(Reading time: 10 - 20 minutes)
Couple

       " அபி! எனக்கு வயசானதினாலே, ஞாபகமறதி அதிகம். தயவுசெய்து உங்களில் யாராவது ஒருவர், நான் எழுதின லேடஸ்ட் கதையின் சுருக்கத்தை சொல்றீங்களா? ப்ளீஸ்!"

          கூடியிருந்தவர்கள் தங்களுக்குள் சிறிதுநேரம் கலந்தாலோசித்தபிறகு, குரலை கனைத்துக்கொண்டு, அதர்வா கதையை சொன்னாள்.

        " ஆசிரியர் ஒருவர், தன் வகுப்பில் படிக்கும் மாணவி ஒருத்திக்கு, அவள் படிப்பில் சற்று பின்தங்கியிருந்ததால், அவள் வீட்டுக்கே வந்து பாடம் சொல்லித் தருகிறார்.

          சில மாதங்களுக்குப் பிறகு, அந்தப் பெண் கருவுற்றிருப்பது, தெரியவருகிறது. அந்தப் பெண்ணை, பெற்றோர் யார் அவளை கெடுத்தது, என மிரட்டிக் கேட்டதும், அவள் ஆசிரியரை குறிப்பிடுகிறாள்.

          ஆசிரியரை, பெற்றோர் அடித்து நொறுக்கியதோடு, அவரை பள்ளியில் வேலையிலிருந்தும் நீக்கிவிடுகிறார்கள். ஆசிரியரோ, யார் எது கேட்டாலும் " அப்படியா?" எனப் பதில் கேள்வி கேட்டாரே தவிர, வேறெதுவும் பேசவில்லை.

         சில நாட்கள் கழித்து, அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்ததும், அந்தக் குழந்தையை ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டு போய்விடுகிறார்கள்.

          மகிழ்வுடன் அவரும் குழந்தையை வளர்த்து வருகிறார்.

          ஓரிரு மாதங்களில், அந்தப் பெண் பெற்றோரிடம், தன்னை கெடுத்தது, ஆசிரியரல்ல, வேறொரு இளைஞன் என உண்மையை ஒப்புக்கொள்கிறாள்.

         உடனே, பெற்றோர் ஆசிரியரிடம் ஓடிவந்து தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு குழந்தையை எடுத்துச் செல்கிறார்கள்.

         அப்போதும், ஆசிரியர், "அப்படியா?" என்று கேட்டாரே தவிர, வேறெதுவும் பேசவில்லை, கோபம் கொள்ளவில்லை, அமைதியாகவே வாழ்ந்தார்.

           ஆசிரியரின் மனைவி அவரிடம் கதறுகிறாள். " ஏன் இப்படி நடப்பதையெல்லாம் ஏற்றுக்கொண்டு, அடிபட்டு, அவமானப்பட்டு, வேலையிழந்து, தவிக்கிறீர்கள், வாயைத் திறந்து எதிர்த்துப் பேசி தற்காத்துக் கொள்ளக்கூடாதா?" என்று கேட்கிறாள்.

          " நான் ஒரு விஷயத்தை, இல்லை இல்லை, சத்தியத்தை பரிபூரணமாக நம்புகிறேன். அது என்னவென்றால், அவன் அன்றி ஓரணுவும் அசையாது! நல்லது, கெட்டது எதற்குமே, மனிதர்கள் காரணமல்ல, அவர்களால், மேலே உள்ளவன் அனுமதியின்றி, ஒரு துரும்பைக்கூட நகர்த்தமுடியாது. மேலே உள்ளவனோ, தகுந்த காரணமின்றி, எதுவும் செய்யமாட்டான்! மானம், அவமானம், உயர்வு, தாழ்வு, சரி, தவறு, என்பதெல்லாம் கற்பனை, நிஜமல்ல"னு அவன் பதில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.