(Reading time: 10 - 20 minutes)

பதில் கிடைத்தாலும், மனம் இன்னும் இங்கே இருக்க ஏங்கியது...இன்னும் பல இருக்கின்றது என மனம் சொல்ல , நடத்துனரும் ஸ்கூல் வந்து விட்டது என சொன்னார்..

என் வலப்பக்கத்தில் அப்துல்லாஹ்வும் ,அங்காலே மத்தியூசும் அமர்ந்துகொள்ள நேற்று நடந்த கிரிக்கெட் போட்டி  பற்றி பேசிக்கொண்டோம். வகுப்பில் இந்த மதம் எல்லாம் பெயரில் மட்டும்தான் காணப்படுகிறது ,மனதில் அல்ல. நூற்றிஐம்பது ஆண்டுகள் தாண்டி புற்றுநோயை விட மதம் தான் மரணத்திற்கு முக்கியமான காரணம், அத பெயரோடு மட்டும் வெச்சுக்கோங்கடானு உரக்க கத்தனும் போல இருந்தது. ஸ்கூல்னு ஒன்னு இருக்காது , எல்லாரும் ஒரே பாடத்தை படிக்க மாட்டோம் , வீடுதான் ஸ்கூல் , எல்லாமே வீட்டில் கிடைக்கும். உன்னோடு அப்துல்லாவோ ,மத்யூசோ ,கணேஷோ உற்கார போவதில்லை. நண்பர்கள் இல்லை,நினைவுகள் இல்லை,சண்டைகள் இல்லை ..எதிர்க்கலாம் ஒரு இருட்டறை,விஞ்ஞானம் ஒரு சிறைச்சாலை .

பசி தாங்காது ஆசிரியருக்கு   தெரியாமல் உண்ணும் உணவு, பாடத்திற்கு வராமல் சுற்றித்திரியும் பொழுதுகள், மழையிலும் பறந்து விளையாடிய கணங்கள், திருட்டுத்தனமாய் எழுதிய பரீட்சைகள், ஏச மட்டும் தெரிந்த ஆசிரியர்கள், நண்பனாய் இருந்த ஆசிரியர், பேருந்திற்காக நிறுத்தத்தில் காத்திருந்த நிமிடங்கள்,  நண்பனின் முதல் காதல், அவள் மீதான முதல் பார்வை,முதல் காதல் , நண்பனின் உபதேசம், சென்ற சுற்றுலாக்கள், செல்லாத சுற்றுலாக்கள், சேர்ந்து நடித்த நாடகங்கள் , பிரச்சினையாக இருந்த விழாக்கள் , பயந்து எழுதிய உயர்தரம் ........................................ 12 வருடங்கள் , பசுமையாக கடந்து ஓடின.

இன்று தான் அந்த நாள் ,

"ஹாய் அசோக் நீங்கள் வர தாயாரா ? " கழுத்தில் தொங்கும் கருவியால் குரல் மட்டும் கேட்டது

"டாக்டர்... யெஸ் டாக்டர் "

"குட் ... ஒன்னும் யோசிக்காதிங்க . கவுண்ட் டவுன் ஸ்டார்ஸ் "

"வன் "

"டூ"

டீன் டீன் டீன் டீன்

"முத்து , என்னா நடந்தது ..மை கோட் "

"டாக்டர் , கனெக்சன் லாஸ்ட் னு வருது , ஐ திங்க் வீ லாஸ்ட் ஹிம் "

"மை கோட் , அப்போ டைம் மெஷினில் ஏதாவது கோளாறா? அசோக் எங்கு இருப்பான்? காலங்களுக்கு இடையில்?விண்வெளியில்?..... இது எப்படி சாத்தியம்? " டாக்டர் எக்சின் நெற்றி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.