(Reading time: 8 - 15 minutes)

 சாவியை வாங்கிக்கிட்டு பாத்ரூமுக்கு ஓடினேன்.

பூட்டைத் திறந்து, உள்ளே போய்ட்டு, பார்த்தால், உட்பக்கம் தாழ்ப்பாள் உடைஞ்சிருக்கு!

 எப்படி குளிப்பது? நான் குளிக்கிறப்ப, எவனாவது நுழைஞ்சிட்டா....

ஓடிப்போய், செக்யூரிடி யிடம் சொன்னேன்.     அவன் என்னைப் பார்த்து பல் இளிச்சிட்டு, " சரி, நீ உள்ளே போய் குளி! நான வெளியிலே நின்னுக்கிட்டு யாரும் உள்ளே வராம கவனிச்சிக்கிறேன்..."

 வேறு வழியில்லாம, பாத்ரூமுக்குள்ளே போய், துணிகளை கழற்றி பையிலே திணித்துவிட்டு, குழாயை திறந்து வாளியிலே தண்ணீர் நிரம்பியதும் குளிக்கலாம்னு காத்திருந்தபோது, " என்னை கூப்பிட்டியா?"ன்னு கேட்டுக் கொண்டு செக்யூரிடி உள்ளே வந்துட்டான், பாவி!

பதறிப் போய் கையாலே உடம்பை மறைச்சிக்கிட்டு அவனை விரட்டினேன். அவன் ரெண்டு நிமிஷம் என்னைப் பார்த்து ரசித்து சிரிக்கிறான், பாவி!

அவமானமாப் போன எரிச்சலோட, சீக்கிரமா குளிச்சிட்டு, மாற்றுத்துணி உடுத்திக்கிட்டு, பழைய துணி யை பையிலே போட்டு, சாவி யை செக்யூரிடியும் கொடுத்த போது என் பையையும் தந்து " இதை வச்சிக்க, நான் திரும்பிப் போறபோது வாங்கிக்கிறேன்" னு தலை நிமிராம பையை நீட்டினேன்.

செக்யூரிடி, பையோட என் கையை பிடிச்சிக்கிட்டு, " நான் யாரிடமும் சொல்ல மாட்டேன், நடந்ததை! தினம் நீ இங்கே குளி, சரியா? அழகா இருக்கே...." என இளித்தான்.

  இந்த வெட்கக்கேடு, தேவையா?

வேலையும் வேண்டாம், அவமானமும் வேண்டாம்னு உதற முடியலியே! பச்சைக் குழந்தைங்க பசியிலே துடிக்குதே, ......கடவுளே! ஏழைங்க இந்த நாட்டிலே வாழவே முடியாதா?

  " யாரும்மா நீ? எங்கே வந்தே?"

 நான் பதில் சொல்லும் முன்பாம, செக்யூரிடியே பதில் சொன்னான்.

" சார்! இவங்க கிரவுண்ட் ஃபிளோர் பி பிளாக் மூணாம் நம்பர் வீட்டு வேலைக்காரி.."

 " எந்த வீடாக இருந்தால் என்ன, ஓனர்கள் சங்க முடிவு எடுத்தாச்சில்லே, வெளியாள் யாரும் இன்னும் ஒரு மாசம் கட்டிடத்துக்குள்ளே நுழையக் கூடாதுன்னு, இவங்களை ஏன் உள்ளே விட்டே? வெளியே அனுப்பு, முதல்லே!"

செக்யூரிடி வேறுவழி தெரியாமல், என்னை விரட்டி னான். நல்லவேளையாக, என்னை வேலைக்கு வரச் சொன்ன மகராசன் அங்கே வந்துவிட்டார்.

 " ஏன் அவளை விரட்டறே, எங்க வீட்லே வேலை செய்ய வந்திருக்கா."

" மிஸ்டர்! என்னைப் பார்த்து பேசுங்க! நான் இந்த கட்டிட ஓனர்கள் சங்கத்தின் தலைவன்.

13 comments

  • Dear Viinoudayan! Good morning!<br />How elated am I to find you are so much genuinely moved by the story! Thanks! Have a great day!
  • Good evening dear Adharva! என் முயற்சிக்கு தங்கள் ஆதரவு உண்டு என எனக்கு தெரியும். இதை தொடர்ந்து, நீங்களும் எழுதி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவோமே!
  • Good evening dear Preethishankar! என்னால் முடிந்தது, அவலங்களை மேல்தட்டு மக்கள் கவனத்துக்கு கொண்டுவருவது. அதைச் செய்ய நீங்கள் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
  • Good evening dear Jeba! எனக்குத் தெரியும். உங்கள் கண்கள் கலங்கும், கதையைப் படித்தவுடன்! எத்தனையோ, கீழ்த்தட்டு மக்கள் படுகிற அவலங்களை சொல்லி மாளாது! படிப்பதோடு நிறுத்தாமல், வாழ்க்கையிலும் சமூகமாற்றம் ஏற்பட பாடுபடுவோம்!
  • Painful uncle oru hme la Vela seiyaravanga ena mari kastam padranganu Nallave puriyuthu Corona time la ipdi evlo per kasta patangalo athu God ku tan teriyum inum girls ku angayum protection ilanu clear ah katirukinga 🙏
  • Touchable story uncle...Kadavulidam daily prathanai seiya vendum... nam kan munnal ipadi irupavarkaluku uthavium seiya vendum.. story padicha ovorutharukulum nichayam oru matram varum super... feeling sad..
  • Kandipa sir. Ivalavu kastapadravungaluku kadavul kan thurantha nalarukum. Namaloda venduthal avungalukagavum irukatum ini😊🙏🏻
  • Dear Dhanu! உங்க தொடரை படித்துவிட்டு, என் கதையை படித்தேன். தங்கள் விமரிசனத்தையும்தான்! இந்தக் கதை நான் எழுதி பல மாதங்களாகிவிட்டன. கொரோனாவின் துவக்கத்திலேயே, எழுதியது! இன்னமும் நிறைய குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்காக இழந்து துயர்ப்படுவதை எண்ணிப் பார்த்து, ஒன்றுகூடி, இறைவனிடம் முறையிடுவோமா?
  • Good morning dear Madhumma!உங்களுக்கு கதை பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை, உங்களின் மனிதாபிமானத்தை உங்கள் விமரிசனங்களின்மூலம், நான் அறிவேன்! நன்றி!
  • Unga story ending la touch vapinga sir. ana itha story starting la irunthe touching ah irunchu sir. Unmaya urukama solitinga. Ipdi valdravunga evlo kastam anupavichutu irukanga. Avungala compare pandrapa kadavul namala entha idathula vachirukaru.ithu therinju neraya per avunga valdra valkaya kutham soldranga. Azhamana karuthu thonda thonda adhigam therium. Really awesome sir. Ur way of thinking very unique.😊
  • :sad: iraiva ethanai per ippadi kashta pattangalo theriyavillai thamizhaga arasuthaan udhavi panna vendum.nallidhayam kondavargal udhavi seivargal.nalla kathai sir. :hatsoff: :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.