(Reading time: 8 - 16 minutes)

 " எங்களுக்கு தலைக்குமேலே வேலை இருக்குங்க, உங்ககிட்ட தமாஷ் பண்ண வரலைங்க!" என ரஞ்சனி தன் பங்குக்கு எகிறினாள்!

 

 " அப்படீங்களா? அப்ப சரி, ரெண்டு லட்ச ரூபாயை கீழே எடுத்து வைச்சிட்டு, பையனை கூட்டிக்கிட்டு போங்க!"

 

 " எதுக்காக பணம் கேட்கறீங்க?"

 

 " இந்தப் பணத்தை என்னிடமிருந்து கடனா வாங்கிகிட்டு, திருப்பித் தராத காரணத்துக்காக, பையனின் அப்பா, அம்மாவை வேற குற்றத்திலே சிக்கவைச்சி, சிறைக்கு அனுப்பிட்டு, இந்தப் பையனை எனக்கு அடிமையா அழைத்து வந்திருக்கேன், புரிஞ்சுதா? பணத்தை கொடுங்க, பையனை கூட்டிக்கிட்டு போங்க!"

 

 எங்களிருவருக்கும் பேரதிர்ச்சி!

 

 இந்த நாட்டில் இப்படியெல்லாம்கூட நடக்கிறதா?

 

 ஏழைகள் பசி தாங்காமல் கடன் வாங்கிட்டு, திருப்பித்தர முடியலேன்னா, இந்தக் கொடுமையா?

 

 கோடீஸ்வர முதலாளிங்க, வங்கியிலிருந்து ஆயிரங் கோடிகளுக்குமேல் வாங்கிய கடனை திருப்பித் தராம இன்னமும் வெளிநாட்டிலே சுதந்திரமா நடமாடறாங்க!

 

 அதிகாரிகளும் அமைச்சர்களும் மடாதிபதிகளும் லஞ்சம், சூது, தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்றல், செய்து கோடிக்கணக்கில் கொள்ளை அடித்துவிட்டு, பிடிபட்டு, வருஷக்கணக்கிலே கோர்ட்டிலே வாதாடிக்கிட்டு, சுதந்திரமா நடமாடறாங்க!

 

 நிர்பயா வழக்கிலே, குற்றவாளிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை!

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.