பெரிய வக்கீல்களுக்கு சங்கம் இருக்கு, அரசு அதிகாரிகள் சங்கம் வைச்சிருக்காங்க, பேங்க்ல வேலை செய்யற எல்லாருக்கும் சங்கம் இருக்கு, தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு சங்கம் இருக்கு, ரயில், பஸ்லே வேலை உள்ளவங்களுக்கும் இருக்கு,......... தினக்கூலிகளுக்கும், வீட்டு வேலை செய்யற எங்களுக்கு மட்டும் எங்க குறைகளைத் தீர்த்துவைக்க ஒரு சங்கமும் இல்லே!
அதனாலே நேரடியா உங்களிடமே நியாயம் கேட்க வேண்டியிருக்கு....
உங்களுக்கு கேட்க நேரம், மனம் இருக்கோ, இல்லையோ உங்க காதிலே போட்டுடறேன், அப்புறம் உங்க இஷ்டம்!
இந்த வரானாவோ, கொரோனாவோ வந்தபிறகு மாசக் கணக்கிலே எல்லாரும் வீட்டிலே முடங்கிக் கிடக்க வேண்டியதா போயிடுத்து!
நாங்களா வேலைக்கு வரமாட்டோம்னு சொல்லலே, ஊரடங்கு சட்டத்தினாலே வர முடியலே, அதுக்கு எங்க சம்பளத்தை தரமாட்டேன்னு சொன்னா....
" இதப் பார்! வேலை செய்யாத நாளுக்கு சம்பளம் கேட்கறியே, நியாயமா?"
" ஐயா! சட்டம் போட்டு எங்களை வெளியிலே வரக் கூடாதுன்னு அரசு தடுத்தால், நாங்க எப்படிங்க வேலைக்கு வர்றது?"
" அப்ப, அந்த அரசையே உனக்கு சம்பளம் தரச்சொல்"
"ஐயா! நீங்களே அரசு அதிகாரியா இருந்துகிட்டு, இப்படி பேசலாமா? உங்க சம்பளத்தை, அரசு தர்றாங்க இல்லையா, அதுபோல எங்க சம்பளத்தை நீங்க தரணும் இல்லையா?"
" நீ ரொம்ப சட்டம் பேசறே, வேலைக்கு வர வேண்டாம்......"
"சரி ஐயா! சட்டம் பேச வேண்டாம், மன சாட்சியை தொட்டுச் சொல்லுங்க! வீட்டு வாடகை தரவேண்டாம்னு கோர்ட் சொல்லிடுச்சின்னு வீட்டு வாடகை நீங்க மிச்சம் பண்ணிட்டீங்க, சம்பளத்தை அரசிடமிருந்து முழுசா நீங்க வாங்கிட்டு வீட்டுக்காரனுக்கு நாமத்தை சாத்திட்டீங்க! அவங்க பணக்காரங்க, ஆனா நாங்க ஏழைங்க! என் புருஷன் ஒரு தினக்கூலி! வீடு கட்டற இடத்திலே வேலை! வீடு கட்டுறதை நிறுத்தினதால வேலை இல்லை, கூலியில்லே எனக்கும் சம்பளம் நீங்க தர மாட்டேன்னா, எங்க நிலை என்னாகறதுங்க!
குழந்தை குட்டிங்களோ பசியிலே துடிக்குது, பெரிய மனசு பண்ணி, உதவுங்க!"
" இத பார், இப்ப கெஞ்சிக் கூத்தாடி வேலைலே சேர்ந்தபிறகு, நான் சொல்றதை கேட்கலே, பிறகு....."
" அதெல்லாம் தப்பா நடக்கமாட்டேங்க....!"
" சரி, வீட்டுக்குள்ளே நுழைய, முதல்லே குளித்து விட்டு வா....."
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
How elated am I to find you are so much genuinely moved by the story! Thanks! Have a great day!