(Reading time: 7 - 14 minutes)

ஓட்டத்தை நிறுத்தி விட்டு, நின்று திரும்பிப் பார்த்தான் கோடாங்கி.

அருகில் வந்த உருவம் அவனை நெருங்கியதும் அவன் கால்களைக் கட்டிக் கொண்டு ஓங்கிய குரலில் பெரிதாய் அழ,

அந்த உருவத்தின் தாடையைத் தொட்டுத் தூக்கிப் பார்த்தான் கோடாங்கி.

சிறுவன்.

சுமார் ஆறு அல்லது ஏழு வயதேயிருக்கும் ஒரு சிறுவன்.

“யாரப்பா நீ?” கோடாங்கி கேட்க,

“நா…நான்…கணேசன்!” தேம்பியபடி சொன்னான் சிறுவன்.

“அது செரி…இந்த நேரத்துல நீ எதுக்கு இங்கே வந்தே?...யார் கூட வந்தே?”

“நா மட்டுந்தான் வந்தேன்”

“தனியாவா?”

சிறுவன் மேலும், கீழுமாய்த் தலையாட்ட,

“எதுக்குப்பா?”

“அம்மா வேணும்” என்றபடி அந்தச் சிறுவன் கோடாங்கியின் துணி மூட்டையைக் காட்டினான்.

“அம்மாவா?...உங்கம்மா இங்கேயா இருப்பாங்க?...வீட்டில் அல்லவா இருப்பாங்க?”

“இல்லை எங்கம்மா உங்க கிட்டேதான் இருக்காங்க!” என்றபடி மறுபடியும் துணி மூட்டையைச் சிறுவன் காண்பிக்க,

குழம்பிப் போன கோடாங்கி, “அடடே…நீ என்ன கேட்கறே?ன்னே எனக்குப் புரியலையேப்பா!..சரி…வா!...காட்டு…உங்கம்மாவை” என்றபடி கோடாங்கி துணி மூட்டையை நோக்கி நடக்க,

அவனுக்கு முன்னால் வேகமாய் ஓடி வந்து, அந்தத் துணி மூட்டையைப் பறித்து, அதனுள்ளிருந்து அந்த வெளிர் நீலப் புடவையை வெளியே எடுத்து, நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, “இதுதான் எங்கம்மா” என்றான் சிறுவன்.   சொல்லும் போது அவன் கண்களில் பேரானந்தம் வழிந்தது.

கோடாங்கிக்கு லேசாய்ப் புரிய ஆரம்பித்தது.

“உங்கம்மா எங்கே தம்பி?” மெல்லிய குரலில் கேட்டான்.

“சாமி கிட்டே போயிட்டாங்க!...இனிமே வரமாட்டாங்க!...எங்கப்பா சொன்னாரு”

“அப்படியா?...இது உங்கம்மா புடவையா?...உனக்கு வேணுமா?”

“ஆமாம்..நான் தெனமும் இதைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டுத்தான் தூங்குவேன்!...இதுல எங்கம்மா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.