(Reading time: 6 - 11 minutes)

மாதிரியா இருக்கு? காலைல எட்டு மணிக்குப் போயிட்டு நைட் பத்து மணிக்கு வர்ரீங்க. பதினாலு மணிநேரம் உங்களைப் பாக்கவே முடியறதில்லை. எங்க ஆபீஸ்ல வேலை செய்யற சோபனாவும் அவள் கணவரும் எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க தெரியுமா? காலைல பைக்கில ஒன்னாவே வர்றாங்க. சாயங்காலமும் ஒன்னாவே கெளம்பிடறாங்க. மதியம் லன்சும் வீட்டுல இருக்கற மாதிரியே ஒன்னாவே சாப்பிடறாங்க., அதுக்குத்தான் உங்களையும் எங்க ஆபீஸ்லயே வேலைக்கு வந்துட சொல்றேன்” என்று பல நாட்களாகவே தான் வற்புறுத்தும் விஷயத்தை இன்றும் ஆரம்பித்தாள் யாமினி. 

“போச்சுடா மறுபடியும் அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளான்னு ஆரம்பிச்சுட்டியா?” என்று கேலியாக ஆரம்பித்தவன் அவள் முறைக்கவும் சட்டென நிறுத்தி  “யாமினி உனக்கு ஏற்கனவே பல தடவை இந்த விஷயத்தை சொல்லியாச்சு. இப்பொவும் சொல்றேன். கூடவே இருந்தாதான் அன்பு என்பதில்லை. ஏத்தனையோ பேர் மனைவியை விட்டுவிட்டு பாரின் போறதில்லையா.அதை விட நாம எவ்வளோ பரவாயில்லைன்னு நெனைச்சுக்கோ. ஒரே இடத்துல ரண்டு பெரும் வேலை செய்யறதுல பல பிரச்சனைகள் உண்டு. அது இன்னும் உன் கண்களுக்குத் தெரியலைன்னு நினைக்கிறேன். இந்த விஷயத்துல இதுக்கு மேல என்னை நீ கம்பெல் பண்ணக் கூடாது” என்று தீர்மானமாக கூறிவிட்டான்

பல விஷயத்தில் அவனுக்கு வீட்டுக் கொடுக்கும் யாமினிக்கு ஏனோ இந்த விஷயத்தில் மட்டும் அவன் கூறுவதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

மறுநாள் பக்கத்து சீட் சோபனா ரொம்ப சந்தோஷமாகக் காணப்பட்டாள்.

"என்னடி இன்னிக்கு இவ்ளோ சந்தோஷமா இருக்கே" என்று கேட்டாள் யாமினி.

"வேற ஒண்ணுமில்லை. நா அம்மா ஆகப் போறேன். இன்னிக்குத்தான் கன்பார்ம் ஆச்சு" மகிழ்ச்சியுடன் தெரிவித்தாள் சோபனா.

“கன்கிராட்ஸ் அப்புறம் அவர் எங்கே?”

"அவரா.....எனக்கு ஜூஸ் வாங்கப் போயிருக்கார்” என்றாள் பெருமையாக.  

அன்று முழுவதும் அவள் கணவன் அவளுக்கு செய்த பணிவிடைகளைப் பார்த்து யாமினிக்கு பொறாமையாக இருந்தது. அவள் கணவன் பக்கத்திலேயே இருப்பதால் தானே இதெல்லாம் சாத்தியமாகிறது? சுரேன் மேல் கோபம் கோபமாக வந்தது.   

அன்றும் யாமினி தன் பல்லவியைத் தொடர சுரேனும் தன் பழைய முடிவையே சொல்ல பிரச்சனை அதிகமாகி முதல் முறையாக இருவரும் பேசவில்லை. ஒரு வாரம் இப்படியே போனது.    

அடுத்த வாரம் வழக்கம் போல வேலைக்கு சென்ற யாமினிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.