வேளை குடிங்க, சரியாகிவிடும்!"
மேற்கொண்டு கங்காதரன் ஏதும் பேசாமல் கஷாயம் சாப்பிட்டார். முதல் முறை குடித்ததுமே, ஓரளவு உறுத்தல் குறைந்தது போல் உணர்ந்தார்.
'இறைவா! கோமதி நம்புவதுபோல, என்னை குணப்படுத்திவிடு!' என வேண்டிக் கொண்டார்!
ரெண்டாவது முறை கஷாயம் குடித்ததும், 'போயே போச்சே!' என விளம்பரத்தில் வருவதுபோல குதூகலித்தார்.
பிறகு பேச்சோடு பேச்சாக, கோமதியிடம் தன் அனுபவத்தையும் மனப்போர் நடந்ததையும் சொன்னார்.
அவள் வாய்விட்டு சிரித்தபின், சொன்னாள்: " வயதாகிவிட்டதனாலே, உங்களுக்கு வேற ஏதோ பயம் வந்துவிட்டதுன்னு நான் நினைக்கிறேன்.
பயப்படாதீங்க! நீங்க எனக்கு சொல்லித் தந்ததை உங்களுக்கு ஞாபகப்படுத்த நினைக்கிறேன்.....
மரணம் என்பது திடீர்னு ஒருநாள் வருவது அல்ல! நாம் தினமும் மாறிக் கொண்டே இருக்கிறோம்! நேற்றிருந்த நாம் இன்று இல்லை! வளர்ச்சியோ, தளர்ச்சியோ, வித்தியாசம் ஏற்படுது! நாம் ஒவ்வொரு நாளும் இறந்து மறுநாள் மீண்டும் பிறக்கிறோம்! ஏதாவது பயம் ஏற்படுதோ, நமக்கு! ஆனால் ஏதோ ஒருநாள் இறந்த நாம் மீண்டும் பிறக்கமாட்டோமோ என்று நினைவு வந்ததும், அது வரை இல்லாத திகில் வருது!
இங்கே பிறக்காவிட்டா, வேறு ஒரு வீட்டிலே, குடும்பத் திலே, புது உறவிலே பிறக்கத் தான் போகிறோம்!
வாழ்க்கை தொடர்ச்சி இருந்து கொண்டேயிருக்கும். இனிமேல், தைரியமா இருங்க!
பயம் வந்தால், என்னை எழுப்புங்க! எனக்கு எந்த பயமும் கிடையாது! ஏன் தெரியுமா?
நாம் அனைவரும் யார்? கடவுளின் குழந்தைகள்! நம்மை தன் கண்ணுக்குள் வைத்து காக்கும் தாய், அவன்!
அதனாலே, புறவாழ்வில் எந்த ஆபத்து வந்தாலும், 'இதுவும் கடந்து போகும்'னு மனசுக்கு சொல்லுங்க!"
கங்காதரன் கோமதியின் உருவில், கடவுள் கிருஷ்ணன், பாரதப் போரில், அர்ஜுன்னுக்கு செய்த கீதோபதேசமாக, ஏற்றுக் கொண்டார்!
செக்யூரிடி கதவை தட்டி "யாரோ ஒருவர் உங்களை பார்க்கணும்னு சொல்றார், பெயர் கேட்டேன், உங்க நண்பர் சம்பத்குமாரின் மகன்னு சொன்னாரு....."
"சரி, வரச் சொல்!"
கங்காதரனுக்கு சம்பத் குமார் நெடுநாளைய நண்பர்! அவருக்கு கோமதியுடனும் பரிச்சயம் உண்டு! ஆனால், சில ஆண்டுகளாக தொடர்பு விட்டுப் போயிருந்தது!
Thank u so much sir😊🙏🏻
Thank you.
Good night 💤