(Reading time: 8 - 16 minutes)

 

 " மனசு கேட்கலையா? பரிதாபமா இருக்கா? அப்ப ஒண்ணு பண்ணு, இந்தக் குழந்தையை

 

உன் வீட்டுக்கு அழைச்சிகிட்டுப் போய், சோறு போட்டு வளர்த்துக்கிறியா? இப்பவே அனுப்பறேன்.........."

 

 எனக்கு அதிர்ச்சியாக இருந்தது! இந்தப் பெண்மணி ஏன் இப்படி தூக்கி எறிந்து பேசுகிறாள்? குழந்தை அவளுடையதா, இல்லையா?

 

 இப்படி பல கேள்விகள் அலைமோத, நின்றிருந்தபோது, அந்தப் பெண்மணி தன் வெறுப்பை என்மீது கொட்டினாள்!

 

 "இப்படி வெறும் வார்த்தையிலே பரிதாபத்தை காட்டறவங்கதான் பெரிய பேச்செல்லாம் பேசி, மற்றவங்களுக்கு உபதேசம் செய்வாங்க! சரி சரி, இடத்தை காலி பண்ணு! வேலைவெட்டி இல்லாம ஊர் சுத்தற பொறுக்கி!"

 

 வீட்டின் கதவை என் முகத்தில் அடிப்பதுபோல், ஓங்கி அறைந்து சாத்திவிட்டாள்! கதவின்மீது ஒரு வட்டத்துக்கு உள்ளே எட்டு என்ற எண் காட்சியளித்தது!

 

 சிந்தனையில் மூழ்கியவாறு, நான் மேலே நடந்தேன்!

 

 ஆமாம், அந்தப் பெண்மணி சொல்வதிலே என்ன தவறு? வெறும் சொற்களில் பரிதாபம் காட்டுவது, வெந்த புண்ணிலே வேலை செருகுவது போலத்தான்!

 

 நண்பன் ஒருவன், முன்னொரு சமயம், நான் ஏதோ பேசியதற்கு பாராட்டுவதற்காக, என் முதுகில், தட்டிக் கொடுத்தான், அவன் தட்டிய இடத்தில் ஏற்கெனவே பட்ட காயம் ரணமாக இருந்த பகுதியில் விழவே, நான் துடித்துப் போனேன்.

 

 எனக்கு மரணவலி! அவன் என்னவோ என்னை பாராட்டவே தட்டிக் கொடுத்தான். ஆனால்,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.