ஆலப்புழா
ஓணம் திருநாள் அன்று....
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய்
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே
என ஆண்கள் ஒரு பக்கம் எதிரில் இருந்த பெண்களைப் பார்த்து விளையாட்டாக பாடிக் கொண்டிருக்க அதற்கு அந்த பெண்களில் சிலர் கோபமாக முறைத்தும், சிலர் வெட்கப்பட்டு சிரித்தும், சிலர் வெட்கத்தை மறைக்க முயன்று தோற்றுக் கொண்டும், சிலர் பாடிக்கொண்டிருந்த ஆண்களை ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தார்கள். பெண்களிடம் கிடைத்த நல்ல வரவேற்பை விடமுடியாமல் மேலும் மேலும் பாடினார்கள்.
அந்த ஆண்களில் மாதவனும் இருந்தான். மாதவன் அழகானவன், படித்தவன், மாதத்திற்கு 2 லட்சம் வருமானம் தரும் ஐடி நிறுவனத்தில் ஹெச் ஆராக பணிபுரியும் வெஸ்டர்ன் கொஞ்சம் பாரம்பர்யம் கொஞ்சம் என சேர்ந்து செய்த கலவை. பணம் தாராளமாக இருப்பதால் எதிர்காலத்தை பற்றி சிறிதும் கவலைக் கொள்ளாத ஒரு அக்மார்க் ப்ளேபாய் அளவுக்கு செல்லாமல் ஒரு எல்லைக்கோட்டோடு தனது சேட்டைகளை வைத்துக் கொண்டிருப்பவன்
அவனது ஒரே லட்சியம் அழகான பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதுதான் தமிழ்நாட்டில் பிறந்தவனுக்கு தமிழ் பெண்களை விட ஏனோ கேரள பெண்களிடத்தில் தனி ஆர்வம் வந்தது, அதற்கு காரணம் அவனுடன் வேலைசெய்யும் மலையாளி ஒருவனின் பரிச்சயத்தால் இந்த ஆர்வம் உதயமானது.
அவனது பெயர் சேத்தன் குட்டி, ஆரம்பத்தில் பயந்து பயந்து வேலை செய்து வந்தவன் மாதவனின் பரிச்சயம் கிடைத்ததும் அந்த கம்பெனிக்கே அவன்தான் முதலாளி என்ற எண்ணத்திற்கு மாறினான். மலையாளமும் தமிழும் ஆங்கிலமும் கலந்து ஒரு மொழியை பேசி அலப்பறை செய்பவன். அவன் தன் மாநில பெண்களைப் பற்றி அளந்த அளப்பில் திருமணம் என ஒன்று செய்தால் அது கேரள பெண்ணைத்தான் என மாதவன் முடிவெடுக்கும் அளவுக்கு வந்துவிட்டதோடு அதற்காக ஓணம் பண்டிகையை காண நேராக கேரளாவில் உள்ள சேத்தனின் ஊரான ஆழப்புழாவில் வந்து இறங்கினான்.
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!