(Reading time: 6 - 11 minutes)

 அவனுக்கு ஆறுதல் சொல்ல, அருகே மனைவியுமில்லை, மகனுமில்லை! வீட்டில் எவருமேயில்லை!

 இத்தனைகாலம் அவன் வீசி எறிந்த காசுகளை பொறுக்கித் தின்று கூடவே குடித்து கும்மாளமிட்ட கூஜாக்கள், மாயமாய் மறைந்தனர்.

 ஜாமீனுக்கு மனு போட்டால், அரசு தரப்பில் வேறு அரசியல் காரணங்களுக்காக எதிர்த்தனர்.

 இறுதியாக, விழவேண்டியவர்கள் காலில் விழுந்து, தரவேண்டியதை தந்து, அரசு தரப்பில் எதிர்ப்பை விலக்கிக் கொண்டனர்.

 நீதிபதியும், வழக்கம்போல, 'குடும்ப நபர் ஒருவரின் தனிநபர் பொறுப்புக் கையெழுத்துடன் பத்துலட்ச ரூபாய் ரொக்க ஜாமீனிலும் விடுவிக்க உத்தரவு போட்டார்.

 பிரசாதின் வக்கீல், உடனே பிரசாதிடம், "வெற்றி! வெற்றி!" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 அவனிடமிருந்து, அவன் மனைவி, மகன் இருக்கும் விலாசத்தைப் பெற்றுக்கொண்டார்.

 " பிரசாத்! பணத்துக்கு நீ உன் நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்! நான் உடனே போய் உன் மனைவியின் கையெழுத்தை வாங்கி வருகிறேன். இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் நீ சுதந்திரப் பறவை!"

 நேரம் ஓடிக்கொண்டிருந்தது! பணம் நண்பர்கள் மூலம் கிடைத்து, அதுவும் கைக்கு வந்தாகிவிட்டது! மனைவியின் கையெழுத்து வாங்கப்போன வக்கீலைத்தான் இன்னும் காணோம்!

 கைபேசியில் வக்கீலை தொடர்பு கொண்டு " என்னாச்சு? ஏன் லேட்?"னு கேட்டான்.

 பாவம்! அவர் பதில் சொல்லமுடியாமல் திணறினார்.

 " அவங்க நான் சொன்ன விலாசத்திலே இல்லையா? மனைவி வெளியே போயிருந்தால்கூட, மேஜரான மகனிடம் கையெழுத்து வாங்கிண்டு சீக்கிரமா வாங்க!"

 " பிரசாத்! அதிர்ச்சி அடையாதே! நீ அவங்களை ரொம்ப கேவலமா, அவமரியாதையா, நடத்தினியாம், அவங்களை மதிக்காம தான்தோன்றித்தனமா நடந்தியாம், உன்னை நம்பி தனிநபர் ஜாமீன் கையெழுத்து போடத் தயாராயில்லையாம்!............"

 பணத்தைக் கொண்டு, உலகத்தையே விலை பேசிய பிரசாத் அவமானப்பட்டு, தலை குனிந்து, தான் செய்யக்கூடாத தவறை செய்ததற்கு முதன் முறையாக கண்ணீர் வடித்தான்! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.