(Reading time: 6 - 11 minutes)

சிறுகதை - முற்பகல் செய்யின்......! - ரவை

reap

" ப்பா! உங்களைப் பார்க்க, யாரோ வந்திருக்காங்க, உள்ளே வரச்சொல்லட்டுமா?"

" முட்டாள்! நீ படிச்சவன்தானே! நான் எவ்வளவு பிஸியா இருக்கேன், என்னைப்பார்க்க ஊரிலே இருக்கிற பெரிய மனுஷன்லாம், டயம் கேட்டுக்கொண்டிருக்கிறபோது, யாரோ வந்திருக்கிறார், உள்ளே வரச்சொல்லட்டுமான்னு கேட்கிறியே, உனக்கு மூளையிருக்கா? போ! யாரு, என்ன விஷயம்னு கேள்!"

 இந்த உரையாடலை சமையல் அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அவன் மனைவி வெளியே வந்தாள்.

 " ஏங்க! நாம பெத்த ஒத்த புள்ளைங்க, அவன்! என்னமோ, வீட்டு வேலைக்காரனை விரட்டறாப்போல, பேசறீங்க! கண்ணா! நீ போய் உன் வேலையைப் பார்டா! அவராச்சு, வந்துபோறவங்களாச்சு, நமக்கு என்னடா?"

 " ஓ! அவ்வளவு திமிரா! இப்ப சொல்றேன், நல்லா கேட்டுக்குங்க! என் பேச்சுக்கு அடங்கி நடக்கறவங்களுக்கு மட்டும்தான், இந்த வீட்டிலே இடம். மத்தவங்க, இந்த நிமிஷமே மூட்டை முடிச்சோட கிளம்பலாம்! காதுலே விழுந்ததா?"

 வீட்டில் மௌனம் நிலவியது, சிறிது நேரம்!

 சூட்கேஸ், ஷோல்டர் பேக்குடன் மனைவியும் மகனும் வீட்டைவிட்டு வெளியேறுவதை பார்த்து ஒரு கணம் திடுக்கிட்டவன், சமாளித்துக்கொண்டு, கர்ஜித்தான்.

 " திரும்பி இந்த வீட்டுக்குள்ளே நுழையலாம்னு கனவுகூட காணாதீங்க! டைவர்ஸ் நோடீஸ் உங்க பின்னாடியே வந்துகிட்டிருக்கு, காதுலே விழுந்ததா?"

 அவன் பேசியதை சட்டையே செய்யாமல், தாயும் சேயும், வெளியேறினர்.

 பிரசாத், நெற்களம் யூனிவர்சிடி ரிஜிஸ்டிரார்! அவனுக்கும் துணைவேந்தருக்கும் மிக நெருங்கிய நட்பு! எல்லாவிதங்களிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு தந்து, இருவருமே அந்த பல்கலைக்கழக நிர்வாகத்தை தங்கள்வசம் வைத்திருந்தனர்.

 பேராசிரியர் பதவிக்கு எவ்வளவு கையூட்டு தரவேண்டும், விரிவுரையாளர், லேப் உதவியாளர், கல்லூரியில் மாணவனாக இடம் பிடிக்க, என ஒவ்வொன்றுக்கும் ஒரு ரேட் வைத்து, பகிரங்கமாக கையூட்டு பெற்றனர்.

 ஏனெனில், இவர்கள் இருவருமே தங்கள் பதவிகளை லட்சக்கணக்கில், மேலே பதவியில் உள்ளவர்களுக்கு, கையூட்டு கொடுத்துத் தான், பெற்றனர்.

 அதனால், துணிந்து ஊழல் செய்தனர். தவிர, பல்கலைக்கழக வேலைகள் அனைத்துக்கும் முப்பது சதவிகித கமிஷன் வாங்காமல் ஒப்பந்தம் செய்யமாட்டார்கள். 

 தேர்வில் மாணவனை கூடுதல் மதிப்பெண் தந்து பாஸ் போடுவதற்கு தனி ரேட்! பணக்காரவீட்டு மாணவ, மாணவிகள் இப்படித்தான் தேர்வு பெற்று, பின் பல்கலைக்கழகத்தில் உத்தியோகமும் பார்த்தார்கள்.

 இப்படிச் சேர்த்த கோடிக்கணக்கான பணம், கறுப்பு பணம், வருமானவரி அதிகாரிகளிடமிருந்து, தப்பவேண்டாமா? அதற்கு அவர்களை, பணம் மட்டுமின்றி இதர வழிகளிலும் கவனித்துக் கொண்டனர்.

 இது ஊர் மட்டுமல்ல, உலகத்துக்கே தெரிந்த விஷயமானபோதிலும், இருவரும் கவலைப்படவில்லை.

 " எவன் யோக்கியன்? எல்லாரும் பணம் வாங்கறவங்கதான்! இல்லேன்னா, கோடிக்கணக்கிலே தேர்தலிலே எப்படி பணம் செலவு செய்து வெற்றி பெற்று, அமைச்சராகறாங்க? அதிகாரிங்கள்ளாம், பத்து பங்களா, இருபது சின்னவீடு, முப்பது கார், எல்லாம் பினாமி பேரிலே வைச்சிருக்காங்க? இங்கே மட்டுமல்ல, இந்தியா முழுவதும், இதுதான் நடக்குது! 

 நீதித்துறையிலேயே இந்த நிலமை வந்தாச்சுன்னு, உச்ச நீதிமன்றத்திலேயே பேசிக்கறாங்க!

 அப்படியே எவனாவது கேஸ் போட்டாக்கூட, நாங்க உயிரோடிருக்கிறவரையிலே, கேஸ் விசாரணைக்கு வராம இருக்க, என்ன செய்யணுமோ, அதை செய்துடுவோம்!

கேஸ் எடுக்கிறதுக்கு முன்பே ஜாமீன்லே, தப்பிச்சிப்போம்!"

 அவர்கள் காட்டிலே பெய்த மழை, மூன்றாவது ஆண்டே, சோதனைக்குள்ளானது. 

 இருவரும், பதவி உயர்வுக்காக

ஒரு விரிவுரையாளரிடம் கட்டுக்கட்டாக நோட்டு வாங்கியதை, எப்படியோ யாரோ ரகசியமாக, வீடியோ எடுத்து, யூட்யூபிலே வெளியிட்டுவிட்டார்கள்.

 இருவருக்கும், அவரகளுக்கு நெருக்கமாக இருக்கிற எவனோ, பொறாமையில், காட்டிக்கொடுத்துவிட்டான். அதனாலென்ன, கவனிக்கவேண்டியவர்களை கவனித்து சரிசெய்துவிடுவோம் என்று துணிவுடன் இருந்தனர்.

 இடையே பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரவே, அகில இந்திய அரசியல் கட்சிகளும், மாநில கட்சிகளும், தங்களுக்கு அவப்பெயர் ஏற்படாமலிருக்க, போலீஸ் விசாரணை, சி.பி.ஐ. விசாரணை, சி.பி.சி.ஐ. விசாரணை என்று மாற்றி மாற்றி வழக்குகளை நீதிமன்றங்களின்முன் வரவிடாமல் தடுத்தன.

 அதிலே, குளிர் காய்ந்த எத்தனையோ நபர்களில், நமது பிரசாத் ஒருவன்! 

 தொலைக்காட்சிகளில், தினமும் பிரசாதை இங்கும் அங்கும் போலீஸ் காவலுடன் அழைத்துச் செல்வதை ஒளிபரப்பி மானத்தை வாங்கினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.