(Reading time: 10 - 19 minutes)

 ஆண்டுகள் ஐந்து நல்ல முறையில் கழிந்தபிறகு, இயற்கை இவர்களை சோதித்தது!

 வானம் பொய்த்தது! வறட்சி தாண்டவமாடியது! ஆற்றுநீர் வரண்டது!

 களஞ்சியத்திலும் குதிரிலும் இருந்த அத்தனை நெல்லும் எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து பசியை போக்கமுடியும்?

 கஸ்தூரி மறுபடியும் காரில் வந்து, பெற்றோர் அனுப்பிய செய்தியை தெரிவித்தாள்.

 " அன்றே நூறுகோடி ரூபாயை பெற்றுக்கொண்டு நிலங்களை விற்றிருந்தால், இன்று இந்த நிலை வருமா? போனால் போகிறது, இப்பொழுதாவது விழித்துக் கொள்ளுங்கள்! கிடைக்கிற விலைக்கு விற்று பணத்துடன் பட்டினம் வந்து சேர்ந்து மிச்ச நாட்களை நிம்மதியாக வாழுங்கள்!"

 கங்காதரனும் யோகமும் சிறிதும் தடுமாற்றமின்றி, பணத்தையும் மனிதர்களையும் நம்புவதைவிட, கடவுளை தொடர்ந்து நம்பலாம். அவர் தருகிற வாழ்வை மனதார ஏற்போம். நிலங்களை விற்க நாங்கள் யார்?"

 அடுத்து, அவர்கள் ஊர் வழியே நெடுஞ்சாலை அமைக்க அரசு நிலங்களை எடுத்துக்கொண்டு நஷ்ட ஈடு தருவதாக அறிவித்தது.

 கங்காதரன், மனைவியின் நகைகளை விற்று வக்கீலை வைத்து, விளைநிலங்களை சாலை அமைக்க அரசு எடுத்துக்கொண்டால், நாட்டின் உற்பத்திக்கும் உழவர்களுக்கும் ஏற்படும் பாதிப்பை வாதங்களாக எடுத்துவைத்து, அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தினார்.

 

 கங்காதரனும் யோகமும் சனங்களை வேறு ஊர் சென்று பிழைக்க வழி தேடச் சொல்லியும் அவர்கள் மறுத்துவிட்டனர்.

 " ஐயாவும் அம்மாவும் சோறு போட்டு வளர்த்த எங்களை எப்படி, அவங்களைவிட்டு பிரியச் சொல்றீங்க? நீங்க பசியிலே வாடும்போது, நாங்க சாப்பிட மனசு வருமா? வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஐயா, அம்மாவுடன்தான்!"

 ஒருநாள் திடீரென வானம் கறுத்தது. மேகம் திரண்டது! மழை கொட்டியது!

 மீண்டும் பயிர்கள் நடப்பட்டன! மரங்களும் செடிகளும் துளிர்த்தன!

 எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி மீண்டும் சுடர் விட்டது!

 கோவிலை புதுப்பித்து, திருவிழா எடுத்தனர். பூசைகள் சிரத்தையுடன் செய்தனர். ஐயாவையும் அம்மாவையும் தோளில் தூக்கிவைத்து கொண்டாடினர்!

 அப்பாவி மக்களின் இந்த தூய்மையான அன்பை பெற்ற இருவரும் எந்தக் குறையுமின்றி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.