(Reading time: 8 - 16 minutes)

அதன் விளைவு?

 

 அதற்கும், சற்று முன்பு, நான் அந்த சிறுவன்மீது பரிதாபம் காட்டியதற்கும், என்ன வேறுபாடு?

 

 இப்படி ஏதேதோ எண்ணங்களிடையே, தெருக் கோடிக்கு வந்ததும், அங்கே தொங்கிக் கொண்டிருந்த தெருவின் பெயரை பார்த்தேன்.

 

 "மகாத்மா காந்தி தெரு"

 

 என்ன பெயர் பொருத்தம்! சிரிப்பு வந்தது.

 

 வீட்டை அடைந்ததும், மனைவியிடம் நடந்ததை தெரிவித்தேன்.

 

 அவள் ஆறுதலாக என்னை அணைத்துக்கொண்டு, ''இந்த உலகுக்கும் உங்களுக்கும் ஏழாம் பொருத்தம்!" என்றாள்.

 

 "ரஞ்சனி! அந்த சிறுவனின் அப்பாவி முகம் கண்ணிலேயே நிக்குது! அவன் என்ன குற்றம் செய்தான்? அவன் ஏன் தண்டிக்கப் படுகிறான்? ரஞ்சனி! சொல்ல மறந்துவிட்டேனே, அந்த சிறுவனை வீட்டுக்குள் அழைத்த பெண்மணி அவனிடம் என்ன கூறினாள், தெரியுமா? 'சீக்கிரமா வீட்டை பெருக்கி சுத்தம் பண்ணு' ன்னு அந்த சிறுவனை விரட்டுகிறாள்!

 

 ரஞ்சனி! மனசாட்சியே இல்லாத சமூகமா, எப்படி, ஏன் மாறினோம்?

 

 அந்தப் பெண்மணி, குத்திக் காட்டினதுபோல, வெறும் வாய்ச்சொல் வீரனாக இல்லாமல், ஏதாவது நம்மால் முடிந்ததை செய்வோமா?"

 

 " கட்டாயமா! நான் யோசிக்கிறதையே, நீங்க கேட்கிறீங்க, ஏங்க! அந்த சிறுவனை நாம வளர்ப்போமா?"

 

 உற்சாகத்தில் எழுந்து அவளை கட்டி முத்தமிட்டேன்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.