(Reading time: 8 - 16 minutes)

 "முட்டாள்! ராஜினாமா முடிவு எடுக்குமுன்என்னிடம் ஒரு வார்த்தைசொல்லவேண்டும் என்று உனக்கு தோன்றாமல் போனது, உனக்கு என்மீது நம்பிக்கையில்லை என்று சொல்கிறது. என் துரதிர்ஷ்டம்! நான் உன் குடும்பம் நல்லாயிருக்கணும்னுதானே, உனக்கு வேலையே கொடுத்தேன். உன் குடும்பத்தின்மீதும் உன்மீதும் எனக்குள்ள பற்றுதலை நீ புரிந்துகொள்ளவில்லை, ஏன்னா, உன் தந்தைக்கும் எனக்கும் உள்ள நட்பு உனக்குத் தெரிய நியாயமில்லை. சொல்கிறேன்..........

 முப்பது ஆண்டுகள் முன்புஎன்னிடம் பணம் இருந்ததே தவிர, தொழில்நுட்பமோ, அனுபவமோ கிடையாது, அது உன் தந்தையிடம் இருந்தது. அவர் கொடுத்த தைரியத்தில்தான், இந்தக் கம்பெனியை ஆரம்பித்தேன்.

 உன் தந்தையும் என்கூடவே இருந்து செய்த உதவி, இப்போது இந்தக் கம்பெனி நல்ல நிலமையில் இருக்கு, ஒருநாளும் நான் உன் தந்தை செய்த உதவியை மறக்கமாட்டேன்.

 இப்போது நான் உன்னை அழைத்ததுகூட, வேலை சம்பந்தமாக அல்ல, தனிப்பட்ட விஷயமா பேசத்தான்!

 முதலில் அந்த ராஜினாமா கடித்த்தை கிழித்துப்போடு! நான் சொல்வதைக் கேள்!

 எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் தன் மகளுக்கு அவசரமாக கல்யாணம் பண்ணிவைக்க என் உதவியை தேடி வந்திருக்கிறார். நல்ல பணக்கார்ர். இப்போதே, வா! உன் அம்மாவைப்பார்த்து பேசி, அவங்க சம்மத்த்துடன் பெண்வீட்டாரிடம் பேசி கல்யாணத்தை நிச்சயித்து, உடனடியாக உனக்கு இப்போதைய நெருக்கடியை சமாளிக்கத் தேவையான பணத்தை வாங்கித்தரேன், சரியா?"

 பருத்தி புடவையாக காய்த்ததுபோல் சீனு மகிழ்ந்திருக்கவேண்டுமா இல்லையா? கடவுளே அவனை காப்பாற்ற புதிய கதவை திறந்திருக்கிறார் என்று சந்தோஷப்பட்டிருக்க வேண்டாமோ? மாறாக,

 " முதலாளி! உங்களுக்கு என் அப்பாவின்மீது மிகுந்த மதிப்பும் நெருங்கிய நட்பும் உள்ளதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் நீங்கள் என்னை உயர்ந்த நிலையில் வைத்து பார்க்கிறீர்கள். ஆனால், உங்கள் பணக்கார நண்பர் அப்படி பார்க்கமாட்டார். அவசரமாக பெண்ணுக்கு கல்யாணம் செய்யவேண்டும் என்பதற்காக, தெரிந்தே பாழுங்கிணற்றில் தன் மகளை தள்ளுவாரா? என்னைப்போல உள்ள வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்றுப்போனவனுக்கு, மகளை தருவாரா? ஐயா! வேறு ஏதாவது வழி இருந்தால்..............."

 " சீனு! நீ இவ்வளவு அழகாகப் பேசுவாய்னு என்னாலே நம்பவே முடியலே, சின்னப்பையன்னு தவறா எடை போட்டேன், நீ சொல்வதுதான் யதார்த்தம்!............"

 " ஐயா! இந்த விஷயத்திலே இன்னொரு கோணமும் இருக்கு, வேற யாராவது ஒரு பையனுக்கு அந்தப் பெண்ணை சிபாரிசு செய்யறதுக்கு முன்பு, அந்த நண்பருக்கு என்ன அவசரம், பெண் என்ன வயதுஎன்ன படித்திருக்கிறாள், வேலை பார்க்கிறாளா? நல்ல பெண்தானா? என்பதை விசாரித்து தெரிஞ்சிக்குங்க! ஏன் சொல்றேன்னா, நான் இந்த அறைக்குள்ளே நுழைகிறவரையில், நான் நல்லபடியா வாழ்ந்துகொண்டிருப்பதாக நினைத்துத்தானேஎன்னை சம்மதம் கேட்டீங்க, ஆனா உண்மை நேர்மாறா, இருக்கு, நான் நல்ல நிலையிலே இல்லை! இப்படித்தான் அந்த நண்பர் விஷயத்திலேயும் உங்களுக்கு தெரியாத உண்மைகள் இருக்கலாம் இல்லையா?"

 முதலாளி எழுந்து வந்து சீனுவை அணைத்துக்கொண்டார்!

 " சீனு! சத்தியமா சொல்றேன், உங்கப்பாவும் இப்படித்தான் எனக்கு அப்பப்ப நல்லது கெட்டது சொல்லித்தருவான்! அவன், அந்தக் காரியத்தை தொடர்ந்து எனக்கு நீ செய்வதற்காக, உன்னை அனுப்பியிருக்கிறதா நம்பறேன். சீனு! நான் ஏன் இப்படி வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கிற வெள்ளந்தியா இருக்கேங்கறதுக்கும், உங்கப்பா காரணம் சொல்லுவான், நான் எங்கப்பா அம்மாவுக்கு ஒத்தைப் புள்ளையாம், எங்க குடும்பம் பரம்பரையா வசதியான குடும்பமாம், சூதுவாது குடும்பத்துலே யாருக்குமே தெரியாதாம், சீனு! உங்கப்பாவை என்னாலே மறக்கவே முடியாது! சரி, உன் பிரச்னைக்கு வருவோம், உனக்கு என் சொந்தப் பணத்திலே உடனடி கடன்களை தீர்க்க ஐம்பதாயிரம் ரூபாய் தரேன்! கம்பெனியிலே யாருக்கும் தெரியவேண்டாம்! இன்று மாலையே வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக்கொள்!"

 " ஐயா! மறுபடியும் நீங்க அவசரப்படறீங்க! என்னை காப்பாற்ற நீங்க சொல்கிற யோசனை, தற்காலிக தீர்வுதானே தவிர, நிரந்தரத் தீர்வு இல்லை!"

 " சரி, சீனு! இந்தக் கம்பெனி இன்று சிறப்பா நடக்கறதுக்கும், நிறைய லாபம் சம்பாதிக்கிறதுக்கும் அந்த நாளிலே உங்கப்பா சொன்ன யோசனைகளும் கடுமையா உழைச்சதும்தான் காரணம்! அந்த நன்றியை நான் மறக்கமாட்டேன்! சீனு! நீ என்னைவிட்டு எந்தக் காரணத்துக்காகவும் விலக விடமாட்டேன், குடும்பச் செலவுகளை நான் கவனிச்சுக்கிறேன், இன்னும் மூணே வருஷத்திலே உன் தம்பியும் படிப்பு முடிந்ததும் இங்கேயே வேலைக்கு சேர்ந்துட்டான்னா, கொஞ்சம் கொஞ்சமா, பிரச்னை தீர்ந்துவிடும். இப்ப நீ போய் வேலையை பார்! ........ஆம், சீனு! அந்த நண்பரைப் பற்றியும் தீர விசாரிக்கிறேன்........"

 சீனு முதலாளிக்கு வணக்கம் கூறிவிட்டு வெளியே வந்தான்!

 இறந்துபோன தன் தந்தை இன்னமும் தொடர்ந்து குடும்பத்தை காப்பாற்றுவதாகவே சீனு நம்பினான்! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.