“பார்த்தியா எப்படி பேசறேன்னு எனக்காக உன் வேலையை ஏன் கெடுத்துக்கற, அது தப்பு ஒரு மாசம் சம்பளம் வாங்கிட்டல்ல”
”வாங்கினேன்”
”இந்த மாசம் சம்பளம் வாங்க வேணாமா நீ”
”வாங்கனும் ஆனா“
”இதப்பாரு இந்த மாசம் சம்பளம் வாங்கினா நான் கேட்கறதை நீ வாங்கித் தரனும்”
”சரி தரேன்”
”அப்ப போ போய் வேலையை பார், நான் கேம்ப் வேலையை முடிச்சிட்டு வந்துடறேன் சரியா” என சொல்ல அவனும் அரைமனதுடனே சரியென தலையாட்டிவிட்டு சென்றான்.
மலரும் கேம்ப் செல்வதற்காக தேவையான துணிமணிகளை எடுக்க வீட்டிற்கு வந்தவள் தன் தாய் தந்தையிடம் கேம்ப் பற்றி சொல்ல அவர்களோ
”மலரு உன்கிட்ட ஒரு விசயம் பேசனும்”
”எதுவாயிருந்தாலும் நான் கேம்ப் முடிச்சிட்டு வரேன் அப்புறம் பேசிக்கலாம்”
”இல்லைம்மா இது உன் கல்யாணத்தைப் பத்தின விசயம்“
”கல்யாணமா”
”ஆமாம் எத்தனை நாள்தான் தள்ளிப் போடறது சொல்லு, நல்ல வரன் வந்திருக்கும்மா” என சொல்ல மலரின் முகம் சூம்பிப் போனது