அதைக் கண்டவள்
”பயப்படாத இது கம்ப்யூட்டர் செக்ஷன்தான் சரியா, இங்க யாரும் பெரிசா வரமாட்டாங்க, இங்க நீ தாராளமா வேலை செய்யலாம் எந்தப் பிரச்சனையும் வராது”
”மலரு எதுக்கும் அடிக்கடி வந்து என்னை பார்த்துட்டு போறியா”
”கண்டிப்பா வரேன் இப்ப நான் போய் என் வேலையைப் பார்க்கிறேன் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை உன்னை வந்து பார்க்கிறேன் சரியா”
”ம் சரி” என சொல்லியவன் வேலை செய்ய ஆரம்பிக்க அவளும் அவனை நினைத்து பெருமூச்சுவிட்டபடியே தனது வேலையை செய்யச் சென்றாள். சொன்னபடியே ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என அவனை தேடிச் சென்று இரண்டு நிமிடம் பேசினாள். அவளின் ஆதரவு அவனுக்கு தேவைப்பட்டதால் அவனும் அவளுக்காக ஏங்கினான்.
அந்த நாள் முடியவும் இருவரும் பேசியபடியே வீட்டை அடைந்தார்கள். அதே போல அடுத்தடுத்த நாட்களும் அமைந்தது, எந்தக் பிரச்சனையும் இன்றி அவரவர்கள் தங்கள் வேலைகளை செய்துக் கொண்டு இருந்தார்கள், நாட்களும் உருண்டோட சரவணனுக்கும் மலருக்கும் நடுவில் இருந்த காதலும் அதிகமானது, அவர்களின் நெருக்கம் அதிகமானது, ஆஸ்பிட்டலில் அவளுக்கு என தரப்பட்ட தனி அறையில் சரவணனின் அணைப்பில் கட்டுண்டு இருந்தாள் மலர்
”சரவணா விடுடா யாராவது வரப்போறாங்க” என சொல்ல அவனோ அவளை விடாமல் அவளின் கன்னத்தில் முத்தம் வைக்க அவளுக்கு சுகமாக இருந்தது
”ராஸ்கல் டாக்டருக்கே முத்தம் தர்றியா இரு இரு உன்மேல புகார் தரேன்“ என சொல்ல அவனோ சிரித்துவிட்டு சட்டென அவளின் ரோஜா இதழில் அழுத்தமாக முத்தம் வைத்தவன் அவளிடம்
”இதையும் புகார்ல சேர்த்துக்க சரியா” என சொல்ல அவளுக்கு வெட்கமாகிப் போனது அந்நேரம் அவளுக்கு போன் வரவும்