(Reading time: 5 - 10 minutes)

பார்த்து தெரிந்து கொண்டாள்.

இப்போ செய்ய தெரியுமா என்று அவன் கேட்க ஆமாங்க என்று தன் குண்டு கண்களை விரித்து சொன்னாள்.

அவள் கண்களையே ஏக்கத்தோட பார்த்தவன் நீ செய்து வை... இன்னும் 5ஹவர்ஸ்ல நான் வந்திடறேன் என்று சொல்லி விட்டு சென்றான்.

ஐந்து மணி நேரம் கழித்து...

அழைப்பு மணி ஓசை கேட்டதும் மீண்டும் ஒருமுறை தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு கதவை திறந்தாள்.

குளித்து முடித்து முடியை சிறிய கிளிப் கொண்டு லாக் செய்து இருந்தாள்.

சோப்பின் வாசனையும் ஷேம்பு வாசனையும் முந்தி கொண்டு வீச அவன் நாசியோ குலோப் ஜாமுன் வாசத்தை தேடியது.

அவள் நறுமணத்தை உள்ளே இழுப்பது கண்ட பெண் மனமோ தன் மீது வரும் வாசனையை தான் நுகருகிறான் என்று எண்ணி கொண்டு அவன் கையை பிடித்தாள்.

அவன் அவளையே பார்க்க நீங்க கேட்ட குலோப் ஜாமுன் செய்து வைத்திருக்கிறேன். சீக்கிரம் ப்ரஸ் ஆகிட்டு வாங்க என்று சொல்லவும் அவன் எதிர்பார்த்த பதில் கிடைத்த மகிழ்ச்சியில் அவள் பட்டுக் கன்னத்தில் செல்ல முத்தமிட்டு விட்டு குளியலறைக்கு சென்றான்.

ஒரு பாக்கெட் முழுவதும் போட்டியா... ஒரு முப்பது முப்பத்தைந்து உருண்டையாவது இருக்கும்ல என்று கேட்க, அவளோ நீங்க வேற மொத்தம் நாற்பதுங்க சீக்கிரம் வாங்க என்று சொல்ல அவனும் வேகமாக வெளியே வந்து டிரஸ் அணிந்து கொண்டான்.

அவன் கை பிடித்து அழைத்து சென்று அவனை டைனிங் டேபிளில் அமர வைத்தாள்.

அவள் ஆடி அசைந்து நடந்து செல்ல அவள் அழகை ரசித்தான். அவள் ஒரு பௌலை எடுத்து கொண்டு டேபிளில் வைத்தாள்.

அவன் அவள் கையை பிடித்து ஒரு முத்தம் கொடுக்க அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது. மெல்ல அவள் விழி உருட்டி பார்க்க அவனுக்கு நாவில் எச்சில் ஊற ஆரம்பித்தது.

உனக்கு ஒரு கிண்ணம் எடுத்து கொண்டு வா என்று அவன் சொல்ல அவளோ எனக்கு வேண்டாம்ங்க என்றாள். அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மொத்த குலோப் ஜாமுன் நமக்கு தான் என்ற உற்சாகத்தில் மூடியை திறந்தவன் அதிர்ந்து விட்டான்.

நாற்பது உருண்டை என்று சொன்ன.. இங்க ஒரே ஒரு உருண்டை தான் இருக்கு மற்றதெங்க என்றான்.

உப்பு போட சொல்லலையா, அதான் உப்பு போடனுமா வேண்டாமானு ஒன்று, இனிப்பு போதுமா என்று ஒன்னு... ஜீராவில் ஊறிட்டா என்று ஒன்னு என்று பார்க்க இப்படி எடுத்து இப்படி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.