(Reading time: 10 - 20 minutes)

சிறுகதை - நூற்றாண்டில் ஒரு நாள் - ஹன்சல் அஹமத்

300 ஆம் மாடியில் மேசை மேல் இருந்த கருவியில் இருந்து வந்த லேசர் ஒளி 58..59..00..01 என காட்டிக்கொண்டு இருந்தது. நியூஸ் 7 செய்தி வாசிப்பாளர் அறையின் நடுவே நின்று "நாட்டில் நிலவும் ஊழலை ஒழித்து , 2160 ஆம் ஆண்டு நம் நாட்டை வல்லரசு ஆக்குவேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார்" என்று கூறி மறைந்தார். நான் இங்கு வந்து 30 நிமிடங்கள் ஆகிவிட்டது. என்னை சுற்றி முழுதும் கருவிகள் தான் கிடக்கின்றன, இவை  அனைத்தும் மருத்துவ கருவிகள் . இந்த மாடியே வெள்ளை நிறத்தால் நிரம்பி இருக்கிறது. இப்படி ஒரு சுத்தத்தை இந்த நூற்றாண்டில் காண நான் புண்ணியம் செய்து இருக்கணும்.

"3..2..1 ஓபன் " என்ற சத்தம் கேட்டு பின்னால் திரும்பினேன், என்னை அழைத்து வந்த டாக்டர் முத்து பீரோ போல் இருந்த ஒரு பெட்டியில் இருந்து வெளியே வந்தார்.

"ஹலோ மிஸ்டர் அசோக்" என்று சொல்லிக்கொண்டே முன்னாள் இருந்த பட்டனை அழுத்தினார்.

"ஹலோ டாக்டர்"

"ஹலோ மிஸ்டர் அசோக்"  ஒலி வந்த பக்கம் திரும்பினேன். செய்தி வாசிப்பாளர் இருந்த இடத்தில் ,வெள்ளை கோட் அணிந்த , இரவின் நிறத்தில் ஒருவர் நின்று கை அசைத்துகொண்டு இருந்தார்.

"நான் தான் டாக்டர் எக்ஸ் "

"எக்ஸ்?"

"யெஸ், அயம் எக்ஸ்,ப்ரோம் இஸ்ரேல். உங்கள இங்க என்ன விஷயமா அழைச்சு இருக்கோம்னு தெரியுமா?"

"இல்லை டாக்டர்" ... "பட் என்னமோ என்னை வைத்து ஆராய்ச்சி செய்ய போறிங்கனு மட்டும் தெரியுது"

"குட், நீங்க கொஞ்சம் விவரமா தான் இருக்கீங்க.இதுக்காக தான் உங்கள நாங்க தெரிவு செஞ்சோம் "

"இதுல என்ன விவரம் இருக்கு ? சாதாரண பொது அறிவு தானே ?"

"இல்லை மிஸ்டர் அசோக். இந்த பரிசோதனையின் நோக்கமே அதுதான்"

"ப்ளீஸ் , எனக்கு தெளிவில்லை "

"இங்க பாருங்க அசோக், நாங்க விஞ்ஞானத்துல எவ்வளவு வளர்ந்துட்டோம். இன்னக்கி என்ன என்னமோ பண்ண முடியுது. பறக்கும் தட்டு, நிலாவில் வீடு, செயற்கை மனிதன், பூரண ஆரோக்கியம் ஹூம்....ஆனா இதை தாண்டி எங்களால அடுத்த கட்டத்துக்கு போக முடியல."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.