(Reading time: 10 - 20 minutes)
Couple

தருவதாக, ஏதோ பெரிய வேதாந்தம் பேசி கதையை முடிச்சிருக்கீங்க, அங்கிள்! இது நீங்க எழுதினதா வேறு யாரோ எழுதி உங்க பெயரிலே வந்ததான்னு சந்தேகமாயிருக்கு, நோ, இது நீங்க எழுதியிருக்கவே முடியாது, எத்தனை கவிதைகள், எத்தனை கதைகள் வீரத்தை வளர்ப்பதற்கும், அறத்தை காப்பதற்கும், தர்மத்தை நிலைநாட்ட ஆயுதங்களை எடுக்கலாம் என்றும் எழுதியிருக்கிறீர்கள்,......."

         " ஆமாம், அங்கிள்! நிச்சயமா இந்தக் கதையை நீங்க கனவிலேகூட எழுதியிருக்கமாட்டீங்க......"

         " நீங்கள் என்மீது வைத்திருக்கிற அபிப்பிராயத்துக்கும், மரியாதைக்கும், அன்புக்கும், நான் உங்களுக்கு நன்றி சொன்னாலும், அதற்கு காரணம், ஈரேழு உலகங்களையும் எந்த ஒரு சக்தி ஆட்டிப் படைக்கிறதோ அதுதான் எனச் சொல்வேன்......இந்த நிலைப்பாடு, சற்று மாறுபட்டதுதான்!

         நீங்கள் நம்புகிற புராணங்களிலும் இதிகாசங்களிலும்கூட, இப்படி நல்லவன் கெட்டவனாவதும், கெட்டவன் நல்லவனாவதும் உண்டு. என்றும் மாறாத ஒன்று, மாறுதல்! அந்த மாறுதலை, சில சந்தர்ப்பங்களில் வளர்ச்சி என்கிறோம், மற்ற நேரங்களில், சீரழிந்துவிட்டது என்கிறோம். உங்களை எல்லோரையும் கரங்கூப்பி கேட்கிறேன், சொன்னதையே திரும்பத் திரும்ப மாற்றிச் சொல்லக்கூடாது என மூர்க்கத்தனமாக இருக்கலாமா அல்லது அந்தந்தவினாடியில் நாம் உண்மையாக நம்புவதை சொல்லலாமா?"

         " அங்கிள்! அதற்காக ஆணை பெண்ணென்றும் பெண்ணை ஆணென்றும் சொல்வதை வளர்ச்சி அல்லது புதிய தெளிவு என்ற சொல்லமுடியுமா?"

         " அதர்வா! உங்கள் புத்தி கூர்மையை நான் என்றும் மதிக்கிறேன். ஆனால், புத்தியினால் அறியக்கூடிய எல்லையைத் தாண்டியும் நம்மைச் சுற்றி நடப்பதை காண்கிறோமா இல்லையா?"

          " உதாரணமா?"

          " நீங்கள் என் படைப்புகளை மட்டுமா படிக்கிறீர்கள், எத்தனையோ எழுத்தாளர்களின் கதைகளை படிக்கிறீர்கள். அவைகளிலும் உங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் காணப்படலாம். ஆனால், இப்போது என்னிடம் நேரில் வந்து பேசுவது போல, நீங்கள் செய்வதில்லையே, என்னிடம் மட்டும் எல்லோரும் சேர்ந்து வந்து விவாதிக்கிறீர்களே, இதற்கு உங்கள் அறிவு பூர்வமாக காரணம் கூறமுடியுமா?"

           " அதுவா? வந்து...வந்து....."

          " அதை விடுங்கள், 125 கதைகளில் நான் சொல்லியிருப்பதற்கு மாறுதலாக இந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.