”மலரு நீ கிளம்பு எல்லாம் கேம்ப் முடிச்சிட்டு வா பேசிக்கலாம்”
”ஒரு முறை சரவணனை கூப்பிட்டு வைச்சிப் பேசுங்களேன்”
”பேசினா நான் சரின்னு சொல்லிடுவேன்னு பயமா இருக்கும்மா, எனக்கு உன் வாழ்க்கை முக்கியம், உனக்கு எந்த குறையும் இருக்க கூடாதுன்னு பார்க்கிறேன்”
”சரவணன் என்னை நல்லா பார்த்துக்குவாருப்பா”
”தெரியும்மா ஆனாலும்” என தயங்க மலரோ நீண்ட பெருமூச்சுவிட்டுவிட்டு
”10 நாள் டைம் இருக்கு நல்லா யோசிங்கப்பா, நீங்க தேடினா டாக்டர்கள் கிடைப்பாங்க ஆனா சரவணன் போல ஒரு நல்லவன், பாசக்காரன் எனக்கு புருசனா கிடைக்க மாட்டான்பா, அதை புரிஞ்சிக்க முயற்சி செய்ங்க நான் கிளம்பறேன்பா” என சொல்லியவள் துணிமணி அடங்கிய பையுடன் வெளியேறினாள்.
அந்நேரம் தன் வீட்டு வாசலில் சரவணனும் தனது பைக்குடன் நின்றிருந்தான்.
”மலரு வா உன்னை நான் ட்ராப் பண்றேன்” என அழைக்க ரவி வந்தார் சரவணனை கண்டு
”தம்பி உனக்கு எதுக்கு இந்த வேலை நீ போப்பா நானே அவளை பார்த்துக்கிறேன்”
”இருக்கட்டும் பரவாயில்லை”
”ஒண்ணும் தேவையில்லை நீ கிளம்பு” என வெறுப்பாக பேசிவிட சரவணன் யோசித்தான். மலரோ தன் தந்தையிடம்
”அப்பா ஏன்பா இப்படி பேசறீங்க”