(Reading time: 5 - 10 minutes)
Couple

வேலைநிறுத்தம் செய்வோம்னு பயமுறுத்தினேன்.........."

 " ஆமாமாம், சிலபேர் சொந்த ஊருக்குப் போய் குடும்பத்தோட சேர்ந்து கொண்டாடுவாங்க, அதுக்கு ஒருநாள் தேவைதான்....."

 " சரியாச் சொன்னே, மரகதம்! இதையேதான் நானும் முதலாளிக்கு வற்புறுத்திச் சொல்லி சம்மதிக்க வைச்சேன், தொழிலாளிகளுக்கு ரொம்ப குஷி! தலைவா! உன்னைப்போல உண்டான்னு பாராட்டி மாலை போட்டு கொண்டாடினாங்க......."

 " இப்படித்தாங்க, முதலாளி ஸ்தானத்திலே இருக்கிறவங்களுக்கு தன்னிடம் வேலை செய்கிற ஊழியர்களோட தேவைகளே புரிகிறதில்லே, எப்பவும் அவங்க தொழில், அதிலே வர பணம், இதுவே குறி!

 சரி, வள்ளி! நீயேன் வாயைப் பிளந்துகிட்டு கதை கேட்டுக்கிட்டிருக்கே, வேலையைப் பார்! ஆமாம், இப்பவே சொல்லிட்டேன், தூங்கிப்போயிட்டேன், அதுஇதுன்னு சால்ஜாப்பு சொல்லாம, தீவாளியன்னிக்கு சீக்கிரமே வேலைக்கு வந்துடணும், அன்னிக்கு நம்ம வீட்டிலே நிறைய வேலையிருக்கும், விருந்தாளிங்க வராங்க, புரிஞ்சுதா?"

 " ஆமாம், வள்ளி! தீவாளிக்கு உனக்கு சேலை தரேன், அன்னிக்கு நம்ம வீட்டிலேயே சாப்பிடு! சந்தோஷமா?"

 " ஐயா! நான் தீவாளிக்கு எங்க கிராமத்துக்குப் போய் எங்க ஜனங்களோட கொண்டாடற வழக்கங்க, அதனாலே அன்னிக்கி ஒருநாள் வேலைக்கு வரமுடியாதுங்க...."

 " என்ன சொன்னே? வேலைக்கு வரமுடியாதா? சரி, மரகதம்! வள்ளிக்கு இனி நம்ம வீட்டிலே வேலை கிடையாது, அவளுக்கு சம்பளத்தை கொடுத்து அனுப்பிடு!"

 " ஆமாம் வள்ளி! உன்னை நம்பித்தானே நாங்க இருக்கோம், எங்களுக்கு தேவைப்படறபோது, வரமாட்டேன்னு சொன்னா தப்புதானே? தீவாளிக்கு உனக்கு ஒரு சேலை தரலாம்னு இருந்தேன், அந்த செலவு மிச்சம்!"

 " இதுதாம்மா உலகம்! ஐயா, அவரு வேலை செய்கிற இடத்திலே ஆயிரம் பேருக்கு சாதகமா வாதாடி, போராடி, முதலாளியிடமிருந்து சலுகைகள் வாங்கித் தருவாரு, ஆனா அவரே தன் வீட்டிலே வேலை செய்கிற வேலைக்காரியின் வயித்திலே மண்ணைப் போடுவாரு, ஊருக்கொரு நீதி, தனக்கொரு நீதி! 

 உங்களுக்கு இருக்கிற சங்கம் எங்களுக்கில்லே, உங்களுக்கிருக்கிற சட்டம் எங்களுக்கில்லே, உங்களுக்கு இருக்கிற வாரம் இரண்டுநாள் விடுமுறை எங்களுக்கு கிடையாது, ஒருநாள் விடாமல் வருஷம் முச்சூடும் நாங்க வேலைக்கு வரணும், உங்களுக்கு போனஸ் உண்டு, எங்களுக்கு கிடையாது, உங்களுக்கு வருஷாவருஷம் சம்பள உயர்வு உண்டு, எங்களுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.