(Reading time: 8 - 15 minutes)

சிறுகதை - சிறையின் விலை ஒண்ணரை கோடி! - ரவை

monkeyFamily

'பூங்காடு' பெயரிட்ட புதுக் கட்டிடத்தின் ஏறக்குறைய, நூறு வீட்டு சொந்தக்காரங்களும் அங்கே கூடிவிட்டனர்!

 அந்த இடம், 'பூங்காடு வாழ்வோர் நல சங்க'த்தின் தலைவர் ராமையாவின் வீட்டின் முகப்பு!

 "தலைவரே! வெளியிலே வரீங்களா, இல்லே நாங்க உள்ளே வரட்டுமா?"

 " பாம்புக்கும் குரங்குக்கும் பயந்து, வீட்டுக்குள்ளேயே சிறைப்பட்டுக்கிடக்கோம்..........."

உள்ளிருந்து வந்தது,பதில்குரல்!

 " பயப்படாம வெளியே வாங்க! நாங்க, நூறுபேர், இங்கே, கையிலே கம்பு, தடியோட கூடியிருக்கோம்...."

 பாவம்! விதி செய்த சதி! சென்னை மாநகரின் பிரதான பகுதிகளான, தி.நகர், மைலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாநகர் போன்ற இடங்களில் எந்தவித தொல்லையுமின்றி வசித்து வந்தவர்களை, அந்த ஒரு விளம்பரம், இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டது!

 "வாருங்கள்! மண்ணிலே சொர்க்கம் காண!

 வீட்டை சுற்றிலும் பூக்காடு!

சோலார் தண்ணீர் நாள்முழுதும்!

 புகையில்லை, மாசில்லை!

சுகாதாரமான இயற்கை சூழ்நிலை!

 ஐந்து பெட்ரூம்! உண்மை!

மொத்தம் நூறு குடியிருப்புகள்!

 விலையோ மலிவு!

முந்துங்கள்! உடனே குடியேறலாம்!"

 இந்த விளம்பரத்தை பார்த்ததும், உடனே போனில் தொடர்பு கொண்டு, ஓடிவந்து இடத்தையும் வீடுகளையும் பார்த்தவர்கள் பத்தாயிரம்! ஒருவார கெடுவுக்குள் முன்பணம் கட்டியவர்கள் ஆயிரம்பேர்! முழுத் தொகையையும் பதினைந்து நாட்களுக்குள் கட்டி, பத்திரத்தை பதிவு செய்து, வீட்டுக்குள் தேவையான உள்கட்டமைப்பும் கட்டில், மெத்தை, வகையறாக்கள் புதிதாக தருவித்து, குடிபுகுந்த நூறு பேரும், கணக்கு பார்த்தபோது, ஒரு வீட்டுக்கான மொத்த செலவு ஒண்ணரை கோடி ரூபாய்!

 ஆனால், விளம்பரத்தில் சொன்னபடி, சுற்றிலும் பூச்செடிகள்! பல வண்ணங்களில், பலவிதமான மலர்ச் செடிகளும் கொடிகளும் கண்களுக்கும் மனதுக்கும் பூரிப்பை தந்தன!

 குடிபுகுந்த இரண்டாம் நாளே, வீடுகளில் வெளிப்புற ஜன்னல்களுக்கும் வராந்தாவுக்கும், காற்றைத் தவிர, வேறெதுவும், கொசு, , எறும்புகூட, புகமுடியாத வலை பின்னுபவன் அவர்கள்முன் நின்றான்.

 " இந்தப் பகுதியிலே, குரங்குத் தொல்லை அதிகம். வீட்டுக்குள் புகுந்து சமையல் செய்துவைத்திருப்பதை கொட்டி கவிழ்த்துவிடும், எங்கேயிருந்து எப்படி வீட்டுக்குள் நுழைந்தது என்று கண்டுபிடிக்கவே முடியாது. அதனாலே, மொத்தமா, நூறு வீடுகளுக்கும் நான் சுத்தமா வலை தயாரித்து மாட்டிவிடுகிறேன். தனித்தனியாக ஆர்டர் கொடுத்தால், கூலி கூடுதலாகும். நூறு வீட்டுக்கும் சேர்த்து, காண்டிராக்டா பேசி, நிறைய ஆட்களை வைத்து ஒரே நாளில் வேலையை முடித்து தருகிறேன்...."

 " நீ சொல்றது சரி, ஆனா வலைக்குப் பதிலா, வேட்டு வைச்சா, அந்த சத்தத்தைக் கேட்டு பயந்து குரங்குகள் அப்புறம் இந்த பக்கமே வராது, சிக்கனமா குறைந்த செலவிலே முடிஞ்சிடும்........."

 " நீங்க இந்தப் பகுதி குரங்குகளைப் பற்றி தெரியாம பேசறீங்க, இந்த குரங்குகள் எல்லாம் ஜென் எக்ஸ் குரங்கு! லேடஸ்ட் டெக்னிக் தெரிந்தவைங்க! நான் சொன்னா நம்பமாட்டீங்க, அனுபவித்தபின் என்னைத்தான் கூப்பிடுவீங்க, நான் வரேன்.......ஆனா, இன்னி ரேட்டைவிட கொஞ்சம் அதிகமாகும்......."

 அவன் நகர்ந்தபிறகு, வேட்டு வைக்கிற ஆளை யார் தேடிப் பிடிக்கிறது, எத்தனை வேட்டு எத்தனை நாட்களுக்கு போடறது, ஒரு பகுதியில் ஐம்பது வீடுகளாக, இரண்டு பகுதிகளுக்கு மொத்தம் எவ்வளவு செலவாகும் என்றெல்லாம் பேச்சு துவங்கி, எங்கெங்கோ சஞ்சாரித்து, இறுதியில் எந்த முடிவும் எடுக்கப்படாமல், அவரவர்கள் வேலையை கவனிக்க வீடு திரும்பினர்.

 அடுத்த பத்தாவது நிமிடமே, அத்தனைபேரும், மூண்டும் கூடினர்.

 " ஒரு லிட்டர் பாலை கீழே கவிழ்த்து கொட்டி பாதி குடித்து மீதியை வீணாக்கிடுத்து, சனியன் பிடித்த குரங்கு!"

 " சமைத்து அடுப்பிலே வைத்திருந்த சாம்பாரை, ரசத்தை, சாத்த்தை கொட்டி கவிழ்த்து வீணாக்கிட்டு, என்னை பார்த்தவுடனே தேங்காய் மூடியை வாயிலே கவ்விண்டு ஓடிடுத்து, குரங்கு! என்னைப் பார்த்து, பயப்படாம, உர் உர்னு சீறுது......."

 இப்படி ஒவ்வொருவரும் தங்கள் நஷ்டத்தையும் கஷ்டத்தையும் சொல்லி முடித்தபிறகு, மெதுவாக, ஒரு பெண்மணி, பயந்த குரலில்," பார்த்தேன்.....மரக்கிளையிலே..பாம்பு" என்றாள்!

 அத்தனை பேரும், இதயத்துடிப்பு சில வினாடிகள் நின்று பின் இயங்க, விழித்தனர்!

 இப்போது என்ன செய்வது?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.