(Reading time: 10 - 20 minutes)

"நீங்கள் இங்கே வந்த பிறகு அவை அனைத்தையும் நாங்கள் பார்த்து ,அப்படி ஒரு சூழலை இங்கே உருவாக்கி,அந்த வாழ்க்கையை சிலருக்கு வாழ வழி வகுப்போம். அவர்கள்தான் எம் எதிர்காலம். அவர்கள் ஆக்கபூர்வம் உடையவர்கள் ,அவர்கள் இந்த நவீன விஞ்ஞானத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்பவர்கள்."

"வாவ் அயம் ரெடி.பாட் ..பாட் இதில் ஆபத்து ஒன்றும் இல்லையே.?"

"இல்லை உங்களுக்கு ஏதாவது நடந்தால் நீ கழுத்தில் மாலைப்போல்  அணிந்து இருக்கும் கருவியினால் உன்னை உடனே இங்க அழைத்து வந்துவிடுவோம், கவலைப்படாதே , நேரம் இப்போது நம்முடையது , உன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது."

"நான் ரெடி.எப்போது செல்ல வேண்டும்?"

"பொறுமை.இந்த மாத்திரையை எடுத்துக்கொள். இதில் நீ அங்கு சென்றவுடன் இருக்கப்போகும் மாணவனின் தகவல்கள் இருக்கின்றன. அருந்தியவுடன் அவனுடைய நினைவுகளும் உன்னுள் வந்து விடும்.பகல் உணவை உண்டு விட்டு அந்த அறையினுள் செல் .மீதியை முத்து பார்த்துக்கொள்வான் .எதாவது சந்தேகம் இருந்தால் கேள் "

"ஒன்றுமில்லை" சிறிது யோசித்து விட்டு கேட்டேன் "உங்களுக்கு தமிழ் தெரியுமா?"

அவர் சிரித்துக்கொண்டே "விஞ்ஞானம்... நீ தான் இதற்கு சரியான ஆள் என்று கூறி மறைந்து விட்டார்.

அவர் சொன்ன மாத்திரையை கையில் எடுத்து  , எனக்கு ஆசையான இரண்டு மாத்திரைகளை மதிய உணவுக்காக உண்ட பின் அதையும் அருந்தினேன்.

"டேய் அசோக் எந்திருடா.. ஸ்கூல் போக நேரமாச்சு."

"ஸ்கூலா..ஹ்ம்ம் .என்னா கட்டில்ல படுத்து இருக்கோம் ....ஓஹ் இதுதான் 2005ஆ "மனசுக்குள்ளே சொல்லிக்கொண்டேன்

"அசோக் .லேட் ஆவுதுடா . எந்திரி ,போயிட்டு குளிச்சுட்டு வா"

ஏது குளிக்கணுமா? இங்க குடிக்க மட்டும் இல்லாம  குளிக்க எல்லாம் தண்ணி இருக்கா .சரி எழுந்து போயிட்டு பாப்போம். எழுந்து நேரே பாத்ரூமுக்கு போனேன் .யப்பா .... என்னா தண்ணி,என்னா குளிரு ..... குழாய திறந்தா தண்ணி கணக்கே இல்லாம வருது, இப்பவே ஒரு வீட்டுக்கு ஒரு நாளைக்கு 10 யுனிட் னு கட்டுப்படுத்தி இருந்தா,

பிறகு ஒரு வீட்டுக்கு 1 யுனிட்னு கட்டுப்படுத்தி இருக்க தேவை இருந்து இருக்காது.சாப்பிட்டு விட்டு வெளியே வந்து ,ஸ்கூல் ஆடையை அணிந்து கொண்டு இருந்தேன்.

"அசோக் வாடா, வந்து சாப்பிடு,இருக்கிற ட்ராபிக்ல நீ ஸ்கூல் போய்ட்டு சேர நேரமாகும்."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.