(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

  

”இல்லைங்க எனக்கு வேணாம்ங்க” என கெஞ்ச

  

”இது சரிபட்டுவராது, நீ பக்கத்து வீட்லதானே இருக்க நானே தடுப்பூசி போடறவங்களை உன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன், அப்ப என்ன செய்வேன்னு பார்க்கிறேன்” என மிரட்டலாக சொல்லிவிட்டு பால் டம்ளர் எடுக்கச் செல்ல அவனோ தடுத்தான்

  

”உங்களுக்கு பால் இல்லை, எனக்கே ஊசி போடுவேன்னு மிரட்டறீங்களா, ஏதோ நீங்க பாடின பாட்டு கேட்க நல்லாயிருக்கேன்னு இவ்ளோ தூரம் நின்னு பேசினேன் பாருங்க என்னைச் சொல்லனும்” என சொல்லிவிட்டு அவளின் தாயிடம்

  

”அக்கா எனக்கு வேலையிருக்கு நான் கிளம்பறேன்க்கா” என அவசரமாக சொல்லிவிட்டு வேகமாக வெளியேறி செல்ல மலரின் தாய் சந்தியாவோ

  

”மலரு எதுக்குடி இப்படி அவனை ஓடவிடற, பாவம் பயந்துட்டான் பாரு”

  

”என்னம்மா இவன் இப்படியிருக்கான், ஊசிக்கு பயந்தா எப்படிம்மா, இப்ப ஊர் இருக்கற நிலைமைக்கு இவன் இப்படி பயத்தில இருந்தா நோய் வராதா”

  

”ஆமா தடுப்பூசி போட்டாலும்தான் நோய் வரும்னு சொல்றாங்களே”

  

”அது யாருக்கோ, எல்லாருக்கும் கிடையாது, அப்படியே நோய் வந்தாலும் யாரும் இறக்க மாட்டாங்க போதுமா”

  

”என்னவோ போ, தம்பி நல்லா பேசிக்கிட்டு இருந்தது நீ பேசியே அவனை விரட்டிட்ட சரி சரி உனக்கு நேரமாகலையா ஆஸ்பிட்டலுக்கு கிளம்பலை”

  

”இதோம்மா அந்த சரவணனால என் வேலை கெடுது, நான் டிபன் சாப்பிட்டு கிளம்பறேன்” என சொல்லி டிபன் சாப்பிடச் செல்ல சரவணனும் மலரின் மிரட்டலில் சற்று அரண்டிருந்தான், அதனால் அவளுக்காக இருந்த பாலை இவன் குடித்துவிட்டு சாமான்களை இறக்கி வீட்டில்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.