷ. நன்றி, மதுமதிம்மா! ஜோ அதர்வா!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புதிய போர்வீரன்! - ரவைAdharvJo 2019-04-19 12:43
:hatsoff: Excellent message and well presented, uncle :clap: :clap: I pity ponnamma's state however she is lucky enough to have a son like vadivelu :yes: There are mixed group of people, some try to educate their kids to bring a change in near future on the other hand there are good number of people who are still ignorant :sad: and make their kids to toil along for day wage steam wish they do realize the importance of education :yes:

thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புதிய போர்வீரன்! - ரவைரவை 2019-04-19 15:39
அன்புள்ள ஜோ! தங்களைப்போல, மற்றவர்களும் விழித்தெழுந்து ஏழ்மையை ஒழிக்க பாடுபடவேண்டும். பாராட்டுக்கு நன்றி.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top