கங்காதரன் ஆர்யாவை உள்ளே வரச் சொல்லி, அமர வைத்து, மருந்து வாங்கிவர ஆள் தேவை என தயங்கிச் சொன்னார்.
" இவ்வளவுதானே! நான் ஏற்பாடு செய்யறேன் உடனே! கொண்டாங்க, மருந்துசீட்டை! பணமும்கூட! ரேஷன் கடையிலே அரிசி, பருப்பு, இனாமா தருவதோடு ஆயிரம் ரூபாய் பணமும் அரசு தராங்க, உங்க ரேஷன் கார்டு, ஆதார் கார்டு தாங்க, அதுக்கும் ஆள் அனுப்பறேன்"
இறைவா! உன்னிடம் சரண் அடைந்தவர்களை நீ கைவிடுவதே இல்லை!
சிறிது நேரத்தில், ஒரு ஆள் எல்லாவற்றையும் தந்து விட்டுச் சென்றான்!
" கோமதி! நாம் ரொம்ப காலமா உறுதியா கடவுளை நம்பினது, வீண் போகலே..."
" உண்மைதான்! ஆனால், இந்தமாதிரி ஏற்பாடு செய்யா விட்டாலும், அவரை நம்பித் தான் வாழணும். அதிக பட்சம் உயிர் போகும், அவன் தந்த உயிர் அவன் எடுத்துக்கறான் சரிதானே?"
" கோமதி! என்னைவிட நீ இன்னும் தெளிவாயிருக்கே எனக்கே தைரியம் சொல்றே, சந்தோஷமாயிருக்கு!"
இவர்களை சோதனைக்கு உள்ளாக்க, ஆண்டவனுக்கு என்ன மகிழ்வோ?
அன்றிரவு, கங்காதரனுக்கு திடுமென தொண்டையில் ஏதோ புதிய தடை உருவாகுவது போல, இருமியது. தண்ணீர் குடித்தும் குணமாகவில்லை.
அவருக்குப் பயம் வந்தது!
இந்த புதிய தொற்று நோயின் அறிகுறிகளில் ஒன்று தொண்டையில் அசௌகரியமாக உணருவது என, செய்திகளில் படித்தது ஞாபகம் வந்தது!
ஒருவேளை, தனக்கு தொற்றுநோயோ?
அந்த சந்தேகம் உறுதிப் பட்டால், பாவம்! கோமதி என்ன செய்வாள்?
அவளுக்கு அனுபவமே கிடையாதே, இதுவரை, எல்லாம் தானே பார்த்துக் கொண்டுவிட்டு, இப்போது திடீரென அவளை தனியாக தவிக்கவிட்டால், அவள் என்ன செய்வாள்?
வெளிநபர் எவரும் உதவி செய்யவும், தங்களை நோய் தொற்றிக் கொள்ளுமோ எனும் பயத்தில், முன்வரமாட்டார்களே!
இறைவா! நான் இதை அவளிடம் தெரிவிப்பதா, வேண்டாமா?
கங்காதரனுக்கு தெரிந்த 'காயத்ரி' மந்திரத்தை ஜபித்தவாறே உறங்கிவிட்டார்.
காலையில் எழுந்ததும் காபி குடிக்கும்போது, சகஜமாக பேசிக்கொண்டே தொண்டைப் புண்பற்றி தன் மனைவியிடம் சொன்னார்.
" அது வேற ஒண்ணும் இல்லீங்க, இந்த கடுமையான கோடையிலே, திடீரென மழை லேசாக நேற்று பெய்த காரணத்தினாலே, சூட்டை கிளப்பிவிட்டிருக்கு! கஷாயம் போட்டுத் தரேன், ரெண்டு
Thank u so much sir😊🙏🏻
Thank you.
Good night 💤