”பிடிக்காதுதான் ஆனா நான் வேலை செய்றது கம்ப்யூட்டர்லதானே, அதுக்குன்னு தனியா ரூம் கொடுப்பாங்கம்மா நீ சொல்லு நான் அந்த வேலைக்குப் போகவா”
”உனக்கு பிடிச்சா தாராளமா செய்” என சொல்ல அவனும் சரியென தலையாட்டினான்.
வேண்டியதை வாங்கிக் கொண்டு இருவரும் வீடு திரும்பினார்கள். மதியம் லன்ச் டைம் எப்போது வரும் என கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் சரவணன், வைதேகியும் அவனின் செயலைக் கண்டு
”என்னப்பா பசிக்குதா பிஸ்கட் சாப்பிடறியா”
”வேணாம்மா”
”பால் காய்ச்சி தரவா”
”வேணாம்மா லன்ச் வேற சாப்பிட போகனும்ல வயிறு காலியாயிருந்தாதானே சாப்பிட முடியும்”
”நேரமாகும் போல இருக்கே”
”பார்த்துக்கலாம்மா” என சொல்ல மலர் வந்தாள்
”ஆன்ட்டி ஆன்ட்டி” என அழைக்க வைதேகிக்கு முன் சரவணன் அவளிடம் சென்றான்
”லன்ச் ரெடியா” என கேட்க அவளோ
”லூசு அதுவா முக்கியம் என்னைப் பாரு நான் எப்படியிருக்கேன்” என கேட்க அவளை ஏற இறங்கப் பார்த்து ரசித்தான்