(Reading time: 8 - 16 minutes)

 " சற்று முன்பு, என்னிடம், உங்க வீட்டு சிறுவனை உடனே அனுப்பறேன், அழைத்துப் போங்கன்னு சவாலா பேசினீங்களே, அதான் அவனை அழைத்துப்போக வந்திருக்கேன், அனுப்பிடுங்க அவனை, நாங்க உள்ளேயே வரலை........"

 

 அந்தப் பெண்மணி இதை எதிர்பார்க்கவில்லை என்பதை, அவள் முகம் காட்டிக் கொடுத்தது!

 

 " அது....வந்து......"

 

 " வீண் பேச்சே வேண்டாம், அனுப்புங்க, சிறுவனை உடனே!"

 

 என் கை ஓங்கியுள்ளதை, குரலை உயர்த்திக் காட்டினேன்.

 

 " சரி சரி, உள்ளே வாங்க! பேசுவோம்!"

 

 " வேண்டாங்க, உங்களுக்கு தலைக்கு மேலே இருக்கும், சட்டுபுட்டுனு பையனை அனுப்புங்க! அவனை அழைச்சிகிட்டு நாங்க இடத்தை காலி பண்றோம்.........."

 

 " நான் அவசரப்பட்டு அப்படி பேசினது, தப்புதான்! உள்ளே வாங்க!" என குரலை தாழ்த்தி, கைகளை குவித்து, அழைத்தவுடன், புன்னகையுடன் இருவரும் உள்ளே சென்றோம்.

 

 சோபாவை தூசி தட்டி, எங்களை உட்காரச் சொன்னாள்.

 

 அப்போது, அந்தச் சிறுவன் உள்ளிருந்து தலையை மட்டும் நீட்டி, என்னைப் பார்த்து சிரித்தான்.

 

 நானும் பதிலுக்கு கட்டைவிரலை உயர்த்திக் காட்டினேன்.

 

 " இப்ப சொல்லுங்க! நிஜமாவா அவனை அழைத்துப் போக வந்திருக்கீங்க?"

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.