(Reading time: 8 - 16 minutes)

 

 நல்லது செய்ய நினைத்தால், அதை தள்ளிப் போடக்கூடாது!

 

 நேரம், காலம், பார்க்காமல், உடனே எழுந்து, மகாத்மா காந்தி தெரு எட்டாம் எண் வீட்டுக் கதவை தட்டினோம்.

 

 கதவை திறந்தது, அதே பெண்மணி!

 

 " ஏன்யா உனக்கு வேற வேலையே இல்லையா? இங்கேயே சுற்றிக்கிட்டிருக்கே......?"

 

 என்னை பின்னுக்கு தள்ளிவிட்டு, ரஞ்சனி அந்தப் பெண்மணிக்கு வணக்கம் சொன்னாள்.

 

 " உங்களிடம் கொஞ்சம் பேசலாமா?"

 

 " இத பாருங்க! எனக்கு தலைக்கு மேலே வேலையிருக்கு, சட்டுபுட்டுனு சொல்லவந்த விஷயத்தை சொல்லுங்க!"

 

 " எங்களை தெருவிலேயே நிக்கவைச்சு பேசி முடிவு செய்கிற விஷயமில்லீங்க........."

 

 " நீங்க என்ன உறவு கொண்டாடவா வந்திருக்கீங்க, உள்ளே கூப்பிட்டு உட்கார்த்திவைச்சு பேசறதுக்கு? இங்கேயே பேசுங்க!"

 

 ரஞ்சனி என்னைப் பார்த்தாள்!

 

 இப்படி முரட்டுத்தனமாக பேசுபவளிடம் எப்படி வந்த விஷயத்தை தெரிவிப்பதென ரஞ்சனி விழித்ததில், வியப்பில்லை!

 

 ரஞ்சனியை பின்னுக்கு தள்ளி, நான் அந்தப் பெண்மணி எதிரில் நின்றேன்.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.