(Reading time: 10 - 20 minutes)

"வாட் டூ யூ மீன் ?"

"இதுவே ஒரு 150 ஆண்டுக்கு முன்ன பார்த்திங்கனு சொன்னால்,விஞ்ஞானம் துரித வளர்ச்சி அடைந்தது. வெறும் ஏட்டில் எழுதிய மனிதன் , கம்பியூட்டர் கண்டு புடிச்சு, இணையம் கண்டு புடிச்சு ,தன்னியக்க கணனி கண்டுபிடிக்க சுமார் 30 ஆண்டுகள் தான் சென்று இருக்கு. கணனி தான் உலகின் சிறந்த கண்டுபிடிப்புனு சொல்வாங்க.அவங்க விஞ்ஞானத்துல துரித வளர்ச்சி அடஞ்சி இருக்காங்க. குறுகிய காலத்தில் எல்லாம் தலைகீழாக மாறி இருக்கிறது. இன்று நாம் செய்யும் புதுமைகளுக்கு வித்து இட்டவர்கள் அவர்கள். ஆனால் இப்போதைய விஞ்ஞானிகள் எங்களால அப்படி தலைகீழாக புரட்டி போடும் எந்த கண்டுபிடிப்புகளையும் செய்ய முடிவதில்லை . இதுக்கெல்லாம் காரணாம் என்னானு பார்த்தால்..."

"மதிய உணவுக்கான நேரம் ,மதிய உணவுக்கான நேரம்" டாக்டரின் கோட் அவருக்கு மதிய உணவை ஞாபகப்படுத்த ,டாக்டர் கழட்டிவிட்டு மேலே சொல்ல ஆரம்பித்தார்.

"இதுக்கெல்லாம் காரணம் என்னானு பார்த்தால் எங்களுடைய ஆக்கபூர்வம் இல்லா தன்மை , எங்களை விட இனி வளரும் குழைந்தைகள் ஆக்கபூர்வம் சிறிதும் அற்றவர்களாகவே வளருவார்கள். அதுனால அவங்களால ஒரு எல்லைக்கு அப்பால் யோசிக்க முடிவதில்லை.சோ ..."

"சோ ?..." என்று பரீட்சை ரிசல்சட்ஸ் வரும் வரை கணனியின் முன்னால் காத்திருக்கும் மாணவன் போல் அவரைப் பார்த்தேன்.

"நாங்கள் உங்களை 21ஆம் நூற்றாண்டிற்கு அனுப்ப போகிறோம்"

"அனுப்பி?"

"இங்க பாருங்க அசோக்.நாங்க உங்கள சிலேட் பண்ண ஒரு காரணம் இருக்கு. இப்ப உலகத்துல காணப்படுகிற ஒரு சில ஓவியர்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்கு சரி ரசனை இருக்கிறது. ஆக்கப்பூரவமாக இருக்கீர்கள்.நீங்கள் தான் சரியான ஆள் "

"அது ஓகே.ஆனால் எதற்கு சரியான ஆள் ?"

"உங்களை ஒரு மாணவனாக 2005ஆம் ஆண்டிற்கு அனுப்ப போகிறோம்,11 வயது சிறுவனாக.நீங்கள் உங்கள் கல்வியை முடிக்கும் வரைக்கும் 15 ஆண்டுகள் அங்கேயே இருப்பீர்கள். அங்கு இருக்கிற சூழல்,கல்வி ,பழக்கவழக்கம் என ஒரு 21ஆம் நூற்றாண்டு மனிதனாகவே நீங்கள் வாழப்போகிறீர்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கண்கள் ஊடாக பதிவு செய்யப்படும்."

"ஹ்ம்ம் இண்டர்ஸிட்ங். ஆனால் அதை வைத்து என்ன செய்யலாம்?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.