(Reading time: 8 - 15 minutes)

சிறுகதை - சிந்தித்து பேசுங்கள்! - ரவை

THINK

 " மேஷ்! பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பும்போது, உன் தங்கை ரமாவையும் அழைத்துக்கொண்டு வா, அவளை தனியே விட்டுடாதேன்னு சொன்னேனே, நீ தனியா வந்து நிற்கிறியே, உன் தங்கை எங்கே?"

" மறந்துட்டேம்மா! இப்பவே போய் அவளை அழைத்துக்கொண்டு வரேம்மா!" என்று புத்தகப்பையை வீட்டுக்குள் வீசிவிட்டு ஓடிப்போய் தங்கையை அழைத்துவந்தான், ரமேஷ்!

 " அதெப்படிடா, ரமேஷ்! மறந்துபோகும்? அவ உன் தங்கைதானே!"

 " இல்லேம்மா! இத்தனைநாள் அவள் ஸ்கூல்வேனிலே வந்துகொண்டிருந்தாள், இன்றுதானே முதன்முதலா என்னோட வருகிறாள், அதனாலே மறந்துபோயிடுத்து, நாளையிலிருந்து மறக்காமல், அவளை அழைத்துக்கொண்டு வந்துடறேன்....."

 " ரமேஷ்! இந்த சின்ன வயதிலேயே, மறதி வரக்கூடாதுடா! எந்த வயதிலேயும் யாருக்குமே மறதி வரக்கூடாது. ஞாபகம் வைத்துக்கொள்! எதையுமே மறக்கக்கூடாது! மறதியே வரக்கூடாது..........."

 " சரி, சரி, திருப்பி திருப்பி சொன்னதையே சொல்லி அறுக்காதே! எதையும் எத்தனை வருஷமானாலும் மறக்காம ஞாபகத்திலே வைத்துக்கொள்கிறேன், விளையாடிட்டு வரேன்.........."

 இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ரமேஷின் பாட்டி, மருமகளை அருகில் அழைத்தாள்.

 " மரகதம்! பெரியவங்க எதையும் யோசித்து பேசணும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்துக்கு பொருத்தமானதை ஆயுள்முழுவதும் கடைப்பிடிக்க சொல்லக்கூடாது..........."

 " புரியலே, அத்தை! என்ன சொல்றீங்க?"

 " சற்றுமுன்பு ரமேஷிடம் சொன்னியே, எதையும் எப்பவும் மறக்கக்கூடாது, மறதியே வரக்கூடாதுன்னு, புத்திமதி சொன்னியே, அதை கொஞ்சும் யோசித்துப் பார்! 

 நம்ம வாழ்க்கையிலே, பல விஷயங்களை, அனுபவங்களை எப்பவோ நடந்த நிகழ்ச்சிகளை மறக்க முடியறதனாலேதான், இப்ப நிம்மதியா வாழமுடிகிறது, இல்லேன்னா அந்த கசப்பான அனுபவங்களை மறக்காம நினைத்துக்கொண்டே யிருந்தால், நரகவேதனைதான் அனுபவித்துக் கொண்டிருப்போம். சில விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளணும், வேற சில கசப்பான நிகழ்வுகளை கட்டாயம் மறக்கணும்! இப்ப நான் சொல்வது உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்....."

 மருமகள் மரகத்த்தின் கண்களில் நீர் குளமாக நிறைந்ததை பார்த்தவுடன்

" கடந்துபோனதை நினைத்து கண் கலங்காதே! போய் வேலையை பார்! குழந்தைகளுக்கு நாம் எதையும் சிந்தித்து சரியா சொல்லித்தரணும்."

 மரகதம் கண்களை துடைத்துக்கொண்டு நகர்ந்தாள். அவள் சென்றதும், அவளின் அத்தை மேல் நோக்கி பெருமூச்சு விட்டாள். மருமகளை எதை செய்யாதே என அறிவுறுத்தினாளோ, அந்த தப்பை இப்போது இவளே செய்தாள், ஆம், கடந்தகால நினைவில் மூழ்கினாள்!

 எப்படி இருந்த குடும்பம், இப்போது இப்படி ஆகிவிட்டதே! விதியை குறை கூறுவதா? இல்லை, மதியிழந்த பிள்ளையை, பணத்தாசை பிடித்த மகனை, காசே வாழ்வில் பிரதானம் என்று மூர்க்கத்தனமாக நடந்துகொண்ட முட்டாளை சொல்வதா?

 ஊரிலே நாலுபேர் மதிக்க செல்வாக்குடன் வாழ்ந்த குடும்பம், நாகநாதனின் குடும்பம்! வயிறார சாப்பிட, முப்போகம் விளையும் நிலம்! போட்டியின்றி வளர்ந்த வைர வியாபாரம்! நான்கு வீடுகள், அரண்மனைபோல்! இரண்டே பிள்ளைகள்! அளவான குடும்பம்! பேராசையின்றி, கடவுள்பக்தியுடன், ஊராருடன் சுமுகமாக வாழ்ந்த குடும்பம்!

 மூத்த மகன் செல்வம், தந்தையைப் போல் அடக்கமாகவும் பண்போடும் வளர்ந்து, தந்தைக்கு உதவியாக, வியாபாரத்தை கவனித்துக்கொண்டான்.

 இளையவன் இந்திரன், குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக எவருக்கும் இல்லாத கெட்ட பழக்கங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு சீரழிந்து கொண்டிருந்தான்!

 குடிப்பழக்கம், பெண்களுடன் தொடர்பு, சூதாட்டம், எதையும் விட்டுவைக்கவில்லை!

 தாய், தந்தை, அண்ணன் எவர் சொல்லுக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்தவனை எப்படி திருத்தலாம் என மூவரும் என்னென்னவோ யோசித்தனர்.

 வெளியூரில் வாழ்ந்துவந்த தாய்மாமன் குலசேகரனிடம் அனுப்பி வைத்தனர். இரண்டே வாரங்களில் குலசேகரனே அவனை அழைத்துவந்து விட்டுவிட்டு, வேறுவழியில் அவனை திருத்த யோசிக்கச் சொல்லிவிட்டு நடையை கட்டினார்!

 ஜோசியம் பார்த்ததில், கிரகங்கள் எதுவுமே சரியில்லை, அவனால் குடும்பத்துக்கே தீங்கு விளையும் என்பதால், அவனை சில காலம் விலக்கிவைக்கவும், அவனுக்கு பணமே தரக்கூடாது எனவும், அவன் பசி, பட்டினியின் வேதனையை உணர்ந்து, பணத்தின் அருமையை தெரிந்து, திருந்தினால்தான் உண்டு என சந்தேகத்துக்கு இடமின்றி, தெளிவாக சொல்லிவிட்டார்!

 பெற்ற பாசம் போகுமா? ஆனது ஆகட்டும் என அவனை தங்களுடனே வைத்துக்கொண்டு அவனால் உண்டான அவப்பெயரையும் தாங்கிக்கொண்டனர்.

 இதற்கிடையே, அந்த ஊர் சங்கரமடத்துக்கு வடக்கிலிருந்து ஒரு துறவி வந்திருந்தார். அவரைப்பற்றி ஊரில் எல்லோரும் புகழ்ந்து பேசவே, நாகநாதன், அவர் மனைவி, செல்வம் மூவரும் அவரை சந்தித்து வணங்கினர்.

 எடுத்த எடுப்பிலேயே, அந்த துறவி ஒரு கேள்வி தொடுத்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.