(Reading time: 10 - 20 minutes)
Couple

சிறுகதை - நல்லதே நடக்கும்! - ரவை

" தாத்தா! உன்னைப் பார்க்க யார் யாரோ புதியவர்கள் வந்து காத்திருக்காங்க, ஹாலிலே, எழுந்து வரியா?"

        என்னைப் பார்க்க புதியவர்களா? அதுவும் நிறைய பேரா? ஆச்சரியமாயிருக்கே!  சரி, போய் பார்ப்போம்!

        " வாங்க! வாங்க! என்னைப் பார்க்கவா வந்திருக்கீங்க! உங்களை நான் இதுவரையில் பார்த்ததே இல்லையே!"

          " நாங்களும்தான் உங்களை முதன்முறையா நேரிலே பார்க்கிறோம், ஆனால், நாங்க யார்னு எங்க பெயரைச் சொன்னால், உங்களுக்கு டக்குனு புரிஞ்சிடும்......."

         " அப்படியா? சொல்லுங்க!"

        " அகர வரிசையிலே சொல்றோம், என் பெயர் அதர்வா ஜோ!"

        "ஹை! அதர்வா! வாங்க, வாங்க! ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு, இத்தனை நாட்கள் உங்களை உங்க விமரிசனம் மூலமாகத்தான் தெரியும், அதர்வா! இன்ப அதிர்ச்சியாயிருக்கு! ......இப்ப, நீங்க யாரும் பெயர் சொல்லவேண்டாம், நானே சொல்றேன்........

        இது மதும்மா!   இது ஜெபமலர்! இது sasimma! இது ஹரி! இது அபிமகேஷ்! இது ராமகிருஷ்ணன்! சரியா?"

          " இதெல்லாம் சரியா சொல்லுங்க, ஆனா எழுத்திலே கோட்டை விட்டுடுங்க, ஆமாம், தெரியாமல்தான் கேட்குறேன், உங்களுக்கு திடீர்னு என்னாயிற்று?"

        " தெரிந்தே கேளுங்க, அதர்வா! நீங்க எல்லாரும் கோபமா வந்திருக்கீங்கன்னு புரியுது, ரொம்ப சூடா இருக்கீங்க, ஜில்லுனு லெமன்ஜூஸ் தரேன், குடித்துவிட்டு நிதானமா பேசலாம்......"

         " அங்கிள்! கிண்டலா?

ஜில்லுனு ஜூஸ் கொடுங்க, அதென்ன லெமன் ஜூஸ்? புத்தி தெளிவில்லாதவனுக்குத்தான்தலையிலே எலுமிச்சம் பழத்தை தேய்ப்பாங்க, நாங்க தெளிவாகத்தான் இருக்கிறோம், சொல்லப்போனால், உங்களுக்குத்தான் இப்போ லெமன் தேவை!"

          " அதர்வா! பாவம், அங்கிள்! ஏதோ தெரியாம எழதியிருப்பார், இத்தனை நாட்கள், 125 சிறுகதைகளுக்கு மேலே, பிரமாதமாகத் தானே எழுதியிருக்காரு, ஏதோ எங்கேயோ நினைவிலே இப்படி தப்பா எழுதிட்டாரு, அதனாலே பொறுமையாகவே பேசுவோம்......"

           " ஓ.கே. மதுமலர்! நீங்களே கேளுங்க!"

          " அங்கிள்! உங்கமேலே நாங்க எல்லோரும் பெருமதிப்பு வைத்திருக்கிறோம்,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.