(Reading time: 9 - 18 minutes)

 ' நான் வந்ததையோ, கடிதம் தந்ததையோ, தேனீக்கு தெரிய வேண்டாம். அவள் மனம் புண்படும்.'

அதற்குமேல், இருவராலும் படிக்க முடிய வில்லை!

ஓடிவந்து, இறுகத் தழுவி அவனை உச்சி முகர்ந்தனர்.

சைகையால், ' நீ ரொம்ப உயர்ந்து நிற்கிறாய், நீ கடவுளுக்கு ஈடு!' என கையெடுத்து கும்பிட்டனர்.

தலை குனிந்து அற்புதன் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டே வெளியேறினான்!

பாட்டி, முருகனுக்கும் பேரதிர்ச்சி!

" பாட்டி! சாமி படத்தை போட்டு உடைத்தால் என்ன, இப்படியா ஒரு கொடுமையை செய்வது?"

" ஆமாம்மா! நானும் அதையே நினைக்கிறேன்."

  " அப்பாவும் பிள்ளையும் எதையே நினைக்கிறீர்கள்?" என கேட்டவாறு உள்ளே வந்தாள், தேனீ!

அப்போதிருந்த கோபம் தந்தை-தாய்-மகன் மூவரையுமே, நிலையிழக்கச் செய்து, உண்மையை போட்டு உடைக்கச் செய்தது!

தேனீ அலட்டிக் கொள்ளவே இல்லை!

  'அதனால் என்ன?' என்ற கேள்வியை பார்வையில் நிரப்பி, எல்லோரையும் உற்று பார்த்தாள்!

" இது எவ்வளவு பெரிய குறை! இது உன்னை பாதிக்க வில்லையா? காதலுக்கு கண் இல்லை என்பது இதுதானா?"

" நிறை, குறை, இரண்டும் கலந்தவனே மனிதன்! ஒருவரை நாம் உண்மையாக நேசித்தால், ஒன்பது நிறைகளைப் பார்ப்போமே தவிர, அந்த ஒரே ஒரு குறை கண்ணுக்குத் தெரியாது."

" இந்தக் குறை பத்தில் ஒன்றல்ல; ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்! குடம் பாலும் விஷமாகிவிடும்!"

" நீங்கள் அந்தக் குறை விஷத்துக்கு ஈடு என்கிறீர்கள், நான் அதை குறையாகவே பார்க்கவில்லை, அவனுக்கு அந்தக் குறையே தெரியாமல் அவனை சந்தோஷமாக வாழ வைக்க நான் துடிக்கிறேன்."

" நீ அவனைப்பற்றி, நினைக்கிறதையே, உன்னை பெற்ற நாங்கள், உன்னைப் பற்றி நினைக்கிறோம்.

நீ எங்கள் உயிர்! உன் நிறைவான வாழ்க்கையே எங்கள் லட்சியம்! இதில் ஒரு சமரசமும் கிடையாது....

ஆனால், நாம் அவனுக்கு உதவ, ஒரு வழி இருக்கு! ஒரு நல்ல ஏழைப் பெண்ணாகப் பார்த்து நாமே அவனுக்கு திருமணம் செய்து வைப்போம்!"

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.