(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

மறுநாள் காலையில் மலருக்காகவே காத்திருந்தான் சரவணன், மலரும் தனது வீட்டை விட்டு வெளியேறி தனது ஸ்கூட்டியில் ஏறி வெளியே வந்தவள் தனக்காகவே காத்திருந்த சரவணனை கண்டதும் முகம் மலர்ந்தாள் வண்டியுடன் அவனிடம் சென்று நின்றவள்

  

”ரெடியா”

  

”அப்பவே ரெடி நீதான் லேட்டு”

  

”சாரி ஆன்ட்டிகிட்ட சொல்லிட்டல்ல”

  

”சொல்லிட்டேன்”

  

“ஆன்ட்டி என்ன சொன்னாங்க”

  

”என்ன சொல்வாங்க ஆல் த பெஸ்ட்ன்னு சொன்னாங்க, உனக்கு பிடிச்சாலே செய் இல்லைன்னா பரவாயில்லைன்னு சொன்னாங்க”

  

”சரி என்னை பாலோ பண்ணு”

  

”ஓ தாராளமா”

  

”ஏய்ய் வண்டியை பாலோ பண்ணு”

  

”சரி பண்றேன்” என சொல்ல அவளும் முன்னால் செல்ல அவளை பின் தொடர்ந்தான் சரவணன்.

  

அவளது ஆஸ்பிட்டல் வரவும் சரவணனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றவள் நேராக டீனை சந்தித்து டேட்டா என்ட்ரி வேலை பற்றி பேசவும் அவரும் சரியென்றார். அடுத்து அவனை கம்ப்யூட்டர் செக்ஷனில் கொண்டு வந்து விட்டுவிட்டு பார்த்தாள், ஆஸ்பிட்டல் என்றாலே பயப்படுபவன் இப்போது ஆஸ்பிட்டலுக்குள்ளே இருப்பதால் சற்று பயத்தில் இருக்க

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.